To get pregnant

Hello friends yenakku marriage aagi 5 month aagudhu kulanthaikku try pannittu irrukkom but idhuvara conceive aagala
last month laerundhu folic acid tablet saaptu varaen
Naan Dubai la Rasal kaimala irrukkaen ooruku pudhusu Dr Inga yaara paaka nu theriyala Dubai friends yaaracham therinja sollunga pa
Naan visiting la than vandhurukaan indha two month la naan conceive aagala na naan yen husband da one year kku aapram than meet panna mudium
Kuzhandha illaya nu relative yellam kaettu kaettu romba kashtta paduthuraanga
Kozhandha vaenum nu than naan yen husband comple panni Dubai vandhaen
So gynocologst Rasal kaimala irrudha sollunga pls

Avangaluku insurance Illa pa, thanks for ur replay.

B. Radha

ஒரு பிரச்சினையும் இராது ராதா. இருந்திருந்தால் டாக்டரே சொல்லியிருப்பாங்க‌ இல்லையா? யோசிக்காதீங்க‌.

‍- இமா க்றிஸ்

//kozhandhaiya pathi think pannatha yellam thana nadakkum nu alachiyama sollurar// அதற்குப் பெயர் அலட்சியம் அல்ல‌. விடயம் தெரிந்த‌ தன்மை. நானும் சொன்னேன்; இங்கு சகோதரி ஒருவரும் அதையே சொன்னார். உங்கள் கணவருக்கு இது இயல்பு என்கிறது புரிகிறது. அவர் பணத்தை மிச்சம் பிடிக்கவென்று சிகிச்சை வேண்டாம் எனவில்லை. காரணத்தோடு தான் சொல்கிறார். கர்ப்பமாவது... இன்ஸ்டண்ட் தோசை, இட்லி சுடுவது போல‌ அல்ல‌ நினைத்தவுடன் நடப்பதற்கு. சிகிச்சையால் மட்டும் கருத்தரிப்பது என்பது இல்லை.

நீங்கள் இத்தனை சீக்கிரம் கர்ப்பத்தைப் பற்றி அதிகம் டென்ஷனாக‌ இருக்கிறீர்கள் என்றால்... மனதளவில் நீங்கள் கர்ப்பத்திற்குத் தயாராக‌ இல்லை என்றும் கொள்ளலாம். அமைதியாக‌ இருக்கப் பாருங்கள். இதைப் பற்றி நினைக்காமல் உங்கள் துபாய் வாழ்க்கையை ரசியுங்கள். உங்கள் கணவரே கவலைப்பட‌ வேண்டாம் எனும் போது... யார் கேட்டாலும் உங்களுக்கு ஆதரவாகப் பேச‌ ஒருவர் இருக்கிறார் என்கிற‌ தைரியம் வர‌ வேண்டாமா?

//yendha alavukku depression na irrukkawn nu avarukku puriyala// புரிகிறது என்பதால்தான் இப்படிச் சொல்லியிருக்க‌ வேண்டும் கண்ணா. நீங்கள் சிகிச்சை ஆரம்பிப்பதாக‌ இருந்தாலும் ஒன்றரை மாதங்களுள் மாற்றத்தை சடுதியாக‌ எதிர்பார்க்க‌ முடியாது. 'சிகிச்சைக்குப் பிறகும் கருத்தரிக்கவில்லை,' & 'இத்தனை பணம் செலவளித்தும் கருத்தரிக்கவில்லை,' &... 'உதயகுமாருக்கு சிரமத்தைக் கொடுக்கிறேன்; பெரும் பாரமாக‌ இருக்கிறேன்,' என்றெல்லாம் உங்கள் மனம் இன்னும் அதிகம் அங்கலாய்க்கும். :‍) உங்களை அறிந்து உங்கள் நலனுக்காகத் தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்.

நீங்களாகவே கவலைகளை அதிகப் படுத்திக் கொள்ள‌ வேண்டுமா? பிறகு இந்தியா திரும்பும் போது சிகிச்சையை இடையில் நிறுத்த‌ வேண்டும் அல்லவா? உங்கள் உடல் சுழற்சி வட்டத்தைக் குழப்புவதாகவும் சிகிச்சை அமையலாம். டிப்ரெஷன் கூட‌ கர்ப்பத்தைத் தாமதப்படுத்தலாம். மனதை இலகுவாக‌ வைத்திருக்கப் பாருங்கள்.

//thanimaila ukandhu azhuthuttu irrukkaen// இது தேவையில்லா விடயம். நீங்களாக‌ உங்களை வருத்திக் கொள்கிறீர்கள். //yenakku yenna pandradhu nae thereyala// தனிமையைத் தவிருங்கள். மனதிற்கு சிந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் எப்பொழுதும் ஏதாவது காரியமாக‌ இருங்கள்.

//life la romba kashtta pattitaen ipovum kashttam na// கஷ்டப்படாதவர்கள் உலகில் வெகு சொற்பப் பேர்தான். இப்போ உங்களுக்கு இருக்கிற‌ கஷ்டம், 'நீங்கள்' தான். வேறு எதுவும் இல்லை. நீங்களாக‌ உங்களை வருத்திக் கொள்கிறீர்கள். உங்கள் மனதைச் சந்தோஷமாக‌ இருக்க‌ விட‌ மாட்டேன் என்று இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறீர்கள். //yennala thaangikka mudiyala// எதை! உங்களுக்கு துக்கமான‌ விடயம் எதுவும் ஆகவில்லை. நீங்கள் நன்றாக‌, ஆரோக்கியமாக‌ இருக்கிறீர்கள். நல்ல‌ மனிதர் கணவராகக் கிடைத்திருக்கிறார். இவற்றில் எது துக்கத்திற்குரிய‌ விடயம் என்கிறீர்கள்? இரண்டும் இல்லை.

//yenakku life la nadandha oraey nalla vishayam Udayakumar maadhiri oru nalla paiyan yenakku husband da kidachadhu// 'ஒரே' என்கிறீர்கள். :‍) இரண்டாவது நல்ல‌ விடயமாக‌... நீங்கள் எதிலும் சந்தோஷத்தைத் தேடுபவராக‌ மாறுங்கள். (டயரி எழுதுவீங்களா? இல்லாட்டா ஒரு நோட் எடுத்துக்கங்க‌. டெய்லி தூங்கப் போக‌ முன், அன்று காலையிலிருந்து உங்களுக்கு நடந்த‌, நீங்கள் கடந்து வந்த‌ நல்ல‌ விடயங்கள், நீங்கள் ர‌சித்தவை, உங்கள் முகத்தில் சிரிப்பு / புன்முறுவல் கொண்டுவந்த‌ விடயங்கள் எல்லாவற்றையும் எழுதுங்கள். இதற்கு அரைமணி நேரம், ஏன் ஒரு மணி நேரம் கூட‌ எடுத்துக் கொள்ளலாம். இரவில் நேரம் அமையாது என்று தோன்றினால், உங்களுக்குத் தனிமை கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பதிலும் எழுதலாம். விபரமாக‌ எழுத‌ வேண்டும். இது க்ராடிட்யூட் டயரி, அதனால் துயரமான‌ ஒரு சின்ன‌ விடயம் கூட‌ அந்த‌ டயரில் பதிவாகக் கூடாது என்பது முக்கியம். இது என் அன்பான‌... கண்டிப்பான‌ கட்டளை என்று வைத்துக் கொள்ளுங்கள். நாளை இங்கு வந்து சொல்லுங்கள், 'டயரி எழுத‌ ஆரம்பித்தாயிற்று,' என்று. ஆவலோடு வந்து பார்ப்பேன். ஏமாற்ற‌ வேண்டாம்.)
பிறகு மூன்றாவது நான்காவது நல்ல‌ விடயங்கள் எல்லாம் தன்னால், ஆனால் அதனதன் காலத்தில் சரியாக‌ வந்து அமையும்.

//avarukku naan baarama irrundhuda koodadhu nu ninakkuraen// இது என்ன‌ எண்ணம்! கணவருக்கு மனைவியோ மனைவிக்குக் கணவரோ பாரம் கிடையாது. இன்பத்திலும் துன்பத்திலும் சம‌ பங்கு எடுத்துக் கொள்வதாக‌ எண்ணித் தான் திருமணம் செய்வது. இருவரும் சமம். யாரும் யாருக்கும் பாரமில்லை. வேண்டாத‌ எண்ணங்களைத் தூரப் போடுங்கள். உங்களுக்குக் குழந்தை கிடைக்கவே கிடைக்காது என்றும் யாரும் சொல்லவில்லை அல்லவா? சந்தோஷமாக‌ இருங்கள். உங்கள் கணவருக்கு ஜுரம் வந்து படுக்கையிலிருந்தால் உங்களுக்கு அவர் பாரம் என்றா நினைப்பீர்கள்!

சந்தோஷமாக‌ இருங்க‌.

//pls pray for me to get a child// நிச்சயம் உங்களுக்காகப் பிராத்திப்பேன். என் பிரார்த்தனைகள் கொஞ்சம் வித்தியாசமான‌ ர‌கம். :‍) என் அத்தையிலிருந்து எனக்குத் தொற்றிய பழக்கம் இது. எப்பொழுதும்... 'எதை எப்பொழுது நடத்துவது நல்லது என்பது உமக்குத் தெரியும். இது உமக்குச் சித்தமாக‌ இருந்தால், குறிப்பிட்ட‌ நபருக்கு நன்மையாக‌ இருக்குமானால் மட்டும் கொடும் ஆண்டவரே!' என்றுதான் கேட்பது வழக்கம். நிச்சயம் தினமும் பிரார்த்தனையில் உங்களை நினவு கூருவேன் அன்பு.

‍- இமா க்றிஸ்

உங்களால் எனக்கு ஓர் உதவி ஆக‌ வேண்டும் அன்பு. நான் துபாய்க்கு ஒரு மாதம் குடும்பத்தோடு விடுமுறைக்குப் போகலாம் என்று இருக்கிறேன். அங்கு பார்க்கக் கூடிய‌ இடங்கள் என்னென்ன‌ இருக்கின்றன‌ என்று சொல்ல‌ முடியுமா? எனக்கு தோட்டக்கலை, மியூசியங்கள், சித்திரக்கலை பிடிக்கும். நீங்கள் போன‌ இடங்களைப் பற்றி ஒவ்வொன்றாக‌ விரிவாகச் சொல்லி உதவ‌ முடியுமா? கொஞ்சம் ஷாப்பிங் செய்யவும் இருக்கிறது. எங்கே இந்திய‌ ஆடைகள் நன்றாக‌ இருக்கும்?

இந்த‌ த்ரெட்டிலேயே எழுதுங்கள். உதவிக்கு இப்போதே நன்றி.

அன்புடன்.... அவ்வ்!! ம்...
அன்புடன் அன்புக்கு... ;)))
இமா

‍- இமா க்றிஸ்

Ungal karuthu miga aarudhalaaga ulladhu diary ezhudha aarambithu vittaen

Sorry imma amma naanum dubai kku pudhidhu naan dubai vittu sattruvelil vasikkuraen naan irruppadhu dubai il oru pagudhi

Hi sisters,
Sikiram pregnant aganum enaku regular period than bt intha month madum 2 times period vanthudu innaiku 5th day next nan ena pananum

ungaluku intha link uthavum
http://www.arusuvai.com/tamil/node/27790

I Love my baby Livyalakshana

மேலும் சில பதிவுகள்