2 month pregnant

Hi frnds pregnant ah irukaravanga kulanthai ah thokumpothu
Kulanthai loose motion pona pen kulanthai , normal ah
Pona Aan kulanthai nu solranga, intha mathiri kulanthai ah
Thokumpothu pen kulanthai and Aan kulanthai correct ah
Poranthuruka frnds ungaluku intha anubavam
Iruka,village side ipadi than solranga

நீங்கள் சொல்வது புரிய வில்லை .தெளிவாக சொல்லவும் .இரண்டாவது கர்பமாக இருந்தால் முதல் குழந்தைக்கு ஏக்கம் வரும் இதனால் குழந்தை உடல் மெலியும் .முதல் குழந்தைக்கு மூன்று வயதுக்கு குறைவாக இருந்தால் வயிற்று போக்கு ஏற்படும் .இதுவும் கிராமத்தில் குழந்தை உடல் மெலிந்து போனால் பிறக்க போவது ஆண் குழந்தை என்பார்கள் .முதல் குழந்தை தாய் பால் அருந்தினால் வயிற்று போக்கு ஏற்படும்

Nenga solvathu correct, but en paiyan sila time alaran
Atha enala paka mudila nan milk koduthathuku
Apram than srikaran,maximum nanga maatu Paal than
Kodukarom, 2 days ah loose motion poitu irunthathu
Today ila, enaku ena panra thunu therila, ELARUM Thai
Paal kodukathunu solranga, motion problem varum
Weight kuraiumnu, IPO 6 month en paiyan ku , IPO
Feel panra en thirumba conceive anan,

முதல் குழந்தை 6 மாதம் ஆகிறது என்கிறீர்கள் ? அதற்குள் இன்னொரு கர்பம் .எல்லாம் நன்மைக்கே .முதலில் தாய்ப்பால் நிறுத்தவும் .மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வரவும். எனக்கும் முதல் இரண்டு குழந்தைகள் இடைவெளி குறைவு தான் ஆனால் 10 மாதம் .இதனால் தான் குழந்தை பெற்று 5 மாதம் தாய் வீட்டில இருக்க சொல்றகா .பச்சை உடம்பு உங்களுக்கு கவனமாக இருக்கவும்.

//இதனால் தான் குழந்தை பெற்று 5 மாதம் தாய் வீட்டில இருக்க சொல்றகா// ஆகா! :‍) அந்தக் காலத்து சுலபமான‌ குடும்பக் கட்டுபாடு முறை! பாருங்கள், அப்போதைய‌ பெண்மணிகளுக்கு பாலூட்டும் போதும் கர்ப்பமாகலாம் என்பது தெரிந்திருக்கிறது.

//intha mathiri kulanthai ah Thokumpothu pen kulanthai and Aan kulanthai correct ah// இல்லை. அது எப்படி சரியாக‌ இருக்க‌ முடியும்? நீங்களே யோசித்துப் பாருங்கள். தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தை இடது பக்கம் தெரியும், வலது பகம் தெரியும், வயிறு வட்டமாக‌ இருக்கும் ஓவலாக‌ இருக்கும் என்று சொல்வது வேறு. இது முற்றிலும் வெளியே நடக்கும் விடயம். வெளியே இருக்கும் குழந்தைக்கு ஏதாவது மாஜிகல் பவர் இருக்கும் என்று நினைக்கிறீர்களா காயத்ரி?

தாய் கர்ப்பமில்லாதிருக்கும் போது குழந்தைக்கு லூஸ் மோஷன் போகிறது இல்லையா? அது போல‌ தான் இதுவும். எமக்கும் தான் சில‌ சமயம் லூஸ் மோஷம் ஆகிறது; பல‌ சமயம் நார்மலாக‌ இருக்கிறோம்.

ஸ்கான் பார்த்துச் சொல்கிறதே சில‌ சமயம் பால் மாறிக் குழந்தை பிறந்துவிடுகிறது. அது சரி... யாரும் தப்பாக‌ எடுக்காதீர்கள். இந்த‌ நிமிடம் என் மனதில் ஓடும் சீரியசான‌ சிந்தனை இது. இருபால் உறுப்புகளோடும் குழந்தைகள் பிறக்கின்றன‌; சில‌ குழந்தைகள் வளர்ந்து, தம் உண்மை நிலை உணர்ந்து பால் மாற்று சிகிச்சைக்குப் போகிறார்கள். இவர்கள் தமக்கை, தமயன்மார் சமிபாட்டுத் தொகுதி, தாய்க்கு இதைக் காட்டிக் கொடுத்திருக்குமா? இருந்தால், எப்படி?

கிடைக்கும் குழந்தையை அழகாக‌, கவனமாக‌ வளர்ப்பது தாயின் கடமை. இதில் ஆண், பெண் அல்லது வேறு எந்தவிதமாகக் குழந்தை பிறந்தாலும் பிறந்த‌ பின்னால் அவர்களுக்கு ஆதரவாக‌ அரவணைப்பாக‌ இருப்பவள் தான் தாய். வயிற்றில் இருப்பது என்ன‌ குழந்தை என்று ஆராய‌ வேண்டாம். குழந்தை கிடைத்திருக்கிறதையிட்டு சந்தோஷமாக‌ இருங்கள்.

ஸ்வாதி அனுபவஸ்தர். ஒரே சமயம் இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பது சிரமம் இல்லையென்பது தெரிந்தவர் சொல்கிறார். கேளுங்கள். நீங்கள் பாலூட்டுவதை இப்போதே நிறுத்துவது ‍‍_ உங்களுக்கும் வயிற்றிலுள்ள‌ குழந்தைக்கும் நலமென்பதற்காக‌ மட்டும் சொல்லவில்லை. சில‌ மாதங்கள் கழித்து நிறுத்துவதானால், அப்போது நீங்கள் இன்னும் அலுத்துக்கொள்ளும் நிலையில் உங்கள் உடல்நிலை இருக்கலாம். அப்போ போய் பாலை நிறுத்த‌ குழந்தை அடம் பிடித்து அழ‌... உங்களுக்குக் கோபம் வரலாம்; ஸ்ட்ரெஸ்ட் ஆக‌ இருக்கும். நிறுத்துவதற்கு இது நல்ல‌ சமயம். மாற்றங்களால் குழந்தைக்கு வயிற்றோட்டம் வரலாம். அது பெரிய‌ பிரச்சினை இல்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் வருவது தான். திட‌ உணவு கொடுக்க‌ ஆரம்பிக்கும் போதும் இப்படி ஆவது உண்டு.

‍- இமா க்றிஸ்

உங்க கருத்து அத்தனையும் பொக்கிஷம்...எனக்காக எழுதியது போல இருக்கிறது பெண் ஆண் என்ன குழந்தை பிறந்தாலும் சந்தோசமாக ஏற்பேன்

யாருக்கோ போட்ட‌ பதில் உங்களுக்கு உதவிற்று என்றால் சந்தோஷம் தான். :‍)
~~~~~~~~~~
நீண்ட‌ பதிவு. நிறைய‌ எழுத்துப் பிழைகளோடு பதிவிட்டிருக்கிறேன். இனித் திருத்த‌ முடியாது. படிப்பவர்களே திருத்திப் படியுங்கள். :‍)

‍- இமா க்றிஸ்

Thanks swati, doctor kita poitu vanthu message panran

Nan doctor kita inum pogala,poitu vantu reply panran

I am 45 days pregnant now.ipa conceive va irukavanga pesalam vanga ungaloda experience sa

Congrats sis 31st grahnam varudhu evng 5.50 to 9.40 so be careful

மேலும் சில பதிவுகள்