ஸ்பெசல் அரிசி பாயசம்

தேதி: March 4, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீரக சம்பா அரிசி - 1 கைப்பிடி,
பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 2 டம்ளர்,
ஏலக்காய் - 2,
முந்திரி - 10,
பாதாம் - 5,
பிஸ்தா - 5,
சாரை பருப்பு - 2 மேசைக்கரண்டி,
நெய் - 2 ஸ்பூன்.


 

1/2 லிட்டர் பாலில், அரிசியை வேக வைக்கவும்.
குழைய வெந்தவுடன், மத்தால் நன்கு மசித்து விடவும் (அரிசியின் உருவமே தெரியக் கூடாது),
பிறகு அதில் சர்க்கரை, மீதியுள்ள பால் சேர்த்து கொதிக்க விடவும்.
நெய்யில் முந்திரி, பாதாம், பிஸ்தா, சாரை பருப்பு எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயச்த்தில் கொட்டவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து இறக்கவும்.


சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம். கண்டிப்பாக சீரக சம்பா அரிசியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஸ்பெஷல் அரிசி பாயாசம் சூப்பரா இருந்தது மேம்.நான் வெள்ளிக்கிழமையன்று செய்து பூஜைக்காக செய்தேன்.எப்பவுமே செய்வேன் இப்போ உங்கள் குறிப்பை பார்த்து செய்தேன் மேம்.

அன்பு தனு,
இது எங்க வீட்டு ஸ்பெசலாச்சே! நிறைய செய்து ஃபிரிஜ்ஜில் வைத்து சாப்பிடணும் என் பையனுக்கு. பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.