feet burning

Friends. Ennoda patham roma dry a irukku. Patham romba heat a irukku. Erichala irukku.some times hands intha feeling irukku. Ennanu puriyala. Pls help me

எனக்கும் பல‌ வருடங்களுக்கு முன்பு இப்படி இருந்திருக்கிறது. சிரமாக‌ இருக்கும் இல்லையா? அப்போது அதை ஒரு பொருட்டாக‌ எடுத்து மருந்து எடுக்கப் போக‌ நினைக்கவில்லை. வேறு பிரச்சினைகள் இருந்ததால் அதோடு தொடர்பானதாக‌ இருக்கும் என்று நினைத்து வீணாக‌ வேதனையைப் பொறுத்திருக்கிறேன் என்பது இப்போது புரிகிறது. :‍) ஆனால் சில காலம் போக‌ அதை மறந்துவிட்டேன். எப்போது எப்படி நின்றது என்பது நினைவுக்கு வரவில்லை. ஆனால் இன்று யோசித்துப் பார்க்க‌ அப்போதிருந்தே எனக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்திருக்க‌ வேண்டும் என்று தெரிகிறது. மாத்திரை எடுக்க‌ ஆரம்பித்த‌ பிறகு அந்த‌ எரிச்சல் இருந்ததாக‌ நினைவு இல்லை.

உங்களுக்காகத் தேடினேன். சில‌ காரணங்கள் இருக்கின்றன‌. உங்களுக்கு எதனால் வந்திருக்கிறது என்பதை மருத்துவர்தான் சொல்ல‌ முடியும். பொறுக்க‌ முடியாமலிருந்தால் போய்க் காட்டுங்க‌. சிலசமயம் வைட்டமின் மாத்திரைகளோடு சரியாகிவிடும். அல்லாவிட்டாலும் பயப்படுவது போல் எதுவும் இராது. போய்க் காட்டுங்க‌. சிம்பிளான‌ ஒரு விஷயத்திற்காக‌ கஷ்டப்படுவானேன்!

‍- இமா க்றிஸ்

Six months before thyroid tsh mattum eduthan. T3 t4avanga edukkala. Tsh la problem irunthalthan t3 t4 edukka vanduma? enakku puriyala. Tsh mattum en test panninaganu thariyala? feet burning roma disturb a irukku . Net la search pannina sugar, thyroid nu varuthu. Enakku confuse a irukku.last marcha whole body-check panninan. Athila sugar illa. Thyroid tsh mattum parthanga normal. Confuse.

//Tsh la problem irunthalthan t3 t4 edukka vanduma?// தெரியாது. அதிகம் உள்ளே போய் ஆராய‌ விரும்புவதில்லை. கைல‌ ப்ளட் ரிப்போட் வாங்குறது இல்லை. டாக்டர் என்னென்ன‌ எடுத்தாங்க‌ என்கிறது நினைவில்லை.

//feet burning roma disturb a irukku// தெரியும். ;( ஒவ்வொரு தடவை வரும் போதும் ஐஸ்பாக் வைச்சுப் பாருங்க‌, குறையும். //sugar, thyroid// வேறு காரணங்களும் இருக்கு. இவை இரண்டும் தான் காரணமாக‌ இருக்க‌ வேண்டும் என்பது இல்லை.

//last marcha// கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகுதே! இப்போ வித்தியாசம் இருக்கலாம். டாக்டர்ட்ட‌ போய்க் கேளுங்க‌. கேட்காதீங்க‌. ;) இப்போ உள்ள‌ பிரச்சினையைச் சொல்லுங்க‌. அது உங்களை எவ்வளவு சிரமப்படுத்துது என்கிறதைச் சொல்லுங்க‌. அதுவரை... வைட்டமின் B மாத்திரைகள் எடுத்துப் பாருங்கள். வித்தியாசம் தெரியலாம்.

‍- இமா க்றிஸ்

Icepack ninga sonnathu pol try panninan. Konjam paravayilla. Sugar, thyroid irukkumonu payama irukku. Patha vedippu niraya irukku. Vitamin B tablet edukkama E tablet pottan.B tablet try pannaran . Thanks for your advice.

//Sugar, thyroid irukkumonu payama irukku.// இதில் பயப்பட‌ என்ன‌ இருக்கிறது! எது இருக்கிறதோ அதைக் கட்டுப்பாட்டில் வைத்தால் பிரச்சினை கொடுக்காது. இவை கான்சர் போல் பயங்கரமானவை அல்ல‌. இன்று பாதிக்கு மேல் இவை உள்ள‌ மனிதர்கள் தான் சீவிக்கிறோம்.

//Patha vedippu niraya irukku.// (இதற்கும் முன்னையதற்கும் தொடர்பு இராது என்று நினைக்கிறேன்.) க்ரீம் பூசலாம். சுத்தமாக‌ வைத்திருக்கப் பாருங்கள். குதி மூடும்படியான‌ பாத‌ அணிகள் பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும் போது இறந்து போன‌ தோலை (பிய்க்காமல்) தேய்த்து விடுங்கள். இவற்றுக்கென்று உள்ள‌ க்ரீம்கள் (3 வாரம் என்றால் குறைந்தது 5 வாரத்திலாவது) சரியாக்கி விடும். பிறகும் தொடர்ந்து பயன்படுத்தினால் வராமல் இருக்கும். வெறும்காலோடு சூடான‌ தரையில் நடக்க‌ வேண்டாம். திரும்ப‌ வரும்.

//Vitamin B tablet edukkama E tablet pottan.// இரண்டின் பயன்பாடும் முற்றிலும் வேறுவேறு. ஒன்றுக்குப் பதிலாக‌ மற்றதைப் பயன்படுத்துவது வீண் வேலை. E எதனால் பயன்படுத்துகிறீர்கள்? அதையும் எடுங்கள் இதையும் சேர்த்து எடுங்கள்.

//B tablet try pannaran.// நீங்கள் என் மகளாக‌ இருந்தால் எதையும் முயற்சி செய்து பார்க்காமல் டாக்டரிடம் போகச் சொல்வேன். சிரமம் எத்தகையது என்பது தெரியும், அனுபவித்திருக்கிறேன். முயற்சி செய்வதாகச் சொல்கிறீர்கள் என்றால்... உங்களுக்கு இது பெரிய‌ பிரச்சினையாக‌ இல்லையோ!! எடுத்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Nan dr kita poi parkiran. Kastamathan irukku. Veetu velai ellam mudikarppa rest edukkalamnu ninithu dr kita pogala. Enakku illama intha problem mathavangalukku iruntha care eduthu iruppan. Ennoda heatlth nan parkarathilla. Itu wrong than.

மேலும் சில பதிவுகள்