Laparoscopy family planning

எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து ஏழு மாதம் ஆகிறது...family planning பன்னலாம்னு இருக்கேன்... என்னோட doctor Laparoscopy la பன்னலாம்னு சொன்னாங்க..ரொம்ப வலி இருக்காது..ஒரே நாள் ல எப்பவும் போல நார்மலா இருக்கலாம்னு சொன்னாங்க...தோழிகள் யாராவது laparoscopy la family planning செஞ்சு இருக்கீங்களா?plz share ur experience... நான் பயப்படாம பன்னலாமா...plz share ur thoughts

யாரும் பதில் சொல்லவில்லை என்பதால் என் பதில். :‍) பயப்படாமல் பண்ணலாம் என்றுதான் சொல்வேன். குடும்பக் கட்டுப்பாடு என்று அல்லாமல் வேறு ஒரு தேவைக்காக‌ இதே சிகிச்சையை இன்னொரு சத்திரசிகிச்சையின் போது சேர்த்துச் செய்தார்கள். இந்தப் பகுதியில் பிர‌ச்சினை இருக்கவில்லை. //ஒரே நாள் ல எப்பவும் போல நார்மலா இருக்கலாம்னு சொன்னாங்க.// உண்மை என்றே நினைக்கிறேன். அப்படிச் சொன்னதற்காக‌ முக்கியமான‌ காரியங்கள் மறுநாள் இருக்கும் சமயம் பார்த்து சிகிச்சையை வைத்துக் கொள்ள‌ வேண்டாம். தேவைப்பட்டால் ஓய்வு எடுப்பது போல் அடுத்தடுத்த‌ நாட்கள் இருக்கட்டும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா மேம்....நானும் யாராது பதில் போடுவாங்கனு எதிர் பார்த்துட்டே தா இருந்தேன்.. நன்றி....//அப்படிச் சொன்னதற்காக‌ முக்கியமான‌ காரியங்கள் மறுநாள் இருக்கும் சமயம் பார்த்து சிகிச்சையை வைத்துக் கொள்ள‌ வேண்டாம். //கண்டிப்பாக இமா மேம்..என் பொண்ணுக்கு exam முடிந்நதும் செய்யனும்... family planing பண்ணா உடல் எடை அதிகரித்து விடும் னு சொல்றாங்க...உண்மையா??

Hope is necessary in every condition:)

//family planing பண்ணா உடல் எடை அதிகரித்து விடும்// இல்லை.

எடை அதிகரிப்பது மாதவிலக்கு நின்று போன‌ பின்பு. மாதாமாதம் குருதி இழப்பு இல்லை; அதை மீண்டும் இட்டு நிரப்பும் வேலையும் உடலுக்கு இல்லை எனும் போது எடை போடும். முழுவதாக‌ கருப்பை நீக்கப்பட்டால் இப்படி எடை அதிகரிக்கலாம். இந்த‌ இரண்டிலும் கூட‌ நிலமையைப் புரிந்து ஆரம்பத்திலிருந்து சற்று உணவையும் கவனித்து உற்சாகமாக‌ ஓடியாடி வேலை செய்தால் ஆகாமல் தவிர்க்கலாம்.

நீங்கள் குறிப்பிடுக் கேட்ட‌ சிகிச்சையில் மாதவிலக்கு ஆவது தடைப்படுவது இல்லை.

ஹோர்மோன் மாத்திரைகளை எடுக்கும் சமயம் சிலருக்கு எடை அதிகரிக்கக் கூடும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா..பதிவிட்டடமைக்கு நன்றி

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்