heart beat illai - 34039 | அறுசுவை மன்றம்
forum image
heart beat illai

hi friends.,
enakku marriage aaki 4 months aachu., after mrg period thalli ponathunala check panapa na conceive ah irukanu conform aachu.. elarum romba happy. but after 55 days la scan pananum sonanga, enaku scan panapa baby heart beat ilai abort paniralam solitanga.. romba kastama pochu.. naraya perku intha prob recent ah iruku sonathunala na extra 10 days wait pani pakrean sonen docters um ok sonanga apd wait panium no use again scan panapa apaum heartbeat ila solitanga.. athuk apro abort panitanga. ipo amma veetla bed rest la iruken. ithula last week enaku chicken pox vanthruchu.. ena panrathu therila.. doc advice 2 months contact veka vendam sonanga.. ipo chicken pox vanthathunala nxt 2 months aftr contact vechukta prob ilaya.. again conceive aaga bayama iruku.. :( please help me..
na inaiku tha intha website pudhusu.. 1st time enakaga ketrukean frnds.. enoda typing la mistake iruntha im very sorry..


Hi shabana....

Hi shabana....onum payapada venam...//doc advice 2 months contact veka vendam sonanga.. //unga udambu epdy iruku nu poruthu try panuga....free a irunga..ipothane marriage agiruku...baby ku try panama free a happy a irunga.....

Hope is necessary in every condition:)

ஷபனா அன்சார்

//ipo amma veetla bed rest la iruken.// முதலாவது விடயத்திற்கு... 'பெட் ரெஸ்ட்' அவசியமாக‌ இருந்திராது. நீங்கள் வ‌ழக்கம் போல் தினமும் செய்யும் வேலைகளைப் பார்த்திருக்கலாம்.

//last week enaku chicken pox vanthruchu.// இதற்கு ஓய்வு அவசியம் தான். காய்ச்சல் இருந்தால் ஆஸ்ப்ரின் / பனடோல் எடுங்கள். கொப்புளங்களுக்கு காலமைன் லோஷன் போடலாம். அழுத்தித் துடைக்க‌ வேண்டாம். உடைக்கவோ உரிக்க‌ வேண்டாம். தானாகக் காய‌ விடுங்கள். சுத்தமாக‌ இருங்கள். அரிப்பு இருந்தால் ஆன்டிஹிஸ்டமைன் எடுத்தால் குறையும். மற்றவர்களுக்கு நோயைக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை சுத்தமாக‌ வைத்திருங்கள்.

//ena panrathu therila.// நீங்கள் பயப்படுபவராக‌ இருக்கிறீர்கள். உங்கள் டாக்டரிடம் இதற்கான‌ ஆலோசனையைப் பெற்றால் மனநிம்மதியோடு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

//doc advice 2 months contact veka vendam sonanga.// நீங்கள் சொல்வது தெளிவாக‌ இல்லை. நீங்கள் சிக்கின்பொக்ஸ் வந்த‌ பின் டாக்டரிடம் போனீர்களா அல்லவா? அந்தச் சமயம் சொன்னார்களா அல்லது அபார்ஷனின் போது சொன்னார்களா என்பது புரியவில்லை. இரண்டில் எதுவாக‌ இருந்தாலும் அவர்கள் சொற்படி கேட்பது நல்லது.

//ipo chicken pox vanthathunala nxt 2 months aftr contact vechukta prob ilaya.//
மீண்டும்.... உங்கள் கேள்வி என்னவென்று தெளிவாகக் கேட்கவில்லை நீங்கள். உங்கள் கணவருக்கு வரும் என்கிற‌ பயமா? காயங்கள் காய்ந்து உதிர்ந்து 2 மாதங்களின் பின் உங்கள் கணவருக்குத் தொற்றாது. இரண்டு மாதத்தின் பின் கர்ப்பமாவது பற்றிக் கேட்கிறீர்கள் என்றால்... உண்மையில் டாக்டர் சொன்ன‌ அந்த‌ இரண்டு மாதங்கள் சேர்ந்திருக்கக் கூடாது என்பதாகச் சொல்லியிருக்க‌ மாட்டார். கர்ப்பம் வேண்டாம் என்று சொல்லியிருக்க‌ வேண்டும் என்று நினைக்கிறேன். சரிதானே! கர்ப்பத் தடை முறைகளைப் பயன்படுத்தி கருத்தரிக்காமல் பாதுகாப்பாக‌ உறவு வைத்துக் கொள்ளலாம்.

சிக்கின்பாக்ஸ் உங்கள் கப்பப்பையை எந்தவிதத்திலும் பாதித்திராது. அது நன்றாகவே இருக்கும்.

சிக்கின்பொக்ஸ் வந்த‌ இரண்டு மாதம் கழித்து கருத்தரிப்பதால் (அப்போ முயற்சியை ஆரம்பித்தால் இன்னொரு மாதம் கழித்துத் தான் கர்ப்பம் என்பது தெரிய‌ வரும்.) குழந்தைக்குப் பிரச்சினை எதுவும் வராது. உங்களுக்குப் பயமாக‌ இருந்தால், கூடுதலாக‌ இன்னொரு மாதம் கர்ப்பத்தடை முறை ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துங்கள். கர்ப்ப‌ காலம் சந்தோஷமாக‌ இருக்க‌ வேண்டிய‌ காலம். ஆரம்பமே பயத்தோடு ஆரம்பித்தால் பிரசவம் வரை பயம் தொடரும். தொட்டதெற்கெல்லாம் மனம் சஞ்சலப்படும். அந்த‌ மனநிலை உங்களுக்கும் நல்லதல்ல‌; குழந்தைக்கும் நல்லதல்ல‌.

//again conceive aaga bayama iruku.// பயப்பட‌ வேண்டாம். இப்போ நீங்கள் கர்ப்பமாக‌ இருந்திருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா என்பது பற்றி யோசிக்க‌ வேண்டி இருந்திருக்கும். அதிர்ஷடவசமாக‌ அந்த‌ நிலை இல்லை. இனிமேல் கர்ப்பமாவதனால் குழந்தைக்குப் பிரச்சினை இராது.

உங்கள் தழும்புகள் ஆறி நீங்கள் பூரண‌ குணமாகும் வரை கர்ப்பமாகாதிருந்தால் குழந்தையின் ஆரோக்கியம் பற்றிய‌ கவலை இல்லாமல் இருக்கலாம்.

(நாட் கணக்குகள் தெரியாமல் பொத்தாம் பொதுவில் பதில் சொல்லியிருக்கிறேன். ஏதாவது சந்தேகமிருந்தால் கேளுங்கள். இனி ஏதாவது கேள்வி இருந்தால் மாதம் தேதிகளைக் குறிப்பிட்டால் பதில் சொல்ல‌ உதவியாக‌ இருக்கும்.)

இப்போ நீங்கள் கவனம் செலுத்த‌ வேண்டியது உங்கள் உடல்நிலையில் மட்டும்தான். தழும்புகள் பெண்களுக்கு அழகில்லை. தன்னால் காயட்டும். பிறகு ஆலிவ் ஆயில் பூசி வர‌ அடையாளம் குறையும். ஒரு தடவை கர்ப்பமானதால் யாரும் உங்களைக் கேள்வி கேட்டுத் துளைக்க‌ மாட்டார்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். சந்தோஷமாக‌ இருங்கள்.

அன்புடன்

imma

romba nanri maa.. enoda doubt clear airuchu.. treatment panathunalaa doctor 2 months contact vendam sonanga.. chicken pox vanthu enaku last 2 weeks airuchu. chicken pox ku doctor ah paakala home treatment eduthen.. ipo dots matum iruku.. 2 days ah neem + turmeric mix panni apply panitu iruken.. chicken pox vanthathunala after contact vekarapa my husband ku paravuma nu doubt irunthuchu apro concieve aana baby ku problem aaguma doubt irunthuchu ma..

reka

romba thanks sis..

அட்மின் அண்ணா நன்றி

குழந்தைக்கு எதனால் heart beat இல்லாமல் போது. மறுபடியும் அப்படி பிரச்சனை வராமல் தடுக்க என்ன‌ செய்யனும்.

அட்மின் அண்ணா?!

அட்மின் அண்ணாவிற்கு நன்றி எதற்கு என்று புரியவில்லை?!! :-)
தங்களுக்கு பதில் கொடுத்தவர்கள் இமாவும் மற்றொரு சகோதரியும். உங்களது இந்த கேள்விக்கும் அவர்களே பதில் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன். :-)

ஷபனா

//neem + turmeric mix panni// இவை மிகவும் நல்ல‌ கிருமிநாசினிகள்.

//contact vekarapa my husband ku paravuma nu doubt// நோய் ப‌ரவுவதற்கு எந்தக் காரியமும் ஆக‌ வேண்டியதில்லை. 'உங்கள் வீட்டில் வசிக்கிறார்,' என்கிற‌ காரணம் ஒன்றே போதும். காற்றிலிருந்தே தொற்றலாம்.

//concieve aana baby ku problem aaguma// உங்களுக்கு முற்றாகக் குணமானதன் பின்னால் முன்னெச்சரிக்கைக்காக‌ ஒரு மூன்று வாரங்கள் கழித்து கர்ப்பமாவது பாதுகாப்பு.

அட்மின் அண்ணா & ஷபனா

//உங்களது இந்த கேள்விக்கும் அவர்களே பதில் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன். :-)// :‍) அட்மின் அண்ணாவிடம்தானே கேட்டாங்க‌ என்று பதில் சொல்லாமல் தூங்கப் போய்ரலாம் என்று நினைத்திருந்தேன். :‍))
~~~~

@ ஷபனா,

//எதனால் heart beat இல்லாமல் போன‌து.// இன்னதுதான் காரணம் என்று சொல்ல‌ முடியாது. உருவாகும் அனைத்துக் கருக்களும் முழுமையாக‌ வளர்வது கிடையாது. 'முன்பெல்லாம் இப்படி இல்லை, இப்போ அதிகமாக‌ இருக்கிறது,' என்பது போல‌ தோன்றலாம். முன்பு இப்படி வீட்டிலேயே பரிசோதித்துப் பார்க்கும் வசதி இருக்கவில்லை. ஒரு நாள் தாமதித்தாலும் கர்ப்பம் என்னும் எண்ணம் பெண்கள் மனதில் இருக்கவில்லை. ஸ்கான் பண்ணிப் பார்க்கும் வசதியும் இருக்கவில்லை.

//மறுபடியும் அப்படி பிரச்சனை வராமல் தடுக்க என்ன‌ செய்யனும்.// டாக்டர் சொல்வதைக் கேளுங்கள். எத்தனை மாதம் கழித்து மீண்டும் கர்ப்பமாகலாம் என்பதை அவர்களிடம் கேட்டுக் கொள்வது நல்லது. வேறு ஏதாவது விசேடமாகக் கவனிக்க‌ வேண்டியது இருந்தாலும் அவர்களே சொல்வார்கள். நீங்கள் செய்யக் கூடியது, அமைதியாக‌ சந்தோஷமாக‌ இருப்பது. ஒழுங்காக‌ நல்ல‌ உணவாகச் சாப்பிடுங்கள். ஆக்டிவாக‌ இருங்கள். எதை உண்டாலும் எதைச் செய்தாலும் அளவோடு இருக்கட்டும்.

imma amma & admin

ரொம்ப‌ நன்றி மா.. நான் கன்டிப்பா உங்க‌ ஆலோசனைப்படி நடந்துப்பேன் மா.
ஒரு புத்துணர்ச்சி வந்தது மாதிரி இருக்கு. @imma ma
admin அண்ணா நீங்க‌ இல்லைனா என்னால‌ இந்த‌ website la help கேட்ருக்க‌ முடியாது.. அதற்காக உங்களுக்கு நன்றி சொன்னேன் :) @admin

Shabana

Shabana...இது தான் காரணம் னு சொல்ல முடியாது... இப்போது நிறைய இது போல கேள்வி பட்டுற்கேன்...ஒவ்வொரு உடம்பு பொறுத்து இருக்கலாம்... உங்களுக்கு HB Level கரெக்டா இருந்ததா....dr கண்டிப்பாக iron and vitamin tablets குடுத்திற்பாங்க...கண்டிப்பாக சாப்பிடுங்க....nalla healthy foods eduthukoga...feeling oda irukama marriage life a nalla enjoy panuga..elam thannale super a kidaikum...all the best...

Hope is necessary in every condition:)