முட்டை மசாலா சாதம்

தேதி: March 5, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

அரிசி - 1/4 கிலோ,
முட்டை - 4,
பெரிய வெங்காயம் -2,
தக்காளி - 3,
பச்சை மிளகாய் -2,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
கறி மசாலா - 1 டீஸ்பூன்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 4 ஸ்பூன்.


 

சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்து வதங்கியதும், எல்லா தூள்களையும், உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறவும்.
கொஞ்சம் தளர இருக்கும் பொழுதே, ஆற வைத்த சாதத்தை போட்டு நன்கு கலந்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அம்மா இன்று இந்த சாதம் செய்தேன். மிக நன்றாக இருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. குறிப்பிற்கு மிக்க நன்றி.

ஜானகி

அன்பு ஜானகி,
நலமா? ரொம்ப பிசியா? பாராட்டுக்கு மிக்க நன்றி. தம்பிக்கு கூட இந்த சாதம் செய்யத் தெரியும். அவ்வளவு சுலபம்.
அன்புடன்

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி இன்றைய லன்சுக்கு முட்டை மசாலா சாதம் தான் செய்தேன் ஏற்கெனவே சாதம் கையிருப்பு இருந்தது ஆகவே மிகவும் விரைவில் சமைத்துவிட்டேன்.ரொம்ப சுவையான ஈஸியான குறிப்பு மிக்க நன்றி, இதனுடன் பீன்ஸ் வெள்ளைக் குருமா நல்ல பொருத்தமாக இருந்தது,நன்றி.

அன்பு தோழி மனோகரி,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி. மிகவும் சுவையாக இருந்தது. எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி

மிஸஸ். குமார்,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

i make ur egg briyani its came very well and very tasty and easy to perpare i like it very much.

EXCITED O BE ALIVE FOR YOU
SREENATH

அன்பு ஸ்ரீநாத்,
அறுசுவைக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!
பாராட்டுக்கு மிக்க நன்றி. என் மகன் சுலபமாக செய்வதற்காக நான் கண்டுபிடித்த குறிப்பு இது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா நலமா? ரொம்ப நாளா உங்கள ஆளையே காணோமே? இப்பதான் உங்க பதிவுகளை பார்க்க முடியுது, ரொம்ப சந்தோசமா இருக்கு....
நேற்று உங்க முட்டை-மசாலா சாதம் செய்தேன்..... ஆஹா டேஸ்ட் சூப்பரா இருந்தது.... ரொம்ப சீக்கிரமா செய்யக்கூடிய ஒரு சுவையான குறிப்பு குடுத்ததற்கு நன்றிமா...... என் ஹஸ் ரொம்பவும் விரும்பி சாப்பிட்டார்.... :)

அநேக அன்புடன்
ஜெயந்தி