About krimson 35 tablet - 34066 | அறுசுவை மன்றம்
forum image
About krimson 35 tablet

Hi sisters, i am charu. Enaku 1 doubt plz sister yarachu theyrinja help pannunga. Enaku marriage aagi 11 month aaguthu. Inum baby illa. Last month scan panom. Pcod irukunu sonanga. Pcod ku krimson 35 tablet thanthanga sister.intha tablet total ah 21 tablets. But na unfortunately ithula 9 tablets than pottan. Aprm Stop panitan sis because na enga amma veetla vachitu vantan. 5 days aaguthu stop panni. Today enaku periods vandhu 18 days aaguthu. Today bleeding aaguthu. Ithu ethanala sis? Payama iruku.


Payapada vendam sis. Antha

Payapada vendam sis. Antha tablet periods regular panrathuku than. 21 tab mudinju 5 days Ku kalithu period akum. Nenga 9 days LA stop panathala sekram akiruchu. Don't worry. But entha tab ellam prescribe panna regular ah edukanum illa na periods cycle change akirum. All the best.

சாரு

//Ithu ethanala sis?// நீங்கள் மாத்திரையை எடுக்காததால் தான் இப்படி ஆனது. 'withdrawal bleeding' என்பார்கள் இதை. நீங்கள் மாத்திரை வழியே எடுத்த‌ ஹோர்மோன் கிடைக்காமல் போக‌, கருப்பை தான் செய்ய‌ வேண்டிய‌ வேலையைச் செய்கிறது. யோசிக்க‌ வேண்டாம்.

நீங்கள் 21 மாத்திரைகளையும் ஒழுங்காக‌ எடுத்திருந்தாலும் அதன் பின் வரும் ஐந்தாம் நாள் மாதவிலக்காகி இருப்பீர்கள். அது போல் தான் இதுவும். பிரச்சினை இல்லை. ஆனால் இன்னொரு தடவை இப்படி மாத்திரைகள் கொடுத்தால் நினைவாக‌ கைப்பையில் போட்டு வையுங்கள். எப்போ எங்கே தங்குவது போல‌ ஆனாலும் கைவசம் மாத்திரை இருக்கும்.

//periods cycle change akirum.// ஆமாம், சகோதரி சொன்னது உண்மை. திரும்ப‌ மாத்திரை எடுப்பதானால், முன்பு எடுக்க‌ ஆரம்பித்தது போல் ஆரம்பித்து 21 மாத்திரைகளையும் எடுத்து முடிக்க‌ வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய மீதி மாத்திரைகளை தொடர வேண்டாம். புதிதாக‌ 21 மாத்திரைகள் உள்ள‌ அட்டை ஒன்றிலிருந்து எடுக்க‌ ஆரம்பித்தால்தான் கணக்கு சரியாக‌ இருக்கும். உங்கள் சுழற்சி இன்றிலிருந்து புதிய‌ தேதியில் ஆரம்பிக்கிறது.

‍- இமா க்றிஸ்

Jeyanthi, imma amma

Romba thanks for ur explaination. Ipo enaku vanthathu periods ah amma? Because bleeding periods aana madhiri illa amma. Kammi ah iruku. Antha tablet yesterday enoda appa va eduthutu vara sonnan amma. Ipo atha continue pannalama vendama amma.

Imma amma

Na conceive aaga chance illaya amma. Thirumba antha 21 days tablet podanuma amma?

Sister nenga kavalai pads

Sister nenga kavalai pads vendam. Kuraintha kala idaivelyil period anathal kuravagave bleeding akum don't worry. Dr consult seithu vitu next dose start panalam. Palaya tab vendam. Kulanthaikaga treatment edupavargal period ana 5 days LA hospital poganum.

சாரு

//Ipo enaku vanthathu periods ah amma?// அனேகமாக‌ அதுதான். // bleeding periods aana madhiri illa amma.// இன்று முதல் நாள் தானே! குறைவாக‌ இருந்தாலும் கூட‌ இது இம்ப்ளாண்ட் ப்ளீடிங் என்று கொள்ள‌ முடியாது. அந்த‌ மாத்திரைகள் கருத்தடுப்பு வேலையையும் செய்யும். நீங்கள் மாத்திரையை விட்டு 5 நாட்கள் ஆகிவிட்டன‌. இது வித்ட்ரோவல் ப்ளீடிங் தான். (மாத்திரையை முதல் வாரத்தில் விட்டிருந்தால் மீதி நாட்களில் சேர்ந்திருந்தால் கர்ப்பமாகியிருக்க‌ சாத்தியம் இருக்கும். 9 நாட்கள் எடுத்திருக்கிறீர்கள். அனேகமாக‌ இம்முறை கர்ப்பமாகி இருக்க‌ முடியாது.)

//Antha tablet yesterday enoda appa va eduthutu vara sonnan amma.// அதை எடுக்க‌ வேண்டாம். //Ipo atha continue pannalama vendama amma.// கன்டினியூ பண்ண‌ முடியாதே இனி! திரும்ப‌ முதலிலிருந்தல்லவா கணக்கு வருகிறது? ஒரு நாள் மிஸ் பண்ணியிருந்தால் பரவாயில்லை. 5 நாட்கள் ஆகிவிட்டன‌. இனித் தொடர‌ முடியாது. புதிய‌ சுழற்சியிலிருந்துதான் ஆரம்பிக்க‌ வேண்டும். (மாத்திரையை ஒரு நாள் மறந்திருந்தால் மறுநாள் இரண்டாக‌ எடுக்கலாம். இரண்டுக்கு மேல் மாத்திரைகளைச் சேர்த்து எடுப்பது... மருத்துவர்கள் வேண்டாம் என்பார்கள்.)

//Na conceive aaga chance illaya amma.// கேள்வி புரியவில்லை. 'இப்போது' ஆகியிருக்க‌ முடியாது. இந்த‌ மாத்திரைகள் எடுக்கும் போது கர்ப்ப‌மாகச் சாத்தியம் இல்லை. (இருந்தாலும் எம் உடற்செயற்பாடுகளைச் சொல்ல‌ முடியாது.) இனி ஆகலாம்.

//Thirumba antha 21 days tablet podanuma amma?// ஆமாம், ஆரம்பித்தால் இடையில் நிறுத்துவது ஒரு தடவை பரவாயில்லை. திரும்பத் திரும்பச் சுழற்சி மாறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு நாள் விட்டால் பரவாயில்லை. மறுநாள் 2 எடுக்கலாம். அதற்காக‌ ஒன்றுவிட்டு ஒருநாள் எடுக்கவெல்லாம் முடியாது. உடலோடு விளையாடக் கூடாது.

//Ipo atha continue pannalama vendama amma.// அந்த‌ அட்டையிலுள்ளதைத் தொடர‌ வேண்டாம். அப்படியல்லாமல், நீங்கள் மீதமுள்ள‌ 10 மாத்திரைகளை எடுத்தால்... பதினைந்தாம் நாள் திரும்ப‌ இப்படி ஆகலாம். மருத்துவர் ஒரு மாதத்திற்கு மட்டும் மாத்திரை கொடுக்க‌ நினைத்திருக்கலாம். திரும்ப‌ ஒரு செட் எடுப்பதா வேண்டாமா என்பதை நீங்கள் அவரிடமே விசாரித்துக் கொள்வது தான் நல்லது.

‍- இமா க்றிஸ்

Jeyanthi sis

Saringa sis. Kuraivana alavu bleeding aanalum iduppu , kaal vali lam periods polavey valikuthu sis. Palaya tablet vitturan sis.

Imma amma

Ungaludaiya pathil enaku theylivana vilagamaga irunthathu amma.
//அந்த‌ அட்டையிலுள்ளதைத் தொடர‌ வேண்டாம். அப்படியல்லாமல், நீங்கள் மீதமுள்ள‌ 10 மாத்திரைகளை எடுத்தால்... பதினைந்தாம் நாள் திரும்ப‌ இப்படி ஆகலாம். மருத்துவர் ஒரு மாதத்திற்கு மட்டும் மாத்திரை கொடுக்க‌ நினைத்திருக்கலாம். திரும்ப‌ ஒரு செட் எடுப்பதா வேண்டாமா என்பதை நீங்கள் அவரிடமே விசாரித்துக் கொள்வது தான் நல்லது.// Saringa amma. Na ipo veli ooril irukiren amma. Doctor idam ketka iyalathu amma.
Antha tablet ah ini edukama vittutran ma. Amma enaku inoru doubt ungaluku theyrinthal sollunga. Intha tablet sinai pai il irunthu sinai muttaigalai vedikka vidamal seithidumam.nan ithai net la parthen amma. Aparam epti ma periods aaguthu. Muttaigal vedipathal thaney periods aagirom.

சாரு

//Muttaigal vedipathal thaney periods aagirom.// இல்லை. கருப்பை, மாதாமாதம் ஒரு முட்டை கருக்கட்டி தன்னுள் வளரும் என்னும் எதிர்பார்ப்பில் தன் உட்புறச் சுவரைத் தயார் செய்யும். முட்டை, விந்துடன் இணைந்து கருக்கட்டி கருப்பையில் பதிந்தால் மாதவிலக்கு ஆகாது. அல்லாவிட்டால், ஏமாந்த‌ கருப்பை தான் தயார் செய்த‌ தன் உட்புறச் சுவரை உதிர்த்துவிடும். அந்தத் திசுக்கள் குருதியுடன் வெளியேறுவது தான் மாதவிடாய். சினை முட்டை வெடித்தால் தான் மாதவிலக்கு ஆகும் என்பதில்லை.

‍- இமா க்றிஸ்

Imma amma

Ipo en doubt clear aagi vittathu amma.