முத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 4

வேற்றுமையில் ஒற்றுமை

தூரங்களால் நாம்
ரெண்டு பட்டாலும்
துயரங்களில் நாம்
ஒன்றுதான் என
காட்டிக்கொடுக்கிறதே
கண்ணீர்த்துளி!

உத்தமன்

செய்யும் தவறுகள்
வெளியே தெரியாமல்
இருக்கும்வரை
நீயும் உத்தமன் தான்!

வட்டி

ஆடுகள் போடும்
குட்டிகள் கூட
உனை வாழவைக்கும்
பணங்கள் போடும்
வட்டிகள்
உனை விழ வைக்கும்!

தமிழா!

கடனில்
தவிக்கும் உழவனின்
கண்ணீரைத் துடைக்க
கடலில் கலக்கும்
தண்ணீரைத் தடு!

கடவுள்

ஆரவாரம் இல்லாமல்
அமைதியாக இருப்பதால்தான்
ஆராதிக்கப்படுகிறார்
கடவுளும் கூட!

Comments

அருமையான‌ கவிதைகள். தொடர்ந்து நிறைய‌ எழுதுங்கள்.

‍- இமா க்றிஸ்

மிக்க மகிழ்ச்சி ,
தொகுப்பினை மிக அழகாக வெளியிட்டமைக்கு என் நன்றிகள் !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

உங்கள் Approved VS motivation கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி !!! கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்ச்சி செய்கிறேன் .
உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

:‍) இதற்கு மேல் கேட்காமலிருந்தால் என் தலை வெடித்துவிடும். ;) ஒரு இடைவெளி விட்டு மூன்று ஆச்சரியக்குறிகள் போட்டால் என்ன‌ அர்த்தம்? தெரிந்துகொள்ள‌ ஆவல். அது தெரியாவிட்டால் உங்கள் கவிதைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள‌ முடியாது என்று தோன்றுகிறது.

மகிழ்ச்சி என்று மூன்று ஆச்சரியக்குறிகள் போட்டால், மகிழ்ச்சியில்லையோவென்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது. நன்றிக்குப் பின்னாலும் மூன்று ஆச்சரியக்குறிகள். அப்போ நன்றி இல்லையா எனக்கு. ;( எதுவோ காரணத்தை வைத்துக் கொண்டுதான் இப்படி எழுதுகிறீர்கள் என்று புரிகிறது. சரியான‌ பதில் கிடைத்தால் அமைதியாக‌ முருங்கை மரம் ஏறிவிடுவேன். :‍)

இன்னும் சந்தேகங்கள் இருக்கின்றன‌. அவ்வப்போது கேட்பேன். பதில் சொல்ல‌ வேண்டும். :‍)

‍- இமா க்றிஸ்

சகோ இமா க்றிஸ் அவர்களுக்கு ,

இலக்கணத்தில் இல்லை, என் புரிதல்களிலிருந்து பதில் , உங்களின் புரிதலுக்காக .

வார்த்தைகள் ஒன்றுதான் என்றாலும் , மகிழ்ச்சிக்கும் , அக மகிழ்ச்சிக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. எல்லா வார்த்தைகளும் வாய்வழி வந்தாலும் , ஒருவரின் கருத்திற்க்கு மதிப்பளிக்கும் வகையில் சில வேறுபாடுகள் அதாவது ,

நன்றி ! என்று ஒரு ஆச்சர்யக்குறி போடுகிறோம், அதற்க்கு பதில் ,
எழுதிவிட்ட கருத்திற்க்கு மேலோட்டமாக பதில் போடுவது...

நன்றி !!! என்ற மூன்று ஆச்சர்யகுறிகள் வரும்போது ,
எழுதிவிட்ட கருத்துக்களை ஆழ்ந்து , ரசித்து, மகிழ்ந்து , உள்வாங்கி பதில் போடுவது ...

ஏதோ... எனக்கு தெரிந்த அளவில் பதில் சொல்கிறேன். கேளுங்கள் ... சில நேரங்களில் வார்த்தைகளின் புரிந்துணர்வு இல்லாமல் பதில் வருமாயின் பொருத்தருளுங்கள்.
நன்றி !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

என் அறிவைப் பெருக்கிக்கொள்ளவே கேட்கிறேன். வேறு நோக்கம் இல்லை.

நீங்கள் மோபைல் ஃபோனைப் பயன்படுத்தி எனக்குப் பதில் தட்டினீர்களா?

‍- இமா க்றிஸ்

புரிதல் : 1
சில நேரம் கம்ப்யூட்டர் ...
மற்றபடி எல்லாம் மொபைல்போன் தான் !
புரிதல் : 2
நேரிடையாக எனக்கு தெரிந்தளவில் பதில் சொல்வேன் , எனக்கு தெரியாத விஷயங்களுக்கு மொபைல்போன், மற்றும் உங்கள் அறிவுரையின் படி நண்பர்கள் .

என்றும் அன்புடன்
முத்தமிழன்

//ஒரு இடைவெளி விட்டு// என்று முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் அவதானிக்கவில்லை என்று நினைக்கிறேன். இப்போது காரணம் புரிந்துவிட்டது. கருத்துகள் பதிவிடும் போது மொபைல்ஃபோன் பரவாயில்லை. கவிதை எழுதும் போது கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால் ஓரளவு சரியாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். (கமாவுக்கு முன் கூட‌ ஸ்பேஸ் பதிவாகி இருக்கிறது.) மொபைலில் திருத்தமாகத் தட்டுவது சிரமம். அதில் படித்துத் திருத்தம் செய்வதும் சிரமம். அந்தக் குட்டித் திரையில் இவையெல்லாம் தெரியவருமா என்பது சந்தேகம்தான். நான் அறுசுவையை மொபைலில் படித்திருந்தால் எனக்கும் எதுவும் கேட்கத் தோன்றியிராது என்று நினைக்கிறேன்.

உங்கள் கவிதைகள் நன்றாக‌ இருக்கின்றன‌. தொடர்ந்து எழுதுங்கள்; முடிந்தால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துங்கள்.

‍- இமா க்றிஸ்

//கம்ப்யூட்டர் ...//
//தான் !//
//சொல்வேன் , எனக்கு//
//நண்பர்கள் .//

//அவர்களுக்கு ,//
//பதில் ,// //புரிதலுக்காக .//
//என்றாலும் , மகிழ்ச்சிக்கும் ,// //வந்தாலும் ,// //அதாவது ,//
//பதில் ,//
//வரும்போது ,//
//ஆழ்ந்து ,// //மகிழ்ந்து ,// //போடுவது ...//
//கேளுங்கள் ... //

தேவயற்ற‌ இடங்களில் 'ஸ்பேஸ் கீ' (தமிழில் எழுதினால் கவனத்திலிருந்து தப்பிப் போகலாம் என்று தமிங்கிலத்தில் தட்டினேன்.) தட்டப்பட்டிருக்கிறது. ஃபோனில் தெரியுமா எனத் தெரியவில்லை. இதைத் தவிர்க்கப் பாருங்கள். தவறு எனவில்லை; படிக்கும் சுவாரசியத்தைக் குறைக்குமல்லவா!

முடிந்தால் ஃபேஸ்புக்கில் எனக்கு ஒரு மெசேஜ் போடுங்கள். மற்றவர்கள் பார்வையில் படாமல் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம். இங்கு என்னதான் அமைதியாகப் பேசினாலும் படிப்பவர்களுக்கு இமா உங்கள் காலை வாருவதாகத் தான் படும். ;)

‍- இமா க்றிஸ்

வணக்கம் குருவே,
கண்டிப்பாக முயற்ச்சி செய்கிறேன். எனக்கு மொபைல்போனில் நீங்கள் குறிப்பிட்ட “ஸ்பேஸ்” தெரியவில்லை. கம்ப்யூட்டரில் படிக்கும்போது, கருத்தின் தாக்கம் குறைந்துவிடும் என்பதை உணர்கிறேன்.இனிவரும் காலங்களில் இதனையும் சரிசெய்ய முயற்ச்சி செய்கிறேன்.
நன்றி !!!

இதில் சரியாக வந்துள்ளதா என்பதனை தெளிவுபடுத்துங்கள்.

என்றும் அன்புடன்
முத்தமிழன்

//குருவே,// அவ்! ;) பிழை பிடிப்பது சுலபம். கற்பனை வளமோ எழுதும் திறனோ தேவையில்லாத‌ வேலை அது. :‍) இதை வைத்து குரு என்பீர்களா! ;) நான் எழுதுவதிலேயே பிழைகள் இருக்கும்.

//இதில் சரியாக வந்துள்ளதா// ;) நிறையவே 'முயற்சி' செய்கிறீர்கள். தேவைக்கு மேலேயே சரியாக‌ வந்துள்ளது. ;) ஒரு இடத்தில் ஸ்பேஸையே காணோம். ;)))

அதிகம் யோசிக்க‌ வேண்டாம். :‍)

‍- இமா க்றிஸ்