சுபிதாவின் ஹைக்கூ சிதறல்கள் - அறுசுவை கவிதை பகுதி - 34076

Kavithai Poonga

சுபிதாவின் ஹைக்கூ சிதறல்கள்

குழாயின் கடைசி துளி நீர்
எனக்கு நீரோடை..
குருவி

யார் கிழித்த
கீறல்கள் இவை?
வானில் மின்னல்கள்

 

நீயும் நானும்
ஏனோ? யாரோ என்றாகி விடுகிறது
காலச்சக்கரத்தில்…

நிசப்தங்கள் பல,
பலத்த இரைச்சலுடன்
ஆழ்மனதில்…

 

உதிர்ந்த முத்துக்களில்
சில்லறையின் சத்தம்..
மழலையின் புன்னகை

தன்னைக் கொல்லப்போவது தெரியாமல்
புல்லைக் கொல்கிறது ஆடு..
கசாப்புக்கடையில்

 

மின்வெட்டிலும்
காதோரம் மெல்லிய இசை
கொசுவின் ரீங்காரம்

முகமூடிகள் பல
கழட்டப்படாமலே இருக்கிறது
துரோகத்தை உணரும் வரை......
 

காகித மேடையில்
சத்தமின்றி உரக்க பேசுகிறது
பேனா மை…

 
 ஹைக்கூ

அனைத்துமே அருமை சுபி. வார்த்தைகளை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ்

சுபிதா

வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான வரிகள்.சூப்பர்...
மிகவும் அழகாக ￰சிந்தனை உங்களுக்கு.
நான் உங்கள் fan..

￰யாதுமானவன் என்னவன்

சபிதா

உங்கள் படைப்புக்கள் அனைத்தையுமே விரும்பி படிப்பேன்.வார்த்தைகளே இல்லை உங்களை பாராட்டுவதற்கு...

￰யாதுமானவன் என்னவன்

ஹைக்கூ சிதறல்கள்

காகித மேடையில்
சத்தமின்றி உரக்க பேசுகிறது
பேனா மை…

உங்கள் சிதறல்களைப்போல,
அருமை
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
முத்தமிழன்

அறுசுவை டீம்

உடனே வந்திருச்சா, இவ்ளோ சீக்கிரம் எனது கவிதைகளை வெளியிட்டமைக்கு நன்றி.
மறுபடியும் புது பொலிவோட அறுசுவை கலக்கட்டும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இமா ம்மா

தாங்க்ஸ் இமாம்மா, உங்களோட ஊக்கமளிக்கும் வார்த்தைகள் தான் எங்களோட படைப்புகளுக்கு காரணம். வாழ்த்திற்கு நன்றிம்மா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சசி

உங்களோட பதிவிற்கும், பாராட்டிற்கும் ரொம்ப நன்றி.
//மிகவும் அழகாக ￰சிந்தனை உங்களுக்கு.
நான் உங்கள் fan..// ரொம்ப தாங்க்ஸ்.

ஓ என்னோட பழைய கவிதைகள் படிச்சிருக்கீங்களா நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

முத்தமிழன்

உங்களோட வருகைக்கும் , வாழ்த்திற்க்கும் நன்றிங்க.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹைக்கூ ராணி சுபி

வழமை போல அருமை
சுபியின் எழுத்து வண்மை.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.