Doubt

Enaku oru information venum . Na ippo pregnant ah irukaen 2 years akudhu marriage panne. Lot of treatment panni thaan success achu ippo 4 th month running . Ennoda Athai 6 month munnadi Kasi trip Ku book pannirudhanga avuga poradhuku . May month poradhuku . Enaku may month vadha 5 months akum.

Ennoda parents apadi pregnant ah irukum pothu Kasi polamanu en kitta kettanga ?

Enakum manasu kolapama irudhuchu ennoda joosiyar Anna relation la irukanga avuga kitta kettaen avuga po vendam nu soluranga .

Ippo enaku Enna panradhu nu therla . Polama po kudathunu enaku therla. Yaravathu answer pannunga

இப்போ நீங்க‌ கர்ப்பம். உங்க‌ மனசு அமைதியாக‌ இருக்க‌ வேண்டிய‌ காலம். //Ennoda parents apadi pregnant ah irukum pothu Kasi polamanu en kitta kettanga ?// அவங்க‌ உங்களைக் குழப்பி இருக்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கு உங்கள் மேல் அக்கறை இருந்தால் இப்போது இந்தத் தலைப்பு வந்திருக்கக் கூடாது. அவர்களாகவே ஏன் சம்பந்திகளிடம் பேசி இருக்கக் கூடாது! முடியாது என்று உங்களிடம் பேசச் சொல்கிறார்களா? கர்ர்ர்...

//Enakum manasu kolapama irudhuchu ennoda joosiyar Anna relation la irukanga avuga kitta kettaen avuga po vendam nu soluranga .// நீங்க‌ போகாமல் இருக்கலாம்; உங்கள் பெற்றோர் போகாமலிருக்கலாம். ஆனால் அவர்களை நீங்கள் தடுப்பது சரியில்லை, தடுக்க‌ வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

//Ippo enaku Enna panradhu nu therla .// ஒன்றும் செய்ய‌ வேண்டாம். இப்படி ஒரு தலைப்பு வராததைப் போல‌ விட்டுவிடுங்கள். அமைதியாக‌ சந்தோஷமாக‌ இருங்கள்.

//Polama po kudathunu enaku therla.// இதையெல்லாம் பெருசா எடுத்தா நிம்மதியா இருக்க‌ முடியாது கண்ணா. //avuga poradhuku// போகட்டுமே! உங்களைக் கூப்பிடவில்லை தானே! இப்போது உங்கள் உண்மையான‌ பிரச்சினை... //Polama po kudathunu enaku therla.// என்பதல்ல‌. உங்கள் பெற்றோரிடம் என்ன‌ சொல்வது என்பதுதான் அல்லவா?

அவர்களைப் போலவே இவர்களுக்கும் உங்கள் குழந்தை பேரக் குழந்தை தான். உங்கள் குழந்தை அவர்களுக்கு மருமகளின் குழந்தை அல்ல‌, மகனது குழந்தை. உங்கள் பெற்றோருக்கு இருக்கும் அத்தனை அக்கறையும் அவர்களுக்கும் இருக்கும். தன் மகனுக்கும் பேரக் குழந்தைக்கும் ஆகாத‌ ஒன்றை அவர்கள் செய்வார்களா என்ன‌! அது போக‌... உங்கள் கணவர் தன் குழந்தைக்கு ஆகாததொன்றைச் செய்வாரா! சிந்தித்துப் பாருங்கள்.

அவர்கள் போனால் ஏதோ ஆகாதது ஆகும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எதுவும் ஆகாது என்று நம்ப‌ வேண்டும். பயமாக‌ இருந்தால்... பிரார்த்தனை செய்யுங்கள். எந்தப் பிரச்சினையும் வராது.

ஆனால் இந்தப் பேச்சை எடுப்பீர்களானால் பிரச்சினை வருவதற்கு அதிக‌ சாத்தியம் இருக்கிறது. (அல்லாவிட்டால் இங்கு கேளாமல் நீங்களே அத்தை மாமாவிடம் பேசி இருப்பீர்கள் அல்லவா!) இன்னுமொன்று... உங்களால் அவர்களிடம் சரியான‌ காரணங்களைச் சொல்லி ஏற்றுக் கொள்ள‌ வைக்க‌ இயலாதிருக்கும். ஏனென்றால்... நீங்களாகச் சிந்தித்து இதைச் சொல்லப் போவதில்லை; உங்கள் பெற்றோர் தூண்டுதலின் பேரிலேயே பேசப் போகிறீர்கள். பேச்சுவார்த்தையின் இடைநடுவே பேச‌ இயலாது உங்கள் பேச்சு தடைப்படும் போது... ஒரு இயலாமை வரும். அச்சம‌யம் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகள் கொட்டிவிடச் சாத்தியம் இருக்கிறது. கொட்டிய‌ வார்த்தைகளைப் பிறகு ஒரு பொழுதும் அள்ளிவிட‌ முடியாது. நிரந்தரமான‌ வடுக்கள் இரு பக்கமும் வரலாம்.

எனக்கு இந்து தர்மம் தெரியாது. ஆனால் காசி தரிசனம்... பாவங்களைக் கழுவுவதற்காக‌ அல்லவா? நல்லதுதானே இப்போது அவர்கள் சுத்தமாவது! யோசிக்காதீங்க‌. இது உங்களைக் காயப்படுத்தவென்று அவர்கள் செய்யவில்லை; நீங்களே முன்பே திட்டமிட்டிருந்தார்கள் எனச் சொல்கிறீர்கள். குழம்பாமல், குழப்பாமல், இது நல்லது என்று எடுத்துக் கொண்டு முழுமனதோடு சந்தோஷ‌மாக‌ அனுப்பி வையுங்கள். அதன் வழியே உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கூடப் புண்ணியம் கிடைக்கலாம்.

நீங்களாகச் சிந்தியுங்கள். எதுவானாலும் உங்கள் கணவருடைய‌ அபிப்பிராயத்தைக் கேளுங்கள்.
~~~

பிள்ளைகள் மணந்து குழந்தை பெற்று வளர்க்கப் போதிய‌ முதிர்ச்சியுடனிருப்பதாக‌ நம்பித் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர், மற்ற‌ விடயங்களிலும் அவர்கள் மேல் நம்பிக்கை வைக்க‌ வேண்டும். அவர்கள் சிந்தித்து நடக்கட்டும் என்று விட்டுவிட‌ வேண்டும். இடையில் நுழையாமல் சின்னவர்களை நிம்மதியாக‌ விடவேண்டும். ;(

‍- இமா க்றிஸ்

Thanks for your information ..

Actually Amma Athai 2 perum close thaan Amma en kitta kettatha kuda relation yaro ketturukanga Pola. Amma en kitta Sonna Na theva illama yoosipaen nu sollala . But ennoda Periyamma, Athai 2 perum en kitta ithae questions ah kettanga so na Amma kitta kettaen avugalum
enaku doubt iruku but therla nu sonnaga .

Enga athai Ku itha pathi ethuvum theriyathu po kuduthanu na husband sonna Athai po mattanga .

But enaku Enna kolapana indha madhiri time la Kasi Ku polama kuadathunu .? Neenga sonnathu Pola Kasi pavam pokura place so Anga poi indha time la pannalamanu keakuraen .

Po kudathunu theruja enoda Athai kitta solluvaen avugalum po mattanga .

Na innum enga athai kitta peasala athuku karanam po kudathu nu enaku correct ah theruja peasalam nu nenaichaen.

எப்படித் தெளிவாகச் சொல்வது என்று தெரியவில்லை. ☺ அழுக்கு இருந்தால் அது நீங்குகிறது. நல்ல விஷயம் இல்லையா! என் பதில் தர்க்க ரீதியான பதில். ☺ நீங்கள் எதிர்பார்ப்பது வேறு. சற்றுப் பொறுங்கள். சகோதரிகள் வந்து பதில் சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

Enaku marriage agi 4years aguthu Amma babykaga try pandrom. Enaku regular period than 32days cycle. Feb 28last period date. Next April 1period varanum but varala. Ennaiyoda enaku 35days aguthu .40days anathum urine test pannalam eruken. Enaku ethu pregnancya erukuma illayanu kolappama eruku amma. Enaku 1 doubt, Epothu pregnancy symptoms start agumnu konjam cleara sollunga amma and frds pls replay.

B. Radha

ஒரு சிலருக்கு 1 1/2 மாதத்தில் தெரியும். சிலருக்கு 3-ஆம் மாதம் ஆரம்பத்தில் தெரியும். நீங்கள் 45-ஆம் நாள் பரிசோதனை செய்து பாருங்கள்.

I love my parents...

..

I love my parents...

மிக்க நன்றி.

B. Radha

//Epothu pregnancy symptoms start agum// முக்கியமான‌ அறிகுறி மாதவிலக்கு குறித்த‌ தேதியில் வராதிருப்பது. 45வது நாள் சோதித்துப் பாருங்கள். முடிவு எதுவாக‌ இருந்தாலும் பயப்படாமல் மருத்துவரிடம் போங்க‌.

//pregnancya erukuma illayanu kolappam// உங்களுக்கு ஒழுங்கான‌ மாதச்சுழற்சி என்கிறீர்கள். கர்ப்பமாக இருப்பதற்கான‌ சாத்தியம் அதிகம்.

‍- இமா க்றிஸ்

thanks amma.pregnancy symptoms vomit, kumattal ethellam eantha days varum ?Enaku 36days aguthu but entha symptoms vara villai amma.

B. Radha

Pregnancy symptoms hcg level increase agum podhu than varum 45 days after vomiting,frequent urination ellame irukum ipothaiku entha symptoms um illamal irupathu nalla visayam seekiram conform aedum thozhi tension agama irunga

My heroes my husband & my son

மேலும் சில பதிவுகள்