7 கப் கேக்

தேதி: March 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கடலை மாவு - முக்கால் கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சீனி - 3 கப்
நெய் - ஒரு கப்
முந்திரித்தூள் - கால் கப்


 

கடலை மாவை சலித்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, ஓடு, நார் இல்லாமல் வெண்மையான பூவாக எடுத்துக் கொள்ளவும்.
முந்திரியை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரைத்த முந்திரி பொடியை போட்டு ஒன்றாய் கலந்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் பாலை ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற, அடி சற்று கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடேற்றவும். அதில் கரைத்த கடலை மாவு கலவையை ஊற்றவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல், சீனி சேர்த்து நன்கு கிளறவும்.
சீனி கரைந்து பாகாகி, மாவு மற்றும் தேங்காயுடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது விடாது கிளறிவிடவும்.
20 நிமிடங்கள் தொடர்ந்து கிளறியவுடன், கலவை எல்லாம் ஒன்று சேர்ந்து சற்று கெட்டியாகி வரும். நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
ஒரு தட்டின் உட்புறம் முழுவதும் நெய் தடவி வைக்கவும்.
இறக்கியவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி நன்கு பரப்பி சற்று ஆறவிடவும். 3 நிமிடம் கழித்து கத்தியில் நெய் தடவிக் கொண்டு வில்லைகளாக வெட்டி வைக்கவும்.
சுவையான 7 கப் கேக் தயார். செய்வதற்கு எளிதான, மிகவும் சுவையான கேக் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hi,

Mr.Admin,how r u? i tried the stuffed chapathi which i saw from this site it came out very wel my husband enjoyed it me too.its very useful for the people like who live in States missing help from the mother to cook.i just want to thank the person who provide this recepie to us.and also i'll try this 7 cup cake and let me give feedback immediately

KEEP SMILING ALWAYS

சகோதரி அவர்களுக்கு மிகவும் நன்றி. உங்களின் பாராட்டுகள் அனைத்திற்கும் தகுதியானவர்கள், எங்களுக்கு இதுபோன்ற குறிப்புகளை வழங்கி, அவற்றை செய்து காட்டும் சகோதரிகள்தான். உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் அவர்களை இன்னும் அதிகம் பங்களிக்கச் செய்யும்.

why the name "7 cup cake". If anyone knows, please tell me.

எடுத்துக்கொள்ளும் பொருட்களின் அளவை கணக்கிட்டுப் பாருங்கள். ஏழு கப் வரும். பொதுவாக முந்திரி சேர்க்காமல், கடலை மாவை முழுதாக ஒரு கப் அளவிற்கு எடுத்து செய்வார்கள். இங்கே கூடுதல் சுவைக்காக முந்திரித்தூள் சேர்க்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் சந்தேகம் தீற்ந்தது. மிக்க நன்றி.

7 கப் கேக் செய்துப்பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.ஸ்வீட் சாப்பிடாத என் பையன் விரும்பி சாப்பிட்டான் தங்களின் குறிப்புக்கு நன்றி.(படத்தில் உள்ளது போல் பர்பி மாதிரி இல்லாமல் சிறிது இளகுத்தன்மையுடன் இருந்தது)

அன்புடன்
அபிராஜன்

7 கப் கேக் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.நன்றி.
-மித்ரா

7 கப் கேக் மிகவும் சுவையாக இருந்தது. பர்பி போலதான் வந்தது. முதலில் சிறிது அடிப்பிடிக்க தொடங்கி விட்டது. பாத்திரத்துடன் சிறிது போய்விட்டது. :) பின்னர் நான் -ஸ்டிக் பாத்திரதிற்கு மாற்றி செய்தேன். ஒட்டாமல் நன்றாக வந்தது. சீனி 2 கப்தான் சேர்த்தேன். அதுவே மிகவும் இனிப்பாக இருந்தது.:) இந்த குறிப்பை தந்த அட்மினுக்கு நன்றி.
-நர்மதா:)

samyal arvam/