நெஞ்சு சளி

எனது குழந்தைக்கு 2 மாதம் ஆகின்றது. பிறந்ததில் இருந்து சளி உள்ளது. கொர் கொர் என்று கேட்கின்றது. ஆனால் சளி மூக்கில் வடியாமல், நெஞ்சு சளியாக உள்ளது.சளி உள்ளதால் தடுப்பூசி போடவில்லை இன்னும். இரவில் மூக்கு அடைத்து கொண்டு மூச்சு விட சிரமப்படுகிறான்.நெஞ்சு சளி சரியாக என்ன செய்ய வேண்டும் யாராவது கூறுங்கள்

உங்களுக்கு சளி பிடித்து இருந்தால் குழந்தைக்கும் சளி பிடிக்கும் அதனால் உங்களுக்கு சளி பிடிக்காமல் பார்த்ததுக் கொள்ளுங்ககள்...

கற்பூறவல்லி இலையை சாப்பிடுங்ககள் பால் வழியாக குழந்தைக்கும் சேரும்..

கஸ்துரி மஞ்சள்+கொல்லு(கொல்லை ஒரளவுக்கு பொடியாக அரைத்துக்கொண்டு) இரண்டையும் ஒன்றாக சேர்ந்து குழந்தையை தலைக்கு குளிக்க வைத்த பின் தலையை நன்கு துடைத்து சிறிதளவு உச்சியில் வைத்துவிடுங்கள் சளி பிடிக்காமல் இருக்கும்..(தலைக்கு குளிபாட்டுபோது மட்டும்)

I love my parents...

மேலும் சில பதிவுகள்