Thyroid skin allergy

Hi all.

I need one help. Ennoda husband thyroid problems 4 years ah iruku hypothyroid . Avuga English medicine romba naal ah use pannitu irudhanga thyroid normal ah akiruchu but skin rashes Vara start akiruchu. Avuga etho etho try pannirukanga sari akala . Enaku marriage aki 2 years akudhu after marriage na Avar Sidha doctor pakka vachaen. Athu saputa knjm naal la skin normal akiruchu but thyroid vadhuruchu but normal thaan . Ennoda husband en kitta sollama English medicene eduthurukanga sidha thyroid tablet ah sapudama. 2 months. Ippo again skin rashes vadhuruchu ippo en kitta sonnaga. Again sidha doctor ah pathaen Avar bayam vendam sari akirum olunga tablet continue pannunga nu sonnaga .

Enaku Enna doubt.na ethavathu home remedies iruka skin itching Ku ? Oil apply panni viduraen daily . But night time romba itching iruku nu feel panranga

அவரது தோல் பிரச்சினை தைராயிட் மாத்திரையால் என்று கருதினால் மீண்டும் மாத்திரையைப் பரிந்துரைத்த‌ டாக்டரிடம் இதுபற்றிப் பேசலாம். தைராயிட் கூடுதலாக‌ இருக்கிறது அல்லது குறைவாக‌ இருக்கிறது என்பதை இரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்கலாமே தவிர‌ டோஸ் ஒரு ஊகத்தில் தான் கொடுக்கப்படுகிறது. அது குறைவாகவும் கொடுக்கப்படலாம்; அளவாகவும் இருக்கலாம்; சில‌ சமயம் கூடுதலாக அமைந்துவிடுவதும் உண்டு.

டோஸ் சரியான‌ அளவில் இல்லாவிட்டால் இப்படியான‌ ராஷஸ் வரக் கூடும் என்று நினைக்கிறேன். நிச்சயமாகச் சொல்ல‌ முடியவில்லை. ஒரு முறை இணையத்தில் ஒரு இடத்தில் இது தொடர்பாகச் சிலர் பேசியதைப் படிக்க‌ நேர்ந்தது. அவர்கள் கூட‌ இதை ஓர் ஊகமாகத் தான் சொல்லியிருந்தார்கள். தங்களது மாத்திரை டோசேஜ் அதிகமாக‌ இருக்கக் கூடுமோ என்று சந்தேகப்பட்டார்கள். உடல் திடீரென்று தைராய்ட் அளவை மாற்றினால் மீண்டும் ஏதாவது ஒரு மாற்றம் வெளியே தெரிந்தால் தவிர‌ மாத்திரை அளவை மாற்ற‌ வேண்டுமா என்கிற‌ சந்தேகம் வராது.

அடுத்து வரும் இரத்தப் பரிசோதனைகளில் இது பற்றி மருத்துவர் கண்டுகொள்வார். பிறகு மாத்திரை அளவை மாற்றலாம். சில‌ சமயம் எம் உடலில் மீண்டும் தைராயிட் சுரப்பு அளவு மாறலாம். அப்போதும் மாத்திரை அளவை மாற்ற‌ நேரும். பெரும்பாலும் இந்த‌ மாற்றங்கள் பெரிய‌ அளவில் சிரமங்களைக் கொடுப்பது இல்லை.

//thyroid normal ah akiruchu// என்று எப்படி அறிந்துகொண்டார்? மீண்டும் இரத்தப் பரிசோதனை செய்த விதத்திலா? //normal ah akiruchu// என்பது சரி என்றால் நீங்கள் குறிப்பிடும் //skin rashes// வேறு காரணத்தால் ஆகி இருக்க‌ வேண்டும்.

//Avuga etho etho try pannirukanga sari akala// என்னென்ன‌ என்பதைச் சொல்லுவீர்களா? சொன்னால் சில‌ சமயம் உதவக் கூடியதாக‌ இருக்கும்.

//but thyroid vadhuruchu// அப்படியானால் எப்படி //but normal thaan// என்கிறீர்கள்? நார்மல் என்றால் சித்தா மருந்து எடுக்க‌ ஆரம்பித்த‌ பின் தைராயிட் லெவல் இரத்தப் பரிசோதனையில் நார்மல் என்று காட்டியிருக்க‌ வேண்டுமே அல்லாமல் ஊகத்தில் சொல்ல‌ மருத்துவராலும் முடியாது.

//home remedies iruka skin itching Ku// வெந்நீர்க் குளியல், சவர்க்காரம் தவிர்க்க‌ வேண்டும். பேபி சோப் / கிளிசரின் சோப் / சென்சிடிவ் ஸ்கின்னுக்கான‌ சோப் பயன்படுத்தலாம். இதற்கென்றே லிக்விட் சோப் விற்கிறார்கள். அங்கு என்ன‌ கிடைக்கும் என்பது தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கலாம். //Oil apply panni viduraen daily// இது எல்லா வகை தோல் அழற்சிகளுக்கும் பொருந்துவது இல்லை. தேவைக்கு மேல் வரண்டு போகவும் வைக்கும். அந்த‌ இடத்தில் உள்ள‌ தோற்கலங்களுக்கு ஈரலிப்புத் தான் தேவையாக‌ இருக்குமே தவிர‌ எண்ணெய் அல்ல‌. நல்ல‌ மாய்ஸ்சரைசர் ஏதாவது வாங்கிப் பயனடுத்தலாம். சவர்க்காரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய‌ மாய்ஸ்சரைசர்களும் மருத்துவ‌ விற்பனை நிலையங்களில் கிடைக்கும். தயிர் நல்லது.

//night time romba itching// இரவு படுக்கைக்குப் போகும் முன் குளிர் நீரில் குளியல் எடுக்கச் சொல்லுங்கள். படுக்கை, போர்வை, இரவு உடை மென்மையான‌ துணிகளாக‌ இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். ஃபேசியல்ஸ் செய்வது போல‌, பாதிக்கப்பட்ட‌ இடங்களில் வெள்ளரிக்காய், பப்பாளி வைத்துப் பார்க்கலாம்.

உணவுகள் ஏதாவது அரிப்பைக் கூட்டுகிறதா என்பதைக் கவனியுங்கள். சரி வரும் வரை அவற்றையும் தவிர்க்கலாம். ஆன்டிஹிஸ்டமைன் நிச்சயம் உதவும். காலமை லோஷனும் இதமாக‌ இருக்கும்.

¬¬¬¬¬¬¬
இத்தனையையும் சொல்லியிருக்கிறேன் என்பதால் எனக்கு உதவி தேவையிராது என்பதாகாது. ;) எனக்கும் இதே தைராய்ட் & இதே மாதிரி ஒரு தோல்ப் பிரச்சினை இருக்கிறது. (தைராய்ட் மாத்திரை... 15 வருடங்களாக‌ எடுக்கிறேன். நல்லவிதமான‌ முன்னேற்றங்கள் மட்டுமே ஏற்பட்டன‌. எந்தப் பிரச்சினையும் மாத்திரை எடுக்க‌ ஆரம்பித்த‌ பின் இருந்ததில்லை.) ஜனவரியில் தோலில் தெரிந்த‌ அடையாளங்களை வைத்து Pityriasis rosea என்று என் மருத்துவர் சொன்னதால் அதைப் பற்றி யோசிக்காமல் இருந்தேன். அடையாளங்கள் எல்லாமே ஆடைகள் மூடும் இடங்களில் இருந்தது வசதியாகப் போயிற்று. :‍) அருமையான‌ மருத்துவர். அவர் பார்த்ததுமே இன்ன‌ பிரச்சினை என்று சொல்லிவிடுவார். கொடுக்கும் மருந்துகளும் எனக்குப் பொருத்தமாக‌ வேலை செய்கின்றன‌. அடையாளங்கள் பரவுவது, அவர் சொன்ன‌ மாதிரி மூன்று மாதங்களில் நின்றுவிட்டது. அரிப்பு எப்பொழுதுமே இருக்கவில்லை. அந்த‌ இடங்களில் தோல் இன்னமும் பழைய‌ நிலைக்கு வரவில்லை. இந்த‌ வாரம் ரிப்பீட் எடுக்கப் போன‌ போது பார்த்துவிட்டு எதற்கும் ஒரு ஸ்க்ரேப்பிங் செய்து பார்க்கலாம் என்றார்கள். ஒரு தடவை தைராயிட்டையும் செக் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.

நீங்கள் இடைக்கிடையே அங்கு என்ன‌ நடக்கிறது, முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்பது பற்றி இங்கு வந்து பதிவு செய்து வைக்க‌ முடிந்தால் எனக்கும் உதவியாக‌ இருக்கும். இப்பொழுதே... நன்றி.

‍- இமா க்றிஸ்

Ennoda husband starting la thyronorm 50 mcg tablet saptanga. Level with in 6 months la normal range Ku akiruchu blood test patharukanga.but tablet ah continue panna sollirukanga. Automatic skin rashes vadhuruchu . Ivugala oil , aloo Vera gel ithala use pannirukanga . Kammi akala. 2 years munnadi engaluku marriage achu then blood test eduthom knjm again thyroid irudhuchu like 7 near . Then skin rashes knjm kuda kammi akala .

Then ennoda native la sidha doctor romba famous Anga nanga consultant pannom . Then doctor English medicine la stop Panna sonnaga. Sidha medication kuduthanga related to thyroid and blood purifying tablet and immune system increase Ku. And legiyam and oil (lot of medicene including in this oil ) also. Ennoda husband English tablet stop pannitu sidha medicine eduthanga .

Then 2 to 3 months la skin rashes knjm kuda illa ellamae Mari pochu . Ivugalum dress maraikura places la mattum thaan irudhuchu . But onnu kuda illa apadiya ellamae Mari pochu. Normal skin Mari akiruchu . But thyroid level increase akiruchu like 12 . Then sidha doctor tablet dose knjm kuduthanga like per day 6 tablet sapuda sonnaga .with in 3 months la 9 range Ku vadhuchu then 5onths la 7 range vadhuchu but no skin allergy. Ivuga slow ah kammi akudhu nu feel pannirukanga Pola .

Then en kitta sollama avuga sidha thyroid tablet thavira matha Ella tablet continue pannirukanga . Sidha thyroid tablet ah stop pannitu English tablet eduthukonga. With in 2 months la skin rashes itching start akiruchu. Then blood test eduthom again 9 range la iruku. So again Ivar sidha doctor ah patharu. Avuga onnum problem illa. Ipo English tablet eduthurukanga so immediate ah stop Panna vendam Sidha and English thyroid tablet ah 2 yum continue pannunga one month na next eppo stop Panna nu soluraen nu sollitanga.

Ippo 2 tablet yum continue pannuranga 1 week ah . Actually doctor ah last week pathanga athuku munnadi 2 weeks ah sudden thaan skin rashes vadhuchu. So ipo after doctor pathathum avuga kuduthanga oil and tablet la continue pannuranga Max one or 2 months la kandipa sari akirum nu doctor sollirukanga.

எனக்கு தைராய்டு பற்றி தெரியாது பா. இட்சிங் உருவாக்குற‌ மாதிரியான‌ உணவுகளை சாப்பிட‌ சொல்லாதீங்க‌. கத்தரிக்காய், புடலங்காய், சுரக்காய் இதுமாதிரி வேண்டாம்.

அப்புறம், குளிப்பதற்கு அரை / ஒரு மணி நேரம் முன் குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு ஊற‌ வையுங்கள். பின்பு குளித்தால் தோல் எரிச்சல்,ஊறல் இருக்காது. முயற்சி செய்து பாருங்க‌.
இமா அம்மா சொன்ன‌ மாதிரி டாக்டர்கிட்டேயே ஊறலுக்கான‌ சோப் வாங்கி பயன்படுத்துங்கள். சாஃப்ட் க்ளாத் அணிந்து கொள்ளச்சொல்லுங்கள். விரைவில் குணமாகும். நம்பிக்கையுடன் இருங்கள்.

- பிரேமா

Sure kandipa itha try panni pakurom . Thanks for your valuable comments. Food la na Correct follow panraen avugaluku . Sugar oil la use panradhu kammi pannitaen . Sugar use panradhu illa. Veg pathu pathu thaan kudukuraen . Non veg items ethu set akumo athan kudupaen.

Vepillai kandipa try panni pakuraen . Sandal ippo use panranga

மேலும் சில பதிவுகள்