டூனா மீன் சாலட்

தேதி: March 6, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரெடிமேட் டூனா மீன் - இரண்டு கேன்
சிவப்பு வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கார்லிக் சால்ட் - அரைதேக்கரண்டி
பார்ஸ்லி தழை - ஒரு பிடி
சாலட் இலை - நான்கு
மயோனைஸ் - அரைக்கோப்பை
சவர் க்ரீம் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
தைம் தழையின் தூள் - அரைதேக்கரண்டி
ஹாட் பெப்பர் சாஸ் - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
தக்காளியை வட்டங்களாக நறுக்கி வைக்கவும்.
பார்ஸ்லி தழையை நொறுங்க நறுக்கி வைக்கவும்.
சாலட் இலைகளை வேண்டிய அளவிற்கு பிய்த்து வைக்கவும்.
ஒரு கோப்பையில் மயோனைஸையும், சவர் க்ரீமையும் கலக்கவும். தொடர்ந்து மீன் மற்றும் வெங்காயம், சாலட் இலைகளைத்தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு மீனின் டப்பாவை திறந்து அதிலுள்ள நீரை சொட்ட வடித்து விட்டு அதனுடன் வெங்காயத்தையும் மேற்கூறிய கலவையில் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
பிறகு பரிமாறும் தட்டில் சாலட் இலைகளை பரவலாக போட்டு தயாரித்துள்ள மீன் சாலட்டை வைத்து ஒரு பக்கமாக தக்காளி துண்டுகளை அலங்கரித்து வைக்கவும்.
இந்த சாலட்டை சாண்வீச்சாக பரிமாறலாம் அல்லது டோர்டில்லா சிப்ஸுடன் அபிடைஸராகவும் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்