தாயின் வர்ணனை - சுபிதா - அறுசுவை கவிதை பகுதி - 34143

Kavithai Poonga

தாயின் வர்ணனை - சுபிதா

நீ சி((ரித்த)ந்திய
முத்துக்களில்
அட்டிகை செய்து
வாரி அணைத்து
உன்னை
அணிந்துகொள்கிறேன்
தாயாகிய நான்,,,,,,

ஒரு வரி கவிதை அல்ல நீ,
ஒரு யுகம் போதாது
உன்னை பற்றி எழுத,,,,

நீ முறிக்கும் சோம்பலில்
நான் பூரித்து சிலிர்க்கிறேன்
மனதில்,,,

உன் பட்டுப் பாதம்
தீண்ட தென்றலும்
தவம் கிடக்கிறது
வரம் கிடைக்காமல்,

பூமியில் நீ தவழ
வானம் தான் ஏங்குகிறது
உன்னைக் கையில் ஏந்த முடியாமல்

உன்னைக் காணமுடியாமல்
தவிக்கிறது வெண்ணிலா
அமாவாசை அன்று,,,,

நட்சத்திரமும்
ஆங்காங்கே மின்னுகிறதே
உன்னைப் பார்த்து கண்ணடிக்க,,,,,

மொத்தத்தில்
இயற்கையே மண்டியிட வேண்டும்
மழலை உன் அழகை காண (ரசிக்க),,,

- சுபிதா
சுபிதா

மழலையைப் போலே கவியும் அழகு.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.