தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

விதிமுறைகளை பார்ப்பது நல்லது தான். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த மாதிரி விஷயங்களை சற்று ஒதுக்கி விடுவது நல்லது. வளைகாப்பு என்பது நம் பண்பாடு என்றால் வளைகாப்பு போடுவதற்கு முன் குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும். அதற்காக அந்த குழந்தை பிறந்ததை குறை சொல்ல முடியுமா அல்லது குழந்தைக்கு ஏதேனும் தீங்கு நடந்திடுமா?

கடவுள் மேல பாரத்தை போட்டு நல்லதே நடக்கும்னு நினைச்சு உங்களுக்கு எப்போ வசதியா இருக்கோ அப்ப வாங்க கா. நான் சொன்னதுல ஏதாது தப்பு இருந்தா மன்னிச்சுருங்க.

- பிரேமா

Enna baby ah irundhalum ok pa. But epo 3 months mudiyum nu irukku. Last 3 days ah fever cold. Night full um irumal. Thoongave mudiala. Light ah irumunave urine vandhurudhu. Inume sariaakala pa. Elundhu velaiyum seya mudiala.

...

Illa pa .. ninga sonnathu enna thappu iruku ... yosichu mudivu edukirom ...

Nan 7 masathuley kelambaaaalamnu iruken ethuku mana kuzhappam

Yen ippadi ... nanum unkala mathiritha saaptaudiyila thunka mudiyila utkara mudiyila appa appa inka vanthu polambittey iruppen .. kavi ellam konja naal than 4 masathuku melaa entha problem irukathu ...

Ithukulam namma onnumey panna mudiyathu ellam babyoda nallathukuthan nenaaichukonka ..enaku thumbinaa urine leaakage irunthathu..

Nan varaa mathiri irunthaley pass panniduren full rest edunka ...happya irukanpa ...

இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி அதன் விதைகளை மென்று வெந்நீர் குடிங்க. உடனே இருமல் நிக்கும் வராது

- பிரேமா

பிரேமா,
நீங்கள் சொன்ன மாதிரி இன்று Try பண்றேன்.

காய்ச்சலும் இருமலும் சமாளிக்க முடியல. தொடர்ந்து 4 நாள்களாக மாத்திரை அதுவும் அதிக Dosage. குழந்தைக்கு Affect ஆகுமோனு பயம் வேற. நேற்று Trips போட்டுட்டு Blood test க்கு கொடுத்துட்டு வந்தோம். 2 நாளில் HB 1 point குறைந்துள்ளது. 8.9 உள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு Inj. இருக்கு. சுத்தமாக தூக்கமும் இல்லை. Strenth m இல்லை. இன்னும் 2 நாளில் கண்டிப்பாக மீண்டு விடுவேன். மழை பனி வேறு. உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் கவனமாக இருங்கள். என் மூலம் ஒரு பாடம்.

...

குழந்தைக்கு Affect ஆகுமோனு பயம் வேற/// உங்க பயம் தான் குழந்தைக்கு அஃபேக்ட் ஆகும் . மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் தானே பிறகு ஏன் பயம்.
2 நாளில் HB 1 point குறைந்துள்ளது. 8.9 உள்ளது// உலர்ந்த கருப்பு திராட்சை நைட் ஊர வைத்து காலைல பழம் வித் அந்த வாட்டர குடிங்க நல்ல பலன் கிடைக்கும் சிஸ்.
எல்லோரும் கவனமாக இருங்கள்/// எனக்கும் நேற்று இரவில் இருந்து தொண்டை வலி எதுவும் விழுங்க முடியல . எப்போதும் சளி பிடிக்கும் முன் இது போல இருக்கும். என்ன செய்வது என்று தெரியவில்லை.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

ஹீமோகிளோபின் அதிகமாக, தினமும் உலர்ந்த அத்திப்பழம் காலை ஒன்று இரவு ஒன்று சாப்பிடுங்க. எப்படி அதிகமாகுதுன்னு மட்டும் பாருங்க. இடையில் மாதுளை ஜுஸ் / பழமாக சாப்பிடலாம்

- பிரேமா

தோழிஸ் எனக்கு5மாதம் ஆகிறது. நேத்து நைட் இருந்து தொண்டை வலி இப்போது சளியும் பிடித்துவிட்டது.இப்போது என்ன செய்வது.நெக்ஸ்ட் செக்கப் செல்ல இன்னும் 3வாரம் உள்ளது.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

என்னைக் கேட்டால் 3 வாரம் Wait பண்ண வேண்டாம் என்றே சொல்வேன். Pregnancy time ல் எதுவும் Treatment இல்லாமல் விட்டால் சரியாக சாப்பிட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. சோர்வு தான் மிஞ்சும்.

வெதுவெதுப்பான உப்பு நீரில் அடிக்கடி வாய் கொப்பளியுங்கள். சளிக்கு Home remedy ஒரு நாள் try பண்ணிட்டு சளியின் தீவிரத்தை பொறுத்து Dr பாருங்க.

...

மேலும் சில பதிவுகள்