தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Murungai keerai jeeranam aaka late aakum indha time la. Nenjule nikkum. Adhu saapidum podhu nalla mennu sapudunga. Murungai keerai soopu sapudunga. Thannia kudikarappa easy digest aakum.

...

// 4 month// இன்னும் காலமிருக்கிறது. யோசிக்காமல் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடவுங்கள்.

//ithunala baby Ku yethathu aguma// ஒன்றும் ஆகாது. அவங்க ஸ்கான் பார்த்துச் சொல்கிறார்கள். சொல்வதைக் கேளுங்கள்.

//normal delivery agathu nu solranga// பிழையான ஆள்ட்ட கருத்து கேட்டிருக்கீங்க கண்ணா. :-) எதை நார்மல் டெலிவரி என்கிறீர்கள்? :-) //unga opinion sollunga maa.// :-) நார்மல் என்கிறது சிசேரியன் இல்லாமல் குழந்தை பிறப்பது மட்டும் அல்ல. குழந்தை இந்த உலகிற்கு வந்தபின் தாயும் சேயும் நலமாக இருந்தால், அந்தத் தாய்க்கு எவ்வாறான பிரசவமாக இருந்தாலும், 'நார்மல் டெலிவரி' ஆகி இருப்பதாகக் கொள்ளலாம்.

//intha babyku sapfavey pidikala and IPA 5 month nadakkithu// இன்னும் காலம் இருக்கே, அதற்குள் உங்கள் நாக்கு ருசி மாறிப் போகும். //movement um terila// இதற்கும் காலம் இருக்கு. சிலருக்குத் தாமதமாகத் தெரியும். பிரச்சினை இருந்திருந்தால் ஸ்கான் பார்த்தவர்கள் சொல்லி இருப்பார்கள் இல்லையா? யோசிக்காதீங்க.

முதல் குழந்தைக்கு இருந்தது போல் கர்ப்பகாலமும் பிரசவமும் இரண்டாவதற்கும் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அமைதியாக சந்தோஷமாக இருங்க. ஆரோக்கியமான உணவாகச் சாப்பிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

Rompa rompa nandri mmaa. Ninga sonnathu aaruthala erukku.nanjukodi keela erukku normal delivery agathunu nurse oruthanga sonnanga athula rnthu rmpa kastama aidchu maa.athan IPA fl better maa.tnx

hii sis....C- section ku aparem epa irunthu wrk seiyalam kila ukanthu enthirikarathu intha mathiri....

na paiyan oda dress ella 2 days ahh na tha wash pannitu iruka stool potu tha ukanthu wash pandra ithanala ethavathu prblm varum ahh???? help pannunga sis....

SangeethaKannan

வெளி காயம் ஆறினாலும் உள் காயம் ஆற 3 மாதம் ஆகும்னு டாக்டர் என் அக்காவிற்கு சொன்னாங்க .அப்போது சரியானது போல் தெரிந்தாலும் சில நாள் அப்பறம் பாதிப்பு தெரியலாம் என்றார் .அதிக வெயிட் தூக்காதிங்க .நின்றுகிட்டு துணிதுவைக்க பாருங்க.ரொம்ப ஸ்ரைன் பண்ண வேண்டாம்.

இப்போ எவ்ளோ நாள் ஆகுது கா.பேபி எப்டி இருக்கான்:)

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

சின்னத் துணிகள் பரவாயில்லை. பெரிய துணிகளை ஈரத்தோடு தூக்க வேண்டாம். ஸ்டூல் போட்டு உட்காருவது வசதிதான். ஆனால் குனிந்து இருப்பதால் முதுகுவலி வரலாம். ஸ்டூலில் அமர்ந்தாலும் நிமிர்ந்து இருப்பது போல் வேலையைச் செய்து முடிக்க முடிந்தால் நல்லது. சின்னவர்களது துணி ஆனாலும் ஈரம் ஊறி இருக்கும் போது பாரமாக இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கொடிக்கு தூக்கிப் போக வேண்டாம். எட்டவில்லை என்று நுனிக்காலில் எட்டிப் போட வேண்டாம்.

பொதுவாக 6 வாரங்கள் ஆகும். சிலருக்கு முன்பின்னாகவும் இருக்கும். கவனமாக இருங்க. உங்களால் முடியாவிட்டால் வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். பொதுவாக குழந்தை தூங்கும் போது வேலை செய்யப் பார்ப்பீர்கள். நானும் அதையே தான் செய்திருக்கிறேன். குழந்தை தூங்கும் போது தாயையும் தூங்கச் சொல்கிறார்கள் இங்கே. உறக்கம் அவசியம். உங்கள் கணவர் துணிகளைத் துவைத்துக் கொடுக்க மாட்டாரா? கேட்டுப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாஸ் சிஸ் .இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போனோம்.டாக்டர் பேபி எடை ரொம்ப குறைவா இருக்குன்னு சொன்னாங்க .33 .4 வீக் ஆகுது பட் 1789 வெயிட் அப்டின்னா 1.789 kg ah?. 15 நாள் பிறகு வர சொல்லி இருக்காங்க .வரும் போதே வெளி ஸ்கேன் சென்டர்ல ஸ்கேன் பண்ணிட்டு வர சொல்லி எழுதி கொடுத்தாங்க ஏன் அப்டின்னு தெரியல.

மதர் ஹார்லிக்ஸ் குடிக்க சொன்னாங்க அத குடிச்சா பேபி வெயிட் ஏறுமா ? இன்னும் 15டேஸ்ல வெயிட் ஏத்தனும்னு சொல்லிருக்காங்க .இப்ப நா என்ன தான் செய்யனும்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

குழந்தை தலை திரும்பும் போது இடது வலம் என்று நேராக இருப்பது போல் இருக்குமா? மேல் கீழ் இருப்பது போல் இப்போது இல்லை. நேற்று இரவில் இருந்து இப்படி தான் இருக்கிறது. அடி வயிறும் வலிக்கிறது. தலை முழுதும் திரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.இந்த நிலையில் வலி வர வாய்ப்பு இருக்கிறதா? தெரிந்தவர்கள் பதில் கூறவும்.

...

நல்லா சாப்பிடுங்க பா. புரோட்டின் இருக்கற உணவு எடுத்துங்க. பருப்பு பாசிப்பயறு சுண்டல் Food la சேத்துக்கங்க. Egg சாப்பிடலாம். Mother horlicks உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கங்க. என்ன கேட்டா நீங்க Mother horlicks ஐ விட Food la எடை கூட்ட முயற்சி பண்ணுங்க.
இன்னும் எடை கூட்ட என்ன பண்ணலாம் னு அறுசுவையிலேயே Search பண்ணி பாருங்க. நிறைய வரும்.உங்களுக்கு உகந்ததை Follow பண்ணுங்க.

...

ஓகே சிஸ் நா ஃபாலோ பண்றேன். 34 வாரத்தில் சராசரியா குழந்தை எவ்ளோ வெயிட் இருக்கனும்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்