About NT

வணக்கம். எனக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. 7 வயது பெண் குழந்தை உள்ளது. இவளுக்கு 3 வயது இருக்கும் போது நான் மீண்டும் கர்ப்பம் அடைந்தேன். கர்ப்பம் அடையும் போது நான் singapore-இல் இருந்தேன். 30-35 நாளாக இருக்கும் போது விசா முடிந்த காரணத்தால் இந்தியா வந்தேன். டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்த போது துடிப்பு இல்லை என்று சொன்னதால் DNC செய்தோம். மீண்டும் 2 வருடங்கள் கழித்து கர்ப்பம் ஆனேன். 3 மாதscan இல் நன்றாக உள்ளது என்றார்கள். பிறகு 1 வாரத்திற்கு பிறகு எனக்கு வெள்ளை படுவது போல் வெளிர் சிவப்பு நிறத்தில் பட்டது. டாக்டரிடம் சென்ற போது குழந்தையின் கழுத்து பகுதியில் நீர் அதிகமாக உள்ளது என்று கூறி கோயம்புத்தூர் scan center இல் test செய்ய சொன்னார்கள். Report இல் NT அதிகமாக உள்ளதால் இந்த குழந்தை மூளை வளர்ச்சி குறைப்பாட்டுடன் பிறக்கும் என்று கூறியதால் இதையும் DNC செய்தோம். மீண்டும் கர்ப்பம் ஆக பயமாக உள்ளது தயவுசெய்து இதை பற்றி விளக்கவும். அடுத்த குழந்தைக்கும் தொடருமா

Ninga ethuna fertility dgo padicha dr kitta poningana avanka chromesome blood test eeduthu parpanka .. avanka karanam ennannu clear panniduvanka .. so dr kitta ponga ...antha test peru sariya thriyila kardiyotype etho something ..

Thank you

மேலும் சில பதிவுகள்