மோர் குழம்பு

தேதி: March 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (8 votes)

 

மோர் - 4 கப்
பூசணிக்காய் - ஒரு கீற்று
கடலைப் பருப்பு - அரை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - அரை மேசைக்கரண்டி
தனியா - அரை மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
துருவிய தேங்காய் - அரை கப்
இஞ்சி - சிறுதுண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
தண்ணீர் - இரண்டரை கப்


 

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா இவை மூன்றையும் ஒன்றாய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அவற்றை இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
துருவின தேங்காய், பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு, மிளகு, சீரகம் இவை எல்லாவற்றையும் சேர்த்து கரகரப்பாக அரைத்து அதில் இஞ்சியை தட்டி போடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
அதில் கரைத்து வைத்துள்ள மோரை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து கலக்கிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.
பின்னர் வேகவைத்து எடுத்துள்ள பூசணிக்காய் துண்டங்களைப் போட்டு கிளறி மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
குழம்பு வெந்தவுடன், பொங்கி நுரைத்து வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. பத்மாசினி விஜயராகவன் அவர்கள். சமையலில் 40 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திரு அட்மின் அவர்களுக்கு,மோர் குழம்பின் தேவையானப் பொருட்களில் மிளகாய்த்தூள் உள்ளது, ஆனால் செய்முறையில் இடம்பெறவில்லை.
அரைத்த தேங்காய் விழுதை மோரில் கரைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்,அல்லது எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

தவறினை சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. அவசர அவசரமாக குறிப்பினை வெளியிட்டுவிட்டு அதனை சரிபார்க்காமலே விட்டுவிட்டேன். படங்களும் இடம் மாறியுள்ளன. பிழை பொறுத்தருளவும்.

மிளகாய்த்தூள் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதனை நீக்கிவிட்டேன். அரைத்த தேங்காய் கலவையை மோருடன் கரைத்து சேர்க்கவேண்டும். அதனையும் சேர்த்துவிட்டேன். இப்போது மோர்க்குழம்பு பிரச்சனையின்றி கொதிக்கும் என்று நம்புகின்றேன். :-) வேறு ஏதேனும் பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும்.

திரு அட்மின் அவர்களுக்கு, உடனே குறிப்பை சரி பார்த்ததற்க்கு மிக்க நன்றி. நம்மூட்ல இன்னிக்கி இந்த அருமையான மோர் குழம்பு தான்.திருமதி பத்மாசினி அவர்களுக்கு எனது பாராட்டையும், நன்றியையும், மறக்காமல் கூறும் படி கேட்டுக் கொள்கின்றேன் நன்றி.

Hi,

I tried this mor kuzhambu today & it turned out fantastic... this is my maiden attempt with mor kuzhambu & I am so glad it turned out yummy... Thanks a lot for the recipe, Mrs.Padmashini...:)

Hi

I tried this more kulambu...This was the first time I did more kulambhu...Super'a irunthuchu...
Thanks a lot Mrs.Padmashini...

the recipie turned out really good.

it was very tasty. Thanks a lot for giving these kind of traditional receipies.

shanmugapriya

Romba super aa irundadu amma.... nan samachi yenakae pudichudu.... romba nanri.