Left hand pain

Hi friends enaku left hand la pain oru 3days a iruku.thanga mudiyatha vali oru 2months munnadi vanthuchi ana annaike sari achu. Ippa thidirunu over pain a iruku kai kudachal kuda sollalam antha alavuku konja nala romba lazy a kuda iruku intha valinala ennala work pakka mudila. Correct shoulderla irunthu nadi thudipu pakura idam vara valikithu.dr ta pogamudiyatha situation la irukean.ithuku nama vetlaye vali sariyaga enna pannalam konjam sollunga.
Enga amma over weight potathala ippadi irukunranga.pain sari ana pothumnu iruku.

//dr ta pogamudiyatha situation la irukean.// முடியாது என்று சொல்லாமல், நீங்கள் போவது தான் நல்லது. இப்படிச் சொல்வதற்காக பயங்கரமாக கற்பனை செய்ய வேண்டாம். கை, அதுவும் இல்லத்தரசியின் கை, ஓய்வு கொடுக்க நினைத்தாலும் ஒரு அளவுக்கு மேல் முடியாது. கைதானே எமக்கு முக்கியம்! இங்கு நீங்கள் உங்கள் வலிகள், எந்த இடம், எந்த அளவு, எப்படியான வலி என்பதையெல்லாம் சரியாக விபரிக்க இயலாது. மருத்துவர் கேள்விகள் கேட்பார், அழுத்திப் பார்ப்பார், மடித்துப் பார்ப்பார். அவர் சொல்லும் அளவு இங்கு பதில் சொல்வோர் திருத்தமாகத் தீர்வு சொல்ல முடியாது.

//ithuku nama vetlaye vali sariyaga enna pannalam konjam sollunga.// ;)) இதற்கு வேறு யாராவதுதான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் 'அனுபவஸ்தர்கள்' ;) சொல்லும் பதில்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

//Enga amma over weight potathala// எடை கூடினால் கால் வலிக்கலாம். கையில் எடை போட்டிருக்கிறதா? சிலருக்குக் கை பருக்கும். அப்படியானால் வேதனை இருக்கலாம். நானும் சில சமயங்களில் இப்படி யோசித்திருக்கிறேன். கைக்குப் பயிற்சி வேண்டும் என்று தோன்றி இருக்கிறது. கை மெலிய ஆரம்பித்த பின் சற்று வேதனை குறைவானது போல் தெரிகிறது. என் எண்ணமாகக் கூட இருக்கலாம். ஸ்கிப்பிங் செய்யலாம் என்று நினைத்தேன். குளிர் காலம் முடியக் காத்திருக்கிறேன். செய்தாலும் அளவுக்கு மேல், அதனால் கை வலி கூடும் அளவு செய்ய கூடாது. :-) எனக்கு உதவிய வேறு சில விடயங்கள்... 1. சேலைக்கு ஜாக்கட்... கை - கையில் பருமனான பகுதிக்கு மேல் நிற்பது போல் தைத்தது. 2. உள்ளாடைகளின் தோள்பட்டையை இறுக்கமில்லாமல் வைத்திருப்பது. முடிந்த போது அகலமான தோட்பட்டை உள்ள உள்ளாடைகள், ஸ்ட்ராப்லெஸ் உள்ளாடைகள் என்று மாற்றி மாற்றி அணிந்தால் அழுத்தம் ஒரே இடத்தில் இல்லாமல் இடம் மாறும். இதனால் வலி கொஞ்சம் குறைவானது. 3. தூங்கும் போது கையை மடித்து வைக்காமல் தலையின் கீழோ உடம்பின் கீழோ வைக்காமல் நீட்டி வைத்துப் பாருங்கள். சில சமயம் கட்டிலிருந்து கீழே தொங்கவிட்டபடி உறங்குவேன். வேதனை குறைவாக இருந்திருக்கிறது. 4. லாப்டாப் பயன்படுத்துவதை, டைப் செய்வதைக் குறைத்தேன். தட்டச்சு செய்யாவிட்டாலும் கையை ஒரே நிலையில் வைத்திருப்பது பின்னால் வேதனையைக் கொண்டுவருகிறது எனக்கு. சில வாரங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தேன். இப்போது பெரும்பாலும் 'வாய்ஸ் டைப்பிங்' தான் செய்கிறேன்.

வேதனையாக இருக்கும் போது பனடோல் இரண்டு எடுப்பேன். 'வீட் பாக்' வைப்பேன். அந்த நேரத்துக்குக் கொஞ்சம் உதவுகிறது. மிகவும் அவசியம் என்கிற வேலைகளை மட்டும் செய்கிறேன். இங்கு குளிர்காலம். அதுவும் வேதனையைக் கூட்டுகிறது என்று நினைக்கிறேன். மற்றவர்களைப் பற்றிப் பார்ப்பதில்லை, எனக்குக் குளிர்ந்தால் கையுறைகள் மாட்டிக்கொள்கிறேன்.

உங்கள் வேதனைக்கான காரணங்கள் என்னுடையதிலிருந்து வேறாக இருக்கலாம்; தீர்வும் வேறாக இருக்கும். எனக்கு இன்ன பிரச்சினை என்று சொல்லாமல் பொதுவாக நான் பின்பற்றும் சில விடயங்களைச் சொல்லியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்தவற்றை / பொருத்தம் என்று தோன்றுபவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். என்னால் வாசனை வீசும் தைலங்கள் பயன்படுத்த இயலாது. தாங்க முடியாத சமயங்களில் ஜண்டு பாம் பூசுவது உண்டு. ஒரே விதமான நிலையில் கையை வைத்திருக்க வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டி இருந்தால் இடைக்கிடை வேறு வேலைகளைச் செய்துவிட்டு மீண்டும் தொடருகிறேன்.

//pain sari ana pothumnu iruku.// புரிகிறது. எனக்கு நான் செய்யும் வேலைகளைப் பொறுத்து, கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது. சமாளிக்க இயலாது போகும் போது மருத்துவர் வரச் சொல்லி இருக்கிறார். சரியானதும் என்னென்ன செய்தீங்க என்கிறதை வந்து சொல்லுங்க. உங்களிடமிருந்து எனக்கும் ஏதாவது டிப் கிடைக்கலாம்.

//ennala work pakka mudila.// என்ன வேலை பார்க்கிறீர்கள்? சொன்னால் வேறு ஏதாவது டிப் சொல்லலாம்.

‍- இமா க்றிஸ்

எப்படி இருக்கீங்க‌ நித்தி?

உங்கள் வலி புரிகிறது. தூங்கும் போது, புரண்டு படுப்பதால் அல்லது எதாவது வெயிட்டான‌ பொருட்களை தூக்கும் போது இந்த‌ மாதிரி ஏற்படும். பயம் வேண்டாம். வலி உள்ள‌ இடத்தில் வாலினி ஸ்ப்ரே அடித்து பாருங்கள். இல்லையென்றால் ஐயோடக்ஸ் வைத்து லேசாக‌ மசாஜ் செய்யுங்கள். லேசான‌ எக்சர்சைஸ் செய்து பாருங்கள். சீக்கிரம் சரியாகும்.

- பிரேமா

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
நீங்கள் சொல்வது சரி நான் இன்னும் 2 நாட்கள் பார்ப்பேன் வலி சரியாகவில்லை என்றால் டாக்டரிடம் போய் தான் ஆக வேண்டும்.நான் இருப்பது கிராமத்தில் அதனால் இவ்வளவு நாள் இப்படியே வைத்து கொண்டிருக்கிறேன்.
கையில் தான் சதை அதிகமாக உள்ளது.எடை அதிகமாக கையில் தான் உள்ளது. ஆனால் இடது கை மட்டும் வலிக்கிறது.என் வயது 27.எடை 73.என் உயரத்திற்க்கு இது மிக அதிக எடை.
நீங்கள் சொல்வது உள்ளாடை பிரச்சனை எனக்கு நான் மிகவும் இறுக்கமாக தான் போடுவேன்.
முடிந்த அளவு கை பருமனை குறைக்க பார்க்கிறன்.
நாடி துடிப்பு பார்க்கும் இடத்தில் இருந்து கை முட்டி வரை பயங்கர வலி.
நான் வீட்டில் உள்ள வேலைகள் தான் பார்ப்பேன்.அதை கூட சரியாக செய்ய முடியவில்லை.
சரியானதும் என்ன செய்து வலியை குறைத்தேன் என்று சொல்கிறேன்.
ஸ்பிரே,கோடாரி தைலம்,Hot warer Othadam எல்லாம் செய்து பார்த்தேன் சரியா வில்லை.தூங்கும் போது கையை நீட்டி அல்லது தொங்க போட்டு படுத்தும் பார்த்து விட்டேன் பலன் இல்லை.

நான் நன்றாக இருக்கிறன்.நீங்கள் எப்படி இருக்கீங்க
எல்லாமே ட்ரை பன்னி பாத்துட்டேன் பா exercise தவிர அதையும் செய்கிறேன் வலி குறைந்த பிறகு.வீட்டில் மோட்டார் ரிப்பேர் அதனால் வெளியில் இருந்து 10குடம் மேலாக தண்ணீர் தூக்கினேன் அதனால் தானானு சரியா தெரியலை.

நல்லா இருக்கோம் பா.

//10குடம் மேலாக தண்ணீர் தூக்கினேன் அதனால் தானானு சரியா தெரியலை// இருக்கலாம் பா. திடீரென்று கைக்கு வேலை வரும் போது அதுவும் மொத்தமாக‌ செய்ததால் கூட‌ இருக்கலாம். தென்னை மரக்குடி எண்ணெய் அப்படின்னு கடையில் கிடைக்கும் வாங்கி மசாஜ் செய்து பாருங்கள். முடிந்தவரை டாக்டரை பார்க்கவும். சீக்கிரம் சரியாயிடும்.

டேக் கேர் ..

- பிரேமா

கண்டிப்பாக டாக்டர்ட போகனும் பா வலி பொருக்க முடியலனா நீங்க சொன்ன எண்ணெய் இங்கு கேட்டு பார்க்கிறேன்.நன்றி பிரேம்ஸ்.

கேட்டு பாருங்க‌ பா.
என்னை என்னோட‌ பெஸ்ட் ஃப்ரண்ட் மட்டும் தான் ப்ரேம்ஸ்னு கூப்பிடுவாங்க‌. நீங்களும் கூப்பிட்டதுல‌ ரொம்ப‌ சந்தோஷம் நித்தி.

- பிரேமா

நீங்கள் நீர் தூக்கியதால் இருக்கலாம். டாக்டரிடம் அபிப்பிராயம் கேட்பதே நல்லது. சின்னதாக டிஷ்யூ டாமேஜ் ஆகி இருக்கலாம். நாள் கடத்தாமல் போங்க. ஆரம்பத்தில் சரியாக்க முயற்சி செய்தால் விரைவில் சரியாகும். நாள் கடத்தினால் சரியாகவும் நாள் எடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Enaku hand pain sari agiruchu..neengal iruvarum sonnathu pol thanni thukunuthu nalathan pain ku reason.ippa suthama illa pain.nan net la serach pannapa ladies ku laft hand pain iruntha heart attack 1monthkulla varum nu potrunthanga athan bayanthu poitean analum konjam carefulla irukanumnu thonuthu.

அய்யயோ மாரடைப்பு எல்லாம் வராதுங்க.. எடை ஓரு காரணம் தான்.. என் அம்மாவிற்கு கை வலி அடிக்கடி வரும்.. இதே போல் இடது கைதான்..

அதிக சதை கையில் இருக்கும் என் அம்மாவிற்கு.. அதனால் வேலை செய்தால் வலிக்கும்..

மேலும் சில பதிவுகள்