10 மாத‌ குழந்தைக்கு

dear all

10 மாத‌ குழந்தைக்கு ஈரல் தர சொன்னாங்க‌, பாப்பாக்கு நு தனியா செய்யனும் செய்முறை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்க

ஈரல் -100கிராம்க்கு செய்முறை..

ஈரலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும்..
சின்ன வெங்காயம் ஐந்து பொடியாக நறுக்கி கொள்ளவும், மிளகாய் இரண்டு போதும்..
மிளகு பொடி-1/4 ஸ்பூன்
சீரக பொடி-1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4ஸ்பூன்
உப்பு கொஞ்சம்

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்..
வெங்காயம் நல்ல வதங்கியதும் தூள் வகைகள் அனைத்தும் சேர்த்து கிளறி விடவும்..
பின் ஈரலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும் வரை வேக விடுங்கள்..

ஈரல் இலசாக இருந்தால் சீக்கிரம் வெந்து விடும்..
இது சுவையாக இருக்கும்..

செய்து கொடுத்து பாருங்கள்..

thanku akka ,

மேலும் சில பதிவுகள்