தோழிகளே உதவுங்கள்

எனக்கு நீர்கட்டி பிரச்சனை இருக்கிறது, நான் தொடர்ந்து டாக்டர் சொல்லியபடி மாத்திரை எடுத்து கொண்டு இருக்கிறேன்,இந்த எனக்கு நாள் வரவில்லை, 41 நாள் ஆகிறது, அவர் கூட சேர்ந்து மறுவாரம் பால் போல வெள்ளை திரவம் முன்று நாள் ஆனது, 32 நாள் வரவில்லை, நெஞ்செரிச்சல் நாக்கு வறட்சி ஆகிறது, urine frequenta ஆகிறது,, ஏன் என்று தெரியவில்லை, தண்ணீர் தாகம் அதிகம் , இரவில் துாங்க முடியவில்லை, urine அடிக்கடி போகிறேன், பசிக்கிறது, சாப்பிடவில்லை என்றால் அடி வயறு நாள் வருவது போல் வலிக்கிறது ஆனால் நாள் வரவில்லை,சாப்பிட்ட பஇறகு வலி இல்லை, மார்பு காம்பு மட்டும் விரைத்து தொட்டால் புண் போல வலிக்கிறது, ஏன் எதனால் காலையில் check பண்ணினேன் negative,, எனக்கு ஒரு மணி ஒரு தடவை urine போகிறேன் பின்பு எப்படி check செய்வது, நான் கர்ப்பமாக இல்லை யா pcod பிரச்சனை தானா,,

ok sisr...but enaku condact mudinjathum urine vara madhiriye iruku...evolo neram kalichu wash pannalam..??

Oru 1/2 hour iruntha pothum but apdiye thoonkita romba nallathu athigama sheak pannathinga unga husband um contact mudinjathum udane ezhamal ore 10 minutes aprum medhuvaaga eduka sollunga unga iduppukku kizha pellow vainga then after contact ore 5 minutes la eaduthuduinga pothum, ninga rendu perum first le bath room pour vanthu irunga aprum bathroom varathu rendu perum discussion pani santhoshama irunga

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Kuzhanthai vendum nu ninachte panna avathu so relax ah enjoy pani panunga happy irunga rendu perukum problem ilatha vara kandipa sikrama gud news varum

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

ok sisr...romba thanks..nenga romba porumaiya ans panurenga...i like u sisr...

Hmm ok ma take care

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

எனக்கு தைராய்டு ஹார்மோன்(6.5)prolactin ஹார்மோன் நார்மலுக்குமேல அதிகமானதால் டப்ளேட்ஸ் எடுத்தேன் ..அப்புறம் conceive ஆயிட்டேன் ..இப்போ prolactin hormone test எடுக்க தேவ இல்ல அது இப்போ அதிகம் ஆக தன செய்யும்னு சொன்னாங்க ..
ஆனா தைராய்டு test எடுத்து பார்த்ததால் நார்மல் விட ரொம்பா கம்மி (0.2)ஆயிடுடுச்சு அதனால அரை மாத்திரை மட்டும் எடுக்க சொன்னாங்க.அப்படி half tablet எடுத்த மயக்கம் வந்து அடிக்கடி விழுந்துடுறேன் இரண்டு நாலா படுத்த படுக்கை ஆகி விட்டேன் .நான் சாக போறேனா அப்படினு நெனைக்குற அளவுக்கு கொண்டு பொய் விட்டுடுச்சு ...எதுக்கு அப்படி மருந்தை குறைச்சாங்கன்னு தெரில ..நான் மாத்திரை எடுக்காமல் விட்டு இருந்த என்ன ஆயிருப்பேனு தெரில ..இன்னைக்கு ஒரு மாத்திரை50 mgஎடுத்தேன் நல்லா இருக்கேன் .. நான் வேற மருத்துவரை பார்க்கலாமா ? தைராய்டு கம்மி ஆனாலும் அதிகமானாலும் மாத்திரை எப்படி கம்மி பண்ணுவாங்க ..இதை பத்தி detaileda யாருக்காவது தெரியுமா ..அவங்க பட்டுனு மாத்திரை கம்மி பண்ணி கொடுத்ததால் pregnancy naalathan இப்படி இருக்குனு paduthey இருந்துருப்பேன் .. நானா ஒரு வேலை மாத்திரையினால இருக்குமோனு கண்டுபுடிச்சி ஒரு மாத்திரையை இன்னைக்கு போட்டேன் ..

hai sis enaku ithai pathi cleara theriathu but konjam therium, neenga conceive agurathuku munnadi ungaluku thyroid jasthiya erunthurukum athanala than ungaluku tablet dosage jasthi panni 1tablet sapda sollirupanga. But Epam thyroid kommy anathunala half tablet sapda sollirukanga. Thyroid evlo erukutho athuku etha Mari than Dr tablet sapda solluvanga so Dr consult pannitu 1tablet sapdalamanu kelunga bcoz neenga Epam conceive erukurathala ethai pannalum Dr consult panni pannuga sister. Ungaluku thyroid kommy anathunala Dr per day 25mg pothumnu sollirukanga neenga 50mg edukuringa. So Dr pathu mayagam varuthunu sollunga.

B. Radha

நன்றி ராதா .. மாத்திரை அரை எடுத்து பார்த்துட்டேன் ...என்னால முடியாம போய்டுச்சு அதன் இன்னைக்கு ஒன்னு போட்டேன் ..இப்போ நல்லா இருக்கேன் ..எனக்கு என்ன பண்றதுனே தெரிலப ..
மயக்கமான அப்படியே சுழன்று படுத்து கொள்கிறேன் உடம்பு என்னோமோ செய்யுற மாதிரி இருக்கு ..என்னால எழுந்து நிற்க முடியாத நிலை ...

Enaku koda first metformin tablet saptum pothu rombha mayakkam and thoogam vanthuchi but Epam varathu illa ithu Ellame namoda ennam than . Neenga daily tablet sapta sapta unga udambu Athai accept pannikum .so ungalukk doubt eruntha neenga Dr consult panni saptunga 8yrs kalichi conceive agirukinga ethai pannalum yosichi pannuga.

B. Radha

//தைராய்டு test எடுத்து பார்த்ததால் நார்மல் விட ரொம்பா கம்மி (0.2)ஆயிடுடுச்சு அதனால அரை மாத்திரை மட்டும் எடுக்க சொன்னாங்க.// அவங்க‌ டெஸ்ட் எடுத்த‌ பின்னால் தானே குறைச்சாங்க‌!!

//அப்படி half tablet எடுத்த மயக்கம் வந்து அடிக்கடி விழுந்துடுறேன்// தைராய்ட் மாத்திரைதான் பிரச்சினை என்று எப்படி நிச்சயமா சொல்றீங்க‌? முதல்முதலாக‌ மாத்திரை எடுக்கத் தொடங்கும் முன் நீங்கள் இப்படி படுத்த‌ படுக்கையாக‌ இருக்கவில்லையல்லவா? அதனால் இப்போது வேறு காரணம் இருக்கலாம். நீங்களாக‌ மாத்திரை அளவை மாற்றுவது நல்லதாகப் படவில்லை. இப்போ கர்ப்பமாக‌ இருப்பதாகவும் சொல்கிறீர்கள். //மயக்கம் வந்து அடிக்கடி விழுந்துடுறேன்// இது கர்ப்ப‌ காலத்தில் தைராய்ட் பிரச்சினை இல்லாத‌ பெண்களுக்கும் இருப்பது உண்டே!

//இரண்டு நாலா படுத்த படுக்கை ஆகி விட்டேன் .நான் சாக போறேனா அப்படினு நெனைக்குற அளவுக்கு கொண்டு பொய் விட்டுடுச்சு// பயம் ஒரு காரணமாக‌ இருக்கலாம். கர்ப்பமாக‌ இருக்கும் போதும் சில‌ விதமான‌ பயங்கள் வருவது உண்டு.

//எதுக்கு அப்படி மருந்தை குறைச்சாங்கன்னு தெரில// புரியல‌. நீங்க‌ தானே டெஸ்ட் எடுத்துப் பார்த்து குறைச்சதாகச் சொன்னீங்க‌!! இப்போ தெரியல‌ என்கிறது எப்படி!!

இப்போ அறுசுவைல‌ கேட்கத் தோணுது. மாத்திரை போட‌ முன்னால‌ வந்து ஏன் கேட்கல‌! :‍)

//நான் மாத்திரை எடுக்காமல் விட்டு இருந்த என்ன ஆயிருப்பேனு தெரில// ஒன்றும் ஆகி இருக்க‌ மாட்டீங்க‌. எனக்கு நீங்க‌ செய்றது சரியாத் தெரியல‌. எந்த‌ மருந்தையும் நம் இஷ்டத்துக்கு கூட்டிக் குறைச்சு எடுக்கப்படாது; அதுவும் கர்ப்பமா இருக்கும் போது. நீங்க‌ பண்ற‌ காரியங்கள் உங்கள் குழந்தையையும் சிரமப்படுத்தலாம் கண்ணா. அது இப்போ மட்டும் இருந்துட்டுப் போகப் போறது இல்லை. இது குழந்தை உடலுறுப்புக்கள் உருவாகும் காலம். நீங்க‌ சரியானதைச் செய்றது முக்கியம்.

//இன்னைக்கு ஒரு மாத்திரை50 mgஎடுத்தேன் நல்லா இருக்கேன்// நீங்க‌ டாக்டர் இல்லைல்ல‌!! //நான் வேற மருத்துவரை பார்க்கலாமா?// அதே டாக்டரைக் கூடப் பார்க்கலாம். அவங்க‌ கொடுக்கிறது ஒரு கெஸ்ஸிங்ல‌ தான். டாக்டர் மேல் தப்பு இல்லை. போய்க் கேட்டு இருக்கலாம். அதை விட்டு நீங்களா டோஸ் மாற்றினது நிச்சயம் தப்பு.

//தைராய்டு கம்மி ஆனாலும் அதிகமானாலும் மாத்திரை எப்படி கம்மி பண்ணுவாங்க// முதலில் ப்ளட் டெஸ்ட்டில் தெரிஞ்சுப்பாங்க‌. மாத்திரை அளவு... கெஸ் ஒர்க் தான். ப்ளட் டெஸ்ட் முடிவு இத்தனை என்று ஒரு அளவைக் காட்டலாம். ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் நார்மல் தைராய்ட் அளவு என்கிறது வேறுபடும். டோஸ் கொடுத்து, மாற்றி... ட்ரையல் அண்ட் எரர் தான். டாக்டர் மேல் தப்பு சொல்ல‌ முடியாது.

//அவங்க பட்டுனு மாத்திரை கம்மி பண்ணி கொடுத்ததால் pregnancy naalathan இப்படி இருக்குனு paduthey இருந்துருப்பேன்// இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நீங்க‌ ரிஸ்க் எடுக்கிறீங்க‌. உங்க‌ குழந்தை வாழ்க்கையோட‌ விளையாடுறீங்க‌ கண்ணா. தப்பு இது.

//நானா ஒரு வேலை மாத்திரையினால இருக்குமோனு கண்டுபுடிச்சி ஒரு மாத்திரையை இன்னைக்கு போட்டேன்// எப்பிடிங்க‌ கண்டுபிடிச்சீங்க‌!! மாஜிக் தெரியுமா!! சரி, கண்டு புடிச்ச‌ நீங்க‌, உங்க‌ கண்டுபிடிப்பை டாக்டர்ட்ட‌ போய் சொல்லி சண்டை போட்டிருக்கணுமா இல்லையா! அதை விட்டு பாட்டுக்கு கூட்டிப் போட்டுட்டு பிறகு ஏதாச்சும் ஆச்சுன்னு போனா டாக்டர் என்ன பண்ணுவாங்க‌! போட்ட‌ மாத்திரைகளை ரத்தத்தில் இருந்து கழுவியா எடுக்க‌ முடியும்!! ஒவ்வொருத்தர் கர்ப்பம் ஆக‌ எத்தனை பாடுபடுறாங்க‌! உங்களுக்கு விளையாட்டா இருக்கா!!

//நான் மாத்திரை எடுக்காமல் விட்டு இருந்த என்ன ஆயிருப்பேனு தெரில// சாகும் அளவு போயிராது. நீங்க‌ மாத்திரை எடுக்க‌ ஆரம்பிக்கும் முன் தைராய்ட் அளவு சமனில்லாமலிருந்தும் உயிரோடு இருந்தீர்கள் அல்லவா! நான் சொல்ல‌ வருவது புரிகிறதா! இது அந்த‌ அளவு பிரச்சினையான‌ விடயம் அல்ல‌. ஆனால் உடற்தொழிற்பாடுகள் சரியாக‌ இருக்க‌ வேண்டுமானால், அதுவும் இப்போ நீங்கள் இருக்கும் நிலையில் இந்த‌ விளையாட்டு பிரச்சினை ஆவது தெரிய வராமலே பிரச்சினையாகலாம். பயமுறுத்துறேன் என்று நினைக்காதீங்க‌. உங்களுக்கு யாராவது உண்மையைப் போட்டு உடைத்தால்தான் ஒழுங்காக‌ இருப்பீங்க‌ என்று தோணுது.

நீங்க‌ நினைக்கிறது சரியாகவே இருக்கட்டும். இருக்கலாம். ஆனால் நீங்களாக‌ உங்கள் இஷ்டத்துக்கு மருந்து அளவை மாற்றிப் போடுறது பெரிய‌ தப்பு. அடுத்த‌ டோஸ் எடுக்க‌ முன்னால‌ டாக்டர்ட்ட‌ போய்க் கேளுங்க‌. சில‌ வேளை நீங்க‌ நினைக்கிறதையே அவங்களும் நினைச்சு பழைய‌ டோஸுக்கு மாறச் சொல்லலாம். ஆனால் அதன் பிறகு, இந்தத் தடவை இப்படி ஆனதால‌ நீங்க‌ நினைக்கிறதெல்லாம் சரி என்கிற‌ மாதிரி நினைச்சு உங்க‌ இஷ்டத்துக்கு மருந்து எடுக்க‌ ஆரம்பிக்கப்படாது. பத்திரமா இருங்க‌. இன்னொரு விஷயம்... இதைப் படிச்சுட்டு குழந்தை நல்லா இருக்குமா என்று கவலைப்பட‌ ஆரம்பிக்காதீங்க‌. நடந்து முடிஞ்சதை ரிவர்ஸ் ஆக்கிக்க‌ முடியாது. ஒரு நாள் டோஸ்ல‌ ஒரு பிரச்சினையும் ஆகி இராது. எல்லாம் சரியாக‌ இருக்கும். பயப்படத் தேவை இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்