கோதுமை மாவு பரோட்டா (சுருள் பரோட்டா)

தேதி: March 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 1/2 கிலோ,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.


 

கோதுமை மாவு, சர்க்கரை, ஆப்ப சோடா, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
நன்கு அடித்து பிசைந்து 1/4 மணி நேரம் வைக்கவும்.
உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து, லேசாக எண்ணெய் தடவி, புடவை கொசுவம் வைப்பது போல் மடிக்கவும்.
மடித்ததை வட்டமாக சுருட்டி கொள்ளவும்.
சற்று கனமாக தேய்த்து தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் செல்விஅக்கா, இந்த சுருள்
கோதுமை மாவு பரோட்டா
செய்தேன்.ரொம்ப நல்லா SOFT A இருந்தது. மிக்கந்ன்றி.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

வணக்கம் செல்வியக்கா காலையில் தான் இந்த பதிவைப்பார்த்தேன். இந்த கோதுமை மா பரோட்டா மிகச்சுலபமாக இருந்தது. உடனே செய்து பார்த்துவிட்டு பதிவும் எழுதினேன். நன்றி .அன்புடன் அம்முலு

அன்பு ஜெயலக்ஷ்மி & அம்முலு,
இருவரின் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கோதுமை சுருள் பராட்டா செய்தேன் மேடம், ரொம்ப நல்லா வந்தது