37 days weakly positive doubt - 34199 | அறுசுவை மன்றம்
forum image
37 days weakly positive doubt

Hi friends.enaku last period June 25th vanthichu.yeasterday test panni parthen 2 Kodu vilunthuchu.first Kodu lighta second Kodu darka irukku.doctora parthom avanga oru thadava test pannga athulaum athe mathithaan vilunthuchu.weakly positive nu sonnga 15 daysku medicine thanthanga.scan pakkala. Weakly positive na enna plz sollunga.


Hi vaji

Nothing to worry. Tab podunga. 15 days kalichu dr consult panunga

--

vaji

வாழ்த்துக்கள்!! வீக்லி பாசிட்டிவ் அப்படின்னாலும் பாசிட்டிவ் தான். நீங்கள் 45 நாட்களுக்கு அப்புறம் செக் பண்ணி பாருங்க‌. நல்ல‌ லைன் டார்க்கா இருக்கும்.

எனக்கு எப்படி விளக்குறதுன்னு புரியல‌.. தெரிந்த‌ தோழிகள் சொல்வாங்க‌.

வாழ்க‌ வளமுடன்
பிரேமா உலகராஜ்
~~~~~~~~~~~~~~~~
❤❤❤♥ எங்கள் வீட்டு இளவரசி... யாழினி ❤❤❤♥

வஜி

வீக்லி பாசிட்டிவ் என்றால் தாமதமாக கருவுற்று இருக்கிறீர்கள்.. ஒரு வாரம் கழித்து பரிசோதனை செய்து பார்த்தால் stronglyபாசிட்டிவ் வரும்..

அதுவரை குழப்பமின்றி மகிழ்ச்சியுடன் பிடித்ததை சாப்பிடுங்கள்..
உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்..

வஜி

முதலில் வாழ்த்துக்கள், வீக்லி பாஷிட்டிவ் பற்றி தெரியவில்லை ,அனா லைட் கலர்ல கோடு வந்தா 45 நாள்ல செக் பன்ன சொல்லுவாங்க‌ , மெடிசன் சாப்டுங்க‌, நல்லா ஹெல்தி ஃபுட் டா எடுங்க‌,

அன்புடன்
மஞ்சுளா கண்ணண்

Vaji

Hi vaji. Hcg என்கிற கர்ப்ப ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது 2 கோடும் தெளிவாக தெரியும். 45 நாளில் சோதித்து பாருங்கள். இப்பொழுது நீங்கள் கர்ப்பம் தான். மனதை போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை தவறாமல் போடுங்கள். உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்

வீக்லி பாசிட்டிவ் விளக்கம் தேவை

//தாமதமாக கருவுற்று இருக்கிறீர்கள்// இதற்கு அர்த்தம் புரியவில்லை.

எனக்கு தெரிந்தவரை நல்ல‌ ஸ்ட்ராங்காக‌ ஆவதற்குள் பரிசோதித்திருக்கிறார் என்பது அர்த்தம் போல‌ தோன்றுகிறது.

ப்ளீஸ் புரியவைங்க‌.

வாழ்க‌ வளமுடன்
பிரேமா உலகராஜ்
~~~~~~~~~~~~~~~~
❤❤❤♥ எங்கள் வீட்டு இளவரசி... யாழினி ❤❤❤♥

weekly positive

நான் என் முதல் குழந்தைக்கு 37,38,45 நாட்களில் பரிசோதனை செய்து பார்த்தேன்.. எல்லாம் நெகட்டிவ் தான்..

மருத்துவமனை 48ஆம் நாளில் சென்றேன்.. அங்கு செய்த பரிசோதனையில் கோடு லேசாக தெரிந்தது.. எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.. இவ்வளவு நாட்கள் இந்த லேசான கோடு கூட தெரியாமல் போனாதனால்..

பின் அதை நர்ஸ் டாக்டரிடம் காட்டினார்.. டாக்டர் weekly positiveனு சொன்னார்.. அதாவது 50% கர்ப்பம்,50% உறுதி இல்லை என்றார்..

அப்போது எனக்கு இருந்த சின்ன சின்ன அறிகுறிகள் சொன்னேன்.. அதை கேட்டதும் டாக்டர் 99% கர்ப்பம்.. பத்து நாட்கள் கழித்து பரிசோதனை செய்து பாருங்கள் என்றார்..

55ஆம் நாள் மீண்டும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து பார்த்தோம்.. கோடு தெளிவாக தெரிநதது..

அப்போது தான் strongly positiveனு டாக்டர் சொன்னார்.. அடுத்து அடுத்து எடுத்த ஸ்கேன்ல 12நாட்கள் வளர்ச்சி குறைவு என்று வந்தது..

ஒருவழியாக 7ஆம் மாத ஸ்கேன்ல நீங்கள் தாமதமாக கர்ப்பம் உண்டாகி உள்ளீர்கள்.. அதனால் டெலிவரி 15நாட்கள் தள்ளி போகும் என்று கூறி March 2கொடுத்த தேதியை மாற்றி April 10க்கு மேல் என்று சொன்னார்..

இப்போது பிரேமாவிற்கு நன்றாக புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்..

Dear sister indusha

Dear sister Indusha//அப்போது எனக்கு இருந்த சின்ன சின்ன அறிகுறிகள் சொன்னேன்//athu enna arikurikalnu sollunga PLZZ...

Vaji

First congrats sis. Symptoms ellarukum ore mathiri irukathu illa konjam vithyasapatum.

என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

வஜி

அதாவது கீழ் முதுகு வலி இருந்தது..
மாதவிடாய் தேதியில் மாதவிடாய் வருவது போல இருந்தது.. ஆனால் மாதவிடாய் வரவில்லை.. அந்த மூன்று நாட்கள் முடிந்ததும் மாதவிடாய் முடிந்த உணர்வு ஏற்பட்டது.. நார்மலாக ஆகி விட்டேன்..

ஒவ்வொருவரின் உடல்வாகு வேறு.. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருப்பது சந்தேகம் தான்..

குழப்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருங்கள்.. நல்லதே நடக்கும்..