Mana vali

Enaku 7 month baby iruku. En husband engineer ah irukaru na msc padikaren .marriage agi 2 year achu .en husband konja nala ennai adikaraga .daily um adikarga .naga join family .athai mama nan en husband baby irukom .moonu sis in laws marriage agiruchu .family problem ila .personal problem dhon en husband alone ah irukanum nu ninekirar .join family la idhu mudiyadhu .enaku rommba kastama iruku and baby iruku nu soliten apolarundhu ore problem. Enga athai mama ooruku poitaga yesterday apo enna nalal adichitar enga street and neighbours elam vandhutaga ennala mudila .amma kitta sollam na problem perusagidum bayam ah iruku pls suggestion give0

இதற்கு முன் நீங்கள் ஒரு இழை ஆரம்பித்து ,கேள்வி வைத்து ,யாரும் பதில் சொல்லாத காரணத்தால் அழித்த நியாபகம் இருக்கு..

உங்களுக்கு இப்பவும் ஏமாற்றம் வேண்டாம்.. எனக்கு தோன்றியதை சொல்கிறேன்..

கூட்டு குடும்பமாக இருந்தால் கணவன் மனைவி அடிக்கடி உறவு வைத்து கொள்ள கூடாது என்று எந்த விதிமுறைகளும் இல்லை..

வாழ வேண்டிய நாட்கள் தான்.. கருத்தடைக்கு ஏதேனும் ஒன்று செய்து விட்டு மகிழ்ச்சியாக இருங்கள்..

எதற்காக உங்கள் கணவர் அடிக்கிறார் என்று நீங்கள் குறிப்பிடவில்லை.. நான் உங்கள் முந்தைய இழையை படித்ததால் பதில் தந்து உள்ளேன்..

உங்கள் கணவர் உங்கள் வாழ்க்கை.. வேறு ஏதாவது உடல் ரீதியாக நீங்கள் சங்கடமாக உணர்ந்தால் உங்கள் கணவரிடம் எடுத்து கூறுங்கள்..

நிறைய கூட்டு குடும்பங்களில் கணவன் மனைவியை சேரவே விட மாட்டார்கள்..
உங்களுக்கு குடும்ப பிரச்சினை இல்லை என்று தெளிவாக கூறுகிறீர்கள்..

பிரச்சினை உங்கள் மனதில் தான் உள்ளது.. நீங்கள் தான் தீர்வு..

குழந்தை பிறந்து ஏழு மாதங்கள் ஆகி விட்டது. இனி உடற்பிரச்சினைகள் எதுவும் இருக்கக் கூடாது. //msc padikaren// படிப்பு உங்கள் மணவாழ்க்கையைப் பாதிக்காமல் நேரத்தைத் திட்டமிடுங்கள்.

//en husband konja nala ennai adikaraga .daily um adikarga// இதை முதல்ல‌ சொல்றீங்க‌. :‍) ஏன் என்கிறதைக் கடைசில‌ சொல்றீங்க‌.

நீங்க‌ எதற்காக‌ இத்தனை விடயங்கள் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. சொல்லியிருக்கும் பலது பிரச்சினை இல்லாத‌ விடயங்கள். //naga join family// ஆனால் எல்லோரும் ஒன்றாகக் கூடத்தில் உறங்குகிறீர்களா? உங்களுக்கு என்று ஒரு அறை கூடவா இல்லை!

//personal problem dhon// என்ன‌ ப்ராப்ளம் என்று சொன்னால் ஏதாவது அபிப்பிராயம் சொல்லலாம். என்ன‌ பர்சனல் பிரச்சினை? வெளிப்பைடையாகச் சொன்னால்தான் ஏதாவது தீர்வு இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

//en husband alone ah irukanum nu ninekirar// நீங்கள் எதற்காகக் கலியாணம் செய்துகொண்டீர்கள்? சற்று சிந்தித்துப் பார்க்க‌ வேண்டும்.

//join family la idhu mudiyadhu// அப்படியானால் எப்படி ஒரு குழந்தை கிடைத்தது!!

அதற்கு முடியும் என்றால் இப்போதும் முடியும். எல்லோரும் கேட்கிறார்கள் எனும் போது ஒரு குழந்தை கிடைத்தால் நன்றாக‌ இருக்கும் என்று தோன்றியது இல்லையா! குழந்தை கிடைத்ததும் உங்கள் காரியம் ஆகிற்று என்று தவிர்க்க‌ நினைக்க‌ வேண்டாம். முடியாது என்பது இல்லை. ஏற்கனவே முடிந்திருக்கிறது. இப்போது உங்களுக்கு வேறு ஏதோ பிரச்சினை இருக்கிறது. மனம் விட்டுச் சொன்னால் யோசனை சொல்லலாம்.

//enaku rommba kastama iruku// என்ன‌ க‌க்ஷ்டம் கண்ணா?

//and baby iruku nu soliten// இருந்தால் என்ன‌!! இதில் என்ன‌ சிக்கல் இருக்கிறது? அது முழு இரவும் விழித்துக் கொண்டு இராது.

//apolarundhu ore problem.// பிரச்சினை நீங்கள் தான். உங்களுக்கு உடலில் ஏதாவது மாற்றங்கள் பிரசவத்தின் பின்பு இருக்கிறது, அதனால் உடலுறவு சிரமமாக‌ இருக்கிறது என்றால் மருத்துவரிடம் பேசுங்கள். சரியாக்க‌ வழி சொல்லுவார். அதை விட்டு சாக்குச் சொல்லக் கூடாது. அடுத்த‌ குழந்தை இப்போது வேண்டாமென்றால் இருக்கவே இருக்கிறது கருத்தடை மாத்திரைகள்.

நீங்கள் இப்படி ஒதுங்கி இருக்க‌, உங்கள் கணவர் வேறு யாரையாவது நாடினால் என்ன‌ செய்வீர்கள்!

//Enga athai mama ooruku poitaga// இப்போ யாரும் இல்லை. இப்போதும் அடம் பிடித்தால்! அடிப்பது சரியெனவில்லை நான். நீங்கள் அந்த‌ மனிதரைத் துரத்தி விட்டு பிறகு வருந்தாதீர்கள்.

//yesterday apo enna nalal adichitar enga street and neighbours elam vandhutaga// இந்த‌ அளவுக்குப் போக‌ விடாமல் அட்ஜஸ்ட் பண்ணிப் போயிருக்கலாம். //ennala mudila// என்ன‌ முடியல‌! பிழை உங்கள் பேரிலும் இருக்கிறது. //amma kitta sollam na problem perusagidum// ஆகாது. நல்ல‌ அம்மாவாக‌ இருந்தால், தன் மகளின் வாழ்க்கை நன்றாக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைக்கும் அம்மாவாக‌ இருந்தால் முதலில் உங்களைத் தான் திட்டுவாங்க‌. பிறகு எதற்காகத் தவிர்க்க‌ நினைக்கிறீர்கள் என்பதை விசாரித்தறிந்து அதைத் தீர்க்க‌ வழி தேடுவார்கள். அதை விட்டு உங்கள் கணவர் & அத்தை மாமாவோடு சண்டைக்குப் போனால்... உங்களுக்குத் தான் பாதிப்பு.

//bayam ah iruku// என்ன‌ பயம் என்று சொல்லுங்க‌? ஏன் தவிர்க்க‌ நினைக்கிறீர்கள்? அத்தையும் மாமாவும் நிலமை புரிந்து கூட‌ உங்கள் இருவரையும் தனியே விட்டுப் போயிருக்கலாம். கிடைத்த‌ சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தியிருக்க‌ வேண்டும் நீங்கள்.

‍- இமா க்றிஸ்

Physical relationships thon problem .baby ku 7 months dhon agudhu .one day ,day time la ipdi erundhathuku enga athai enkuda sariya mugam kuduthu pesala.so apolarundhu enaku inimel ipdi iruka kudadhu nu nineichen .na marriage agi 4 months conceive agiten apolarundhu no physical relationships .apo en husband indha mathiri ila .ipo dhon apdi panrar .en sis in law solraga marriage agi konja nal dhon nee avan kuda irundha apram conceive ,delivery nu amma veetuku poita ,ipovum avana avoid panna innum fight thon varum nu solraga .na en baby ku 3 months irukum bodhey amma veetlarundhu vandhen ipo 7 months mudiya podhu innum pogala .na en amma veetuku potuma nu keten en husband vida matarar .enga amma Kurta solli enga athaikitta ennaiyum baby um anupi vaika ketka sonnen avaga poitu vara sonnaga .but en husband adhu ilama ennala iruka mudila nee ponalum na weekend vandhuruven nu solrar .enaku age 23 dhon aguthu normal delivery achu 3 rd month larundhu physical relationships irukom ipolam romba mudila
Baby ku feed panren night late ah dhon thuguran .clg leave potu potu poren onnum mudila

Na indha time amma veetuku pona one month apram dhon varuven .enaku romba mana kastama iruku Sunday night en husband pannadha nenecha .but sorry solraga romba anba nadakaraga endha time la dhon ipdi behave panraga .enga anni veedu konja pakkam dhon avaga vandhutaga ila na enna nadadhurukum neneikave mudila .enga anni avala na kutitu poranu sonnadhuku baby tharamaten door lock potaga apram romba neram pesi anni en kudave irundhaga.romba gentle family naga but en husband mattum en ipdi panrar nu therila .enaku idha share pannave pidikala but enaku oru arudhol kaga idhula share pannen.thanks for ur reply

5 months ah Daily um physical relationships irukom last week sis in law and family vandhaga apo en husband panradha pathutu ennai vittutu avaga veliya poitaga eveng en son um thukittu poitaga .en husband solrar ennai pathi avagaluku nala theriyum nu .enaku intercourse vechukum bodhu romba pain ah iruku na soliten but no result .enga athai en sis in law kitta solraga pavam ava romba kasta padra nu en sis in law solraga avaga amma veetuku anupidu ma konja naluku nu .ennoda kastam veliya share pannika mudila Amma .en son romba active ah irukan avan valarathukulla en husband mind change aganum .enaku en baby niyabhagam irukum avan mother feed pannuven .veliya thukitu poita enna panranonu sonnen en husband nee concentration ila nu solli adichutaga .en kastam yarukum vara kudadhu

Unga problem enaku puriyudhu sis .day time la alon ah irukaradhu join family la periya problem dhon sis .neega feel pannathiga sariyagidum.enakum indha problem Irundhuchu second baby conceive agiten apram transfer agiduchu en husband ku .intercourse vechukum bodhu romba pain ah thon irukum enaku adi thaiyal pottaga first delivery la so romba kasta patten .first baby conceive anadhu larundhu no physical relationships .but delivery ku apram romba kasta patten sis.enaku 25 age la three babys.life la elam andha andha situation la samalikara theriyam varum .so don't worry sis

//Physical relationships thon problem// அதுவா அல்லது ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்ளாதது ப்ராப்ளமா? //day time la// அதுவும் இரவுகளும் ஒன்றாகுமா? //marriage agi 4 months conceive agiten apolarundhu no physical relationships// இதனால் தான் மற்றச் சின்னவர்களுக்கு மணமானதும் குழந்தை கிடைக்கும் முன் வாழ்க்கையை அனுபவியுங்கள், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளுங்கள் என்கிறேன்.

//ipovum avana avoid panna innum fight thon varum nu solraga// அதைத்தான் நானும் சொல்கிறேன். கர்ப்ப காலத்திலும் நீங்கள் முற்றாகத் தவிர்த்திருக்கத் தேவையில்லை. //na en baby ku 3 months irukum bodhey amma veetlarundhu vandhen// இப்படி ஒவ்வொரு பிரசவத்திற்கும் தாய் வீட்டிற்குப் போவதும் வருவதும் கூட அவசியமில்லாதது. உடலுறவை விடுங்கள். அத்தனை மாதமும் இருவருக்கும் சரியானபடி ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசுவதற்குக் கூட சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. நீங்கள், குழந்தை & அம்மாவின் பராமரிப்பு என்று சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். அந்தக் காலம் முழுவதும் உங்கள் கணவர் தனித்தே தான் இருந்தார். ஸ்ட்ரெஸ்சில் இருந்திருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் கணவர் அருகே இருப்பது, அவருக்கும் குழந்தை வளர்ச்சியில் பங்கு இருப்பதைப் புரிய வைக்கும். உங்கள் சிரமங்களைப் பார்க்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கும். உங்களை எப்படி நடத்தலாம், எப்படி நடத்தக் கூடாது என்கிற புரிதலைக் கொடுத்திருக்கும். நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம்... நீங்கள் அம்மாவீட்டில் உல்லாசமாக இருக்கிறீர்கள் என்பது மட்டும் தான். இப்போது உங்களை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே அவரைப் புரிந்துகொள்ளவில்லை.

//baby ku 3 months irukum bodhey amma veetlarundhu vandhen// இது!! உங்கள் கணவர் தன் குழந்தை பிறந்தநாளிலிருந்து 3 மாதங்கள் தந்தை (இதுவும் தாய்மை போல்தான்.) என்கிற உரிமையை மறுப்பது போல் தான். கணவரும் இல்லை; தந்தையும் இல்லை; வெறும் தனி மனிதன்! தினமும் ஃபோன் செய்து அன்பாகப் பேசினீர்களா? இல்லையென்று தோன்றுகிறது. பறவைகள் கூடு கட்டி தம் குஞ்சுகளைப் பராமரிப்பது பற்றிய வீடியோக்கள் யூட்யூபில் கிடைக்கும். பாருங்கள். ஆண் பறவைகள் அத்தனை பொறுப்பாக பராமரிப்பு வேலையில் பங்குகொள்ளும். நீங்கள்... உங்கள் அம்மாவின் கையில் சிரமமான காலத்தை விட்டிருக்கிறீர்கள்.

// ipo 7 months mudiya podhu innum pogala // போகத் தேவையில்லை. தேவைகள் வந்தால் போங்க. அல்லாவிட்டால் ஃபோன் பண்ணினால் போதும். இது போல் உணர்ந்து உங்கள் கணவரிடம் இடைக்கிடை வந்து போயிருந்தால் இப்போது சிக்கல் வந்திராது. உங்களுக்கு இப்போது இன்னொரு குடும்பம் இருக்கிறது. காலப் போக்கில் எப்படி எல்லாவற்றையும் பாலன்ஸ் செய்வது என்கிற‌ புரிதல் உங்களுக்கு வரும். அதுவரை அட்ஜஸ்ட் பண்ணத்தான் வேண்டும்.

//na en amma veetuku potuma nu keten en husband vida matarar// என்னங்க‌ நீங்க‌!! அம்மா வீட்டில் இருக்க‌, கலியாணம் செய்திருக்கத் தேவையில்லையே! //enga amma Kurta solli enga athaikitta ennaiyum baby um anupi vaika ketka sonnen// கர்ர்.. ஏற்கனவே பிரச்சினை. அதைத் தீர்க்க‌ முயலாமல் அதிகரிக்க‌ வழி பார்க்கிறீர்கள். எங்களிடமிருந்து என்ன‌ எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. //but en husband adhu ilama ennala iruka mudila nee ponalum na weekend vandhuruven nu solrar// இதில் என்ன‌ தப்பு இருக்கிறது!! புரியவில்லை. அதற்காவது சரி எனலாமே!! //enaku age 23 dhon aguthu// கண்ணா... இது குழந்தை வயது இல்லை. இப்படி நினைத்திருந்தால் நீங்கள் உங்கள் பெற்றோரிடம், கலியாணம் வேண்டாம் என்று முன்பே சொல்லியிருக்க‌ வேண்டும். ;(

//normal delivery achu// 3 rd month larundhu physical relationships irukom// இது எல்லாமே நார்மல் தான். உங்கள் கணவரும் நார்மலாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. //ipolam romba mudila// என்ன‌ முடியல‌!! அதைத் தெளிவாகச் சொல்லுங்கள்.

//Baby ku feed panren// ம். எல்லாத் தாய்மாரும் செய்வதுதான். நீங்கள் மட்டும் தான் இப்படி என்பது இல்லை. //night late ah dhon thuguran// இதுவும் எல்லோரும் கடப்பது தான். //.clg leave potu potu poren onnum mudila// இதை முன்பே ப்ளான் செய்திருக்க‌ வேண்டும். படிப்பை நிறுத்தி விட்டு பிற்பாடு தொடர‌ முடியுமா என்று பாருங்கள். உங்கள் வாழ்க்கைக்கோ, குழந்தை வளர்வதற்கோ இடையில் விடுமுறை கொடுக்க‌ முடியாது.

‍- இமா க்றிஸ்

//Na indha time amma veetuku pona one month apram dhon varuven// உங்க‌ வாழ்க்கை உங்க‌ இஷ்டம். //but sorry solraga romba anba nadakaraga// ம், நல்லவராகத் தான் தெரிகிறார். //anni// இதில் தலையிடக் கூடாது என்பது என் எண்ணம். நீங்கள்... தனியே கீர்த்திகா கையில் தான் தீர்வு இருக்கிறது.

//enaku idha share pannave pidikala// எனக்கு... பதில் சொல்லப் பிடிக்காமல் போக‌ ஆரம்பிப்பது போல‌ இருக்கிறது கண்ணா. //enaku oru arudhol kaga idhula share pannen.// அது இப்போதுதான் தெரிகிறது. நீங்கள் முதலாவது கேள்வியில்... 'நான் செய்வது சரி, எனக்குத் தீர்வு தேவையில்லை; ஆறுதல் மட்டும் தான் வேண்டும்,' என்று ஒரு வரி சேர்த்துத் தட்டியிருந்திர்களானால் நான் உள்ளே வந்திருக்க‌ மாட்டேன். கஷ்டப்பட்டு என் நேரத்தைச் செலவளித்து... தங்லிஷ் படித்துப் புரிந்து... இன்னொருவருக்குப் பதில் சொல்லும் நேரத்தை உங்களுக்கு ஒதுக்கி... ;(( உங்கள் கடைசி இடுகையைப் படிக்கப் போவதில்லை.

//Reply// இனி என்னிடமிருந்து கிடைக்காது. சொல்ல‌ வேண்டியதைச் சொல்லி முடித்து விட்டேன்.

‍- இமா க்றிஸ்

எனக்கு ஒரு சந்தேகம்.. இரண்டு மாதங்களாக கேட்கவா வேண்டாமா என்று குழப்பத்தில் உள்ளேன்..
கர்ப்ப காலத்தில் கணவன் மனைவி உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருந்தால் நார்மல் டெலிவரி ஆகுமா?

எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆனாலும் நாங்கள் வாரம் ஒருமுறைதான் உடலுறவு வைக்க முடிகிறது.. வாரம் ஒருமுறை என்பதால் எனக்கு உடலுறவு வைத்து கொள்ளும்போது சிறிது வலி ஏற்படுகிறது..
ஆனால் இது ஒரு பிரச்சினை இல்லை..

இவ்வளவு டைட்டாக இருப்பதனால் நார்மல் டெலிவரி ஆகுமா என்று குழப்பம் உள்ளது..
இது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று தெரிந்தால் நிம்மதியாக இருக்கும்..

//கேட்கவா வேண்டாமா என்று குழப்பத்தில் உள்ளேன்.// :) கேட்பதில் என்ன‌ இருக்கிறது! கேட்டது நல்லது. வேறு சகோதரிகளுக்கும் பயன்படக் கூடும்.

//கர்ப்ப காலத்தில் கணவன் மனைவி உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருந்தால் நார்மல் டெலிவரி ஆகுமா?// இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சிசேரியன் செய்வதற்கான‌ காரணங்கள் வேறு. பிரசவ‌ சமயம் வரும் மீதிச் சங்கடங்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை

//வாரம் ஒருமுறைதான் உடலுறவு வைக்க முடிகிறது.// அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. //வாரம் ஒருமுறை என்பதால் எனக்கு உடலுறவு வைத்து கொள்ளும்போது சிறிது வலி ஏற்படுகிறது.// அது காரணமாக‌ இராது என்று நினைக்கிறேன். இந்தச் சின்ன‌ வலி எப்போதிருந்து இருக்கிறது? உங்கள் மருத்துவரிடம் எப்போதாவது இதைப் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? மனம் தயாராக‌ இருந்தால் உடல் இறுக்கம் தளர்வாக‌ இருக்கும். இன்னொரு வழி, இதற்காக‌ உள்ள‌ ஜெல்கள். சிலது வலி தெரியாமலிருக்க‌ உதவும். காலப்போக்கில் சரியாகிவிடும் அல்லது நீங்களே வலியை மறந்துவிடுவீர்கள்.
உலர்வைத் தடுக்க‌ வெஜைனல் லூப்ரிகன்ட்ஸ், இதற்கென்று மாய்ஸ்சரைசிங் க்ரீம்கள் கிடைக்கும். சிலது நேரடியாக‌ பார்மசியில் வாங்கலாம். முதல் முறை மருத்துவரிடம் கேட்டுக் கொண்டால் சரியானதைப் பரிந்துரைப்பார்கள். நீங்கள் நினைப்பது போல் உடல் அதிகம் பயன்படுத்தப்படாமை தான் வலியின் காரணம் என்றால் கூட‌ மேலே சொன்னவை பொருந்தும். சிலருக்கு ஹோர்மோன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படுவதும் உண்டு. மாதவிலக்கு நிற்கும் வயதிலுள்ளவர்களுக்கே பெரும்பாலும் இவை தேவைப்படும்.

//ஆனால் இது ஒரு பிரச்சினை இல்லை.// இல்லை தான். ஆனால் இதைத் தவிர்க்க‌ முடிந்தால் உங்கள் மனம் இலகுவாக‌ இருக்கும்; வாழ்க்கையை ரசிக்க‌ முடியும். இப்போது இந்தப் பயம் கூட‌ வந்திராது. திருத்தக் கூடிய‌ வழிகள் சுலபமாகக் கிடைக்கும் போது பயன்படுத்த வேண்டும்.

//இவ்வளவு டைட்டாக இருப்பதனால் நார்மல் டெலிவரி ஆகுமா// குழந்தையின் தலையின் அளவு எத்தனை பெரியது! அந்த‌ அளவு பெரிதாக‌ பெண்ணுறுப்பு இருப்பதில்லை எப்பொழுதும். முதற் பிரசவத்தின் பிறகும் மீண்டும் சுருங்கிவிடும். அல்லாவிட்டால் உடலுறவு ரசிக்கக் கூடியதாக‌ இராது. ஆணுறுப்பின் அளவு கூட‌ பெண்ணுறுப்பு வழி இராது. தேவை வரும் போது எந்த‌ அளவுக்கு விட்டுக் கொடுக்க‌ வேண்டுமோ அந்த‌ அளவு விட்டுக் கொடுக்கும். ஹோர்மோன் சுரப்புகளால் தான் உடல் விட்டுக் கொடுக்கும் நிலைக்கு வருவது. மீதி நாட்களில் இறுக்கமாகத் தான் இருக்கும். மாதவிலக்கு சமயம் இறுக்கமாக‌ இராது. பிரசவ‌ சமயமும் இறுக்கமாக‌ இராது. சாதாரண‌ நாட்களையும் இந்த‌ நாட்களையும் ஒன்றாக‌ நினைத்துக் கவலை வேண்டாம். நீங்கள் அவதானித்துப் பார்த்தால் மாதவிலக்காகும் நாட்கள் & அதற்கு முன் பின்னான‌ ஓரிரு நாட்களில் உடலுறவின் போதான‌ வலி இல்லாமலிருப்பதைக் கவனிப்பீர்கள்.

//இது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று தெரிந்தால்// நிச்சயம் இராது. //நார்மல் டெலிவரி ஆகுமா// இந்தக் காரணத்தால் ஆகாமலிருக்கப் போவதில்லை. மருத்துவர் ஏதோ ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு சத்திரசிகிச்சையைப் பரிந்துரைத்தால் தவிர்க்காமலிருப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்