அரிசி பருப்பு சாதம்

தேதி: March 6, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 2 டம்ளர்.
துவரம் பருப்பு - 3/4 டம்ளர்,
காய்ந்த மிளகாய் - 5,
சிறிய வெங்காயம் - 10,
தக்காளி - 2,
பட்டை - சிறிது,
கிராம்பு -1,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்துமல்லி - சிறிது,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 2 ஸ்பூன்.
நெய் - 2 ஸ்பூன்.


 

அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி, 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, தாளித்து, கிள்ளிய மிளகாய், முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அரிசியும் பருப்பும் முக்கால் பதம் வெந்ததும், வதக்கியவற்றையும், உப்பும் சேர்த்து நன்கு கிளறவும்.
நெய்யையும் கொத்தமல்லியையும் சேர்த்து, மூடி வைத்து பதமாக இறக்கவும்.


குக்கரில் வைப்பதானால், அரிசி, பருப்பு, தண்ணிர், வதக்கியவை, உப்பு எல்லாம் சேர்த்து, 2 விசில் விட்டு இறக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா,

நலமா ?

அரிசி பருப்பு சாதம் நன்றாக இருந்தது. செய்வதற்கும் எளிது.என் மகனுக்கு (4 வயது) இந்த சாதம் ரொம்ப பிடிச்சிருந்தது. மிக்க நன்றி.

அன்பு ரீட்டா,
ரொம்ப நன்றிம்மா. அதுவும் உன்னுடைய குழந்தைக்கு இந்த சாதம் பிடித்திருந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா, இந்த சாதம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. செய்வதற்கும் மிகவும் சுலபமாக இருந்தது. நன்றி உங்களுக்கு.இது கோவை பகுதியில் மிகவும் முக்கியமான சாப்பாடுதானே?

ஹாய் வானதி,
எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பேசி.
டைமே இல்ல.
இது அதே கோவை ஸ்பெசல்தான், கோவை தான் கொங்கு.
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த சாதம் செய்வது ரொம்ப சுலபம். என் வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிக்கும்.
கொங்கு பக்கம் பொண்ணுங்க வயசுக்கு வந்தாலும், மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தாலும் இந்த சாதம் இல்லாமல் இருக்காது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அரிசியும் பருப்பு சாப்பாட்டுக்கு கொஞ்சம் நெய்விட்டு சாதத்தை நன்கு பிசைந்து, அத்துடன் தொட்டுக்க புளிகுழம்பு (கத்தரிக்காய் சுட்டு அரைத்தது) அத்துடன் அண்ணபூர்னா அப்பளம் வைத்து சாப்பிடங்க சூப்பராயிருக்கும்.... குடும்பமே ஓ போடும்.

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்,
பிறர் கொன்றதை மட்டும் தின்பீர்.

அதுசரி பால், தேன், சைவமா ?
பட்டு சீலை புனிதமா ?

அன்பு சகோதரர் செந்தில்,
எங்க ஊர்பக்கம் எதுவுமே தொட்டுக்காம தான் சாப்பிடுவாங்க. எனக்கு தெரியாத காம்பினேஷன் சொல்லியிருக்கீங்க. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம் இந்த பருப்பு சாதத்தை நானும் செய்து பார்க்க போறேன்,சரி இதர்க்கு பச்சை அரிசி உபயோகிக்கலாமா புழுங்கல் அரிசியில் செய்யலாமா?எந்த அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும்?தயவு செய்து சொல்வீர்களா?

அன்புள்ள ரஸியா,
புழுங்கல் அரிசியே உபயோகிக்கலாம், அது தான் சுவையாக இருக்கும்.
நீங்க சும்மா கேட்டாவே சொல்வேன், அதுக்குப் போய் எதுக்கு 'தயவுசெய்து' எல்லாம்?
வாழ்த்துக்கள் :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா எப்படி இருக்கீங்க?
நேட்று உங்கள் பதிலை படித்தவுடன் செய்து சாப்பிட்டாச்சு,ரொம்பவும் நல்லா இருந்தது,(இதர்க்கு தொட்டுக்கொள்ள மனோகரி மேடத்தின் எறா தக்காளி தொக்கு செய்தேன் சூப்பர்)இனி அடிக்கடி செய்வேன்!எளிமையாக செய்யக்கூடியதாக இருந்தது,மிக்க நன்றி அக்கா!

அன்பு சகோதரி ரஸியா,
நான் நல்லாருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க? உங்க பாராட்டுக்கு நன்றி. எளிமையாத்தான் இருக்கும். அடிக்கடி செய்து அசத்துங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

can we add vegetables in this dish

அன்புள்ள செல்வி அக்கா
எப்படி இருக்கீங்க....குடும்பதினர் நலமா? மன்றத்தில் இரண்டு இடங்களில் பேசினேன் நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன் இப்பொழுது அதிகம் வருவதில்லை .....நான் அரிசி பருப்பு சாதமும் அதற்கு பாதாம் புதினா சிக்கனும் செய்தேன் இரண்டும் மிகவும் அருமையாக இருந்தது செய்து ரொம்ப நாளாகிவிட்டது பின்னோட்டம்தான் அனுப்ப முடியவில்லை ... ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அன்பு ஜுலைகா,
நலமா? எல்லோரும் நலமே. சாரிம்மா, நீ கொடுத்த பதிவை நான் கவனிக்கவில்லை. நானும் அதிகம் வருவதில்லை. பாராட்டுக்கு ரொம்ப நன்றிம்மா. ரொம்ப நாளானால் என்ன, பாராட்டு எப்போதுமே பாராட்டுதான்.
அன்புடன்,
செல்வி,

அன்புடன்,
செல்வி.

அன்பு பானு,
சாரி, நீங்கள் கேட்ட கேள்வியை இன்றுதான் பார்த்தேன்.இதுகூட காய்கறிகள் சேர்த்தால் சுவை மாறி விடும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

a

i think you forget to add ceeraga podi and poondu we should add cumin powder (ceeraga podi) and garlic (poondu) for அரிசி பருப்பு சாதம்.my mummy prepare like this .

Thanks
Arunkumar

ஹாய் அருண்,
நாங்க சீரகப்பொடி போடுவதில்லை. வேண்டுமானால் தாளிக்கும் போது சிறிது போடலாம். நிறைய பேருக்கு அது பிடிப்பதில்லை. பூண்டு விருப்பம் இருப்பவர் சேர்க்கலாம். நன்றி அருண்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா, இன்று மதியம் லன்ஞ்க்கு இந்த ரெஸிப்பிதான் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது டேஸ்ட். நான் கொஞ்சம் தாளிக்கும்போது அரை தேக்கரண்டி சோம்பும், ஒரு 4 - 5 பல்லு பூண்டும் சேர்த்துக்கொண்டேன், கூடுதல் வாசனைக்கு....... செய்வதற்க்கு ரொம்ப எளிதாகவும், சாப்பிடுவதற்க்கு நிறைவான உணவாகவும் இருந்தது மேலும் சிறப்பு! இனி என் வீட்டு சமையறையில் இது அடிக்கடி இடம்பிடிக்கும் :-). மிக்க நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
ரொம்ப நன்றி பாராட்டுக்கு. பூண்டு சேர்ப்பேன், சோம்பு சேர்க்க மாட்டேன். வாசனை பிடித்தால் சேர்க்க வேண்டியது தான். சமையலறையில் மட்டும் அடிக்கடி இடம் பிடிச்சா பத்தாது, எல்லோரும் சாப்பிட வேண்டும் :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி மேடம் இன்று அரிசி பருப்பு சாதம் செய்தேன் டேஸ்ட் நல்லா இருந்தது...நன்றி

அன்புடன்
ஷராபுபதி

அன்பு ஷரா,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.