Pain

Hi , na ippo 34 weeks pregnant ,last week enaku valakappu pannaga athula irudhu fever and cold and throat infection . 2 days before hospital ponaen tablet kuduthanga saptaen ippo ok . Sudden ah nethu la irudhu tooth pain thangavae mudiyala again inaiku hospital poraen but ethuku thooth pain varudhu ungaluku yarukavathu ipadi Iruka

//Sudden ah// பல்வலி சடனாத் தான் வரும்.

//but ethuku thooth pain varudhu// பல்வலியா முரசு வலிக்கிறதா! (திரும்ப யாராச்சும் முதல்ல இருந்து ஆரம்பிச்சீங்க... அறுசுவையை விட்டே ஓடிருவேன்.) :‍)

பற்சுகாதாரம் சரியாக இருந்தால் பல்வலியைத் தவிர்க்கலாம். இனி வைத்திராமல் பல்மருத்துவரைப் பார்ப்பது நல்லது. யார் என்ன சொன்னாலும் மருத்துவரைப் பார்க்கிறதைத் தவிர்க்க வேண்டாம். இரவில பல் துலக்கிவிட்டுத் தூங்குங்கள்.

‍- இமா க்றிஸ்

எனக்கு குழந்தை பிறந்து 11 மாதம் ஆகிறது , சிசேரியன் தான் , குழந்தை பிறந்து 2வது மாதத்திலிருந்து முதுகு வலி ஆரம்பம் ஆனது ,எல்லோரும் சிசேரியன் என்றால் அப்படி தான் என்று சொன்னார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் , பிறகு இரவு தூங்கமுடியாத‌ நிலை மருத்துவரிடம் சென்று ஆலோசனைப்(ஃபீடிங் பொசிசன் ) பெற்று நிவாரணம் கிடைத்தது,பிறகு அயர்ன் கால்சியம் மாத்திரைகள் மீண்டும் ஒரு மாதம் எடுக்க‌ சொண்ணார்,

மறுபடியும் //

ஒரு வார‌ காலமாகா தூங்கும் போது 3 ,4 மணியில் முதுகு வலி ஆரம்பம் ஆகிறது ,அப்போது தான் தெரிகிறது , தூக்கமே இல்லை ,இரவு படுக்கும் போதெல்லாம் வலி இல்லை , நானும் முடிந்த‌ முயற்சிகள எடுக்கிறேன் ,குழந்தை உண்டாண நாட்களில் இருந்து எழுந்து உட்காந்து படுப்பேன் அது குழந்தை பிறந்த‌ பின்பும் இப்பேது வரை மாற்ற முடியவிலை அதனால் எதாவது இப்படி வலி வருமா ? ஆலோசனை எதாவது கூறுங்கள்

//சிசேரியன் என்றால் அப்படி தான்// இல்லை. எப்படி அனஸ்தடைஸ் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேண்டுமானால் இருக்கலாம்.

//அதனால் எதாவது இப்படி வலி வருமா ?// இராது. உங்களுக்கு போஷாக்கு பற்றாமலிருக்கலாம் அல்லது ஓய்வு பற்றாமலிருக்கலாம். கவனிக்க‌ வேண்டியவை... மருத்துவர் சொன்னது போல‌, அமரும் விதம். இன்னொன்று... அணியும் உள்ளாடைகள்.

‍- இமா க்றிஸ்

படுக்கும் கட்டிலோ அல்லது மெத்தையோ மாற்றி பாருங்கள்.
உளுந்தங்களி செய்து சாப்பிடுங்க‌. இமா அம்மா சொன்ன‌ மாதிரி உள்ளாடை கூட‌ ஒரு வகை காரணமாக‌ இருக்கலாம். தளர்வாக‌ அணியுங்கள்.

- பிரேமா

Abhineshwari ninga seruppu podunka .. bathroom pogumpothu podanum ..ippo konjam mazhaikaalam kaalu chilnu iruntha palavali thalavali varum .. nibga nigjtla konja neram socks podunka ippadi panna konjam soodu kedaikum appo cold varathu athanala pallu valiyum varathu baby poranthum athan sila peru scorf kattuvanka ..

Vepillai koyya ilai ithellam nalla kothika vatchu antha thanniya valaavi kulikumpothu suda suda porukura alavuku muthukula uthuvanka weekly once seiyalam unka veetu periyavanka kitta kelunka pa ..idupu elumbu delivery ku apuram vali kodukathu ..

ஆமாம் பிரேமா சொன்னது சரிதான். மெத்தை சரியாக‌ இல்லாவிட்டால் முதுகு வலி வரும். மாற்றிப் பாருங்கள். அல்லது தலைப் பக்கம் இருப்பதைக் காற்பக்கம் மாற்றிப் போடுங்கள்.

ஒரு முறை நாங்கள் வாங்கிய‌ மெத்தையில் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று மாதங்கள் குறித்து இருந்தார்கள். அதன் படி மாற்றி மாற்றிப் போட‌... ;‍) மெத்தையும் நீடித்து உழைத்தது.

இன்னொரு விடயம் நினைவுக்கு வருகிறது. சின்ன‌ வயதில் எனக்கு அடிக்கடி கழுத்துப் பிடிப்பு வரும். அப்போதெல்லாம் செபா மெத்தையை வெயிலில் போட்டு எடுப்பார்கள். காரணம் தெரியவில்லை. என் ஊகம்... மெத்தைப் பஞ்சு / ஸ்பாஞ்ச் காற்றிலிருந்து ஈரலிப்பை உறிஞ்சி வைத்திருப்பதன் காரணத்தால் தான் கழுத்து வலி வந்தது என்று நினைத்திருக்க‌ வேண்டும். எம் வியர்வையையும் சேர்த்து உறிஞ்சி வைத்திருக்கும் இல்லையா! விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள். (இங்கும் மெத்தையை வெயிலில் போடுகிறோம். dust mites இருந்தால் இறந்து போகும்.)

தலையணையையும் கவனியுங்கள். அதுவும் முதுகுவலியைக் கொண்டுவரலாம்.

‍- இமா க்றிஸ்

Na doctor consult pannaen today cold la thaan pain irukum already cold Ku kudutha tablet ah continue Panna sollirukanga. And now pregnancy time la teeth Ku tablet injection ethuvum kuduka mattom nu doctor sollitanga. Hot water la salt pottu use pannitu iruka sollirukanga

அம்மா
மருத்துவர் சொன்னது போல‌, அமரும் விதம் // ஃபீடிங் நிறுத்தி 3 1/2 மாதம் ஆகிறது மா , இன்னொன்று... . // அதிலும் கவணம் செலுத்துகிறேன் அம்மா & பிரேமா

மெத்தை // பழகிப்போன‌ ஒன்று அதிலும் மாற்றத்தை இரு நாட்களாகா கீழே படுத்து உறங்கி பார்த்தேன் அப்போதும் நீட்டித்தது

நீங்கள் கூறுவது போல் மாற்றி போட்டு உறங்கி பார்க்கிரேன்

முயற்சி செய்துதான் பார்க்க‌ வேண்டும் ,
unka veetu periyavanka kitta kelunka pa // அம்மாட்ட சொன்னா எதுக்கும் டாக்டர்ட காமிச்சுகறது நல்லதுன்னு சொல்லுவாங்க

மேலும் சில பதிவுகள்