அவரைக்காய் நிலக்கடலை பொரியல்

தேதி: March 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

அவரைக்காய் - 1/4 கிலோ,
வறுத்த நிலக்கடலை - 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 8,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்,


 

அவரைக்காயை 1/2 அங்குல துண்டுகளாக நறுக்கி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
நிலக்கடலையை கரகரப்பாகப் பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு தோல் நீக்கி, நன்கு நசுக்கி வைத்து கொள்ளவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து நசுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், வேக வைத்த அவரைக்காயை சேர்த்து வதக்கவும். (சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் பரவாயில்லை).
பொடியாக்கிய நிலக்கடலையை தூவி, நன்கு கிளறி இறக்கவும்.
கொஞ்சம் தளர வைத்துக் கொண்டால், சாதத்திற்கே கலந்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

This is really awesome..! You can try the same receipe with Bottleguard also. It really tastes good.

selvi can you tel what is nelakadalai?is it groundnuts, (im a beginner in cooking).would like to try your recipe.

Tried this today and it came out very well. Thanks :)

Bindu

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

செல்வி madam
என்னை ஞாபகம் இருக்கிறதா.
அவரைக்காய் நிலக்கடலை பொரியல் செய்து பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது வித்தியாசமாக இருந்தது

அன்பு கவி,
இது எங்க பக்க ஸ்பெசல் உணவு. சுவை சூப்பரா இருக்கும். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி. எனக்கு ஈரோடில் இருந்ததால் நான் சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப நன்றா இருந்தது.

அன்பு விஜி,
நலமா? உண்மை, ஈரோட்டில் இருந்தவங்க இதை சாப்பிடாம இருந்திருக்க முடியாது. சுவையும் அருமையாக இருக்கும். உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா இன்று மதியம் இந்த ஈரோடு ஸ்பெஷல் எங்கள் ஸ்பெஷல் ஆகிவிட்டது சூப்பர்க்கா....நிலக்கடலை சேர்த்ததால் கொஞ்சம் சத்தும் ஆகிவிட்டது

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணு,
உண்மை. பூண்டு மணக்க சுவையான பொரியல். எங்க ஊர் ஸ்பெசல் உங்களுக்கும் ஸ்பெசல் ஆனதால் சந்தோஷமே. நிலக்கடலை சேர்ப்பதால் சத்தும் தான்.
நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இது தொட்டுக்கொள்ள....... சாதத்தில் ஊற்றிசாப்பிட இதற்கு பொருத்தமான என்ன செய்யலாம்?

நன்றி. நான் இது 2 வது தடவையாக செய்தேன். ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது.

அன்பு ஸ்ரீதேவி,
தொட்டுக்கொள்ள மட்டுமல்ல, சாதத்தில் கலந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். தனியாக ஊற்றி சாப்பிட குழம்பு வேண்டுமென்றால் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு சரியாக இருக்கும்.
ஹாய் விஜி,
பாராட்டுக்கு நன்றி. பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ரேணுகா அவர்கள் தயாரித்த பொரியலின் படம்

<img src="files/pictures/avarai_kadalai.jpg" alt="picture" />

அன்பு ரேணு,
அப்படியே நான் செய்வது போல் உள்ளது. ரொம்ப நல்லா இருக்கு. டேஸ்ட்டும் தான். பாராட்டுகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,
நல்லா இருக்கீங்களா?அவரை நிலக்கடலை பொரியல் செய்தேன்,கடலை வாசனையோடு வித்தியாசமா இருந்தது.

அன்பு விஜி,
நல்லா இருக்கேன். நீ நலமா?
ஆமாம்ப்பா, வித்தியாசமான சுவையில் இருக்கும். ரொம்ப நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செந்தமிழ் மேடம்,

நேற்று நான் உங்களுடைய அவரைக்காய் நிலக்கடலை பொரியல் செய்தேன். it has different taste. my husband also liked this receipe and appreciated. Thanks for giving this receipe madam. i will try your receipes in future days and will send the reply later.

Leela Nandakumar

Leela Nandakumar

அன்பு லீலா,
சாரிம்மா, ரெண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் பிசியில் நான் பார்க்கவே இல்லை. நேற்று பார்க்கும் போது கீழே விஜியோட பதிவை மட்டும் பார்த்திருக்கேன். சாரிடா, இப்ப சொல்றேன். பாராட்டுக்கு மிக்க நன்றி. ஹஸ்ஸுக்கும் பிடிச்சிடுச்சுன்னா, உனக்கு அதை விட சந்தோஷம் வேறென்ன இருக்கு? ஓ, நிறைய குறிப்பு இருக்கு. செய்து பார். தவறாம பின்னூட்டமும் கொடுத்துடு, சரியா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இந்த பொரியல் ரொம்ப சூப்பர்.. அதுவும் தயிர்சாதத்துக்கு ரொம்ப நல்லா இருந்தது...

சின்ன வெங்காயம் இல்ல.. அத போடாமலே டேஸ்ட் நல்லா இருந்தது...அடுத்த முறை சின்ன வெங்காயமும் போட்டு ட்ரை பண்ணனும்...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு சங்கீதா,
பாராட்டுக்கு நன்றிப்பா! சின்ன வெங்காயம் சேர்த்து செய்து பார், இன்னும் நல்லா இருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.