வத்தக்குழம்பு

தேதி: March 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி - 2 எழுமிச்சம் பழ அளவு,
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,,
உளுந்து அப்பளம் - 1,
பெருங்காயம் - சிறிது,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,
மணத்தக்காளி வத்தல் - 1 கைப்பிடி.


 

புளியை 2 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, துவரம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
துவரம்பருப்பு சிவந்தவுடன், அப்பளத்தை பொடியாக ஒடித்து போடவும்.
அப்பளம் பொரிந்தவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின், புளி கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தேங்காயை நைசாக அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, வத்தல் சேர்த்து, பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, தேங்காய் வாசம் வரும் வரை வதக்கவும்.
வதங்கிய பின், கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலில் கொட்டி, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வத்தக்குழம்பும் சூப்பர்,சுண்டைக்காய் வத்தல் சேர்த்து செய்தேன்,மனத்தக்காளி வத்தல் இல்லை.மீதி நிறைய இருக்கு.ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டென்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆஸியா,
பாராட்டுக்கு நன்றி. எந்த வத்தலிலும் செய்யலாம், ஒரு வாரம் கூட இருக்கும், எந்த ப்ரச்னையுமில்லை.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி,
நலம்தானே? விடுமுறைதானே என்று பயமில்லாமல் மணத்தக்காளி வற்றல் குழம்பு சமைத்துச் சாப்பிட்டாயிற்று. :-) ஒத்து வராது போய்விடுமோ என்றுதான் யோசித்துக் கொண்டு இருந்தேன். ஒன்றுமே செய்யவில்லை.
சுவை பிடித்திருந்தது. குறிப்புக்கு நன்றி, நன்றி, நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய், செல்வி மேடம்,
இந்த குறிப்பினை இன்று செய்தேன்...நன்றாக இருந்தது...நன்றி..

nanriyudan