சீரக சம்பா பனீர் பிரியாணி

சீரக சம்பா பனீர் பிரியாணி

தேதி: October 5, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

சீரக சம்பா அரிசி - அரை கிலோ
தக்காளி - 3
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 சின்ன கப்
பனீா் பாக்கெட் - 1
எலுமிச்சை பழம் - 1 1/2
கொத்தமல்லி
புதினா
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா
முந்திரி - 10
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
நெய்


 

தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். சீரக சம்பா அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
தேவையானப் பொருட்கள்
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சோ்த்து நன்கு வதக்கவும்.
குக்கரில் வதக்குதல்
பின்னர் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியப் பிறகு தக்காளியை சோ்த்து வதக்கவும். தக்காளி சோ்த்தவுடன் சிறிதளவு உப்பு சோ்க்கவும். உப்பு சோ்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும்.
தக்காளி புதினா கொத்தமல்லி
அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள தூள் வகைகளை சோ்க்கவும். அனைத்தையும் சேர்த்து கிளறிவிட்டு, அதில் அரிசி சேர்க்கவும்.
மசாலா தூள்
பின்னர் தேவையான அளவு தண்ணீா் விட்டு, உப்பு சோ்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி விடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் வேக வைத்தல்
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்தெடுக்கவும். அதே நெய்யில் முந்திரியையும் பொரித்துக் கொள்ளவும்.,
பனீர் பொரித்தல்
குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து, பொரித்த முந்திரி மற்றும் பனீரை சேர்த்து கிளறவும். சூடான சுவையான சீரக சம்பா பனீா் பிரியாணி ரெடி.
சீரக சம்பா பனீர் பிரியாணி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பல வருடங்கள் கழித்து அறுசுவையில் முகப்பில் என் சமையல் புகைப்படத்தை பாா்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் குறிப்பை விரைவில் வெளியிட்ட அன்பு அண்ணா பாபு அண்ணாவிற்கு என் மனமாா்ந்த நன்றிகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவ் நாவூறுது டா. புரட்டாசிக்கு பனீர்ல செஞ்சாச்சா செம்ம சூப்பர் மா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமா ஸ்வா புரட்டாசி அதான் பனீர் செய்தேன்.. தேங்க்ஸ்டா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆஹா ரேவ். அறுசுவை ஓபன் பண்ணினதுக்கு ரொம்ப தான்க்ஸ் அண்ணா. பார்க்கமுடியாதவங்கள பார்க்க ஹாப்பியா இருக்கு. ரேவ் இனி அடிக்கடி பார்க்கணும் சொல்லிட்டேன். சூப்பர் ரெசிபி மா

Be simple be sample

சூப்பர் ரெசிபி பா...

சூப்பர் குறிப்பு ரேவதி.

‍- இமா க்றிஸ்