பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

பெண்கள் அடுத்தவர்களுக்காக தான் அதிகம் தங்கள் நேரத்தை செலவு செய்யறாங்க என்ற தலைப்பை தேர்வு செய்கிறேன் நடுவரே!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்னடா இன்னும் ஆளையே காணோம்னு நினைத்தேன். மகிழ்ச்சி :-) ம்ம்ம் நீங்களும் அடுத்தவர் அணியா? சரி தங்களின் வாதங்களை தொடருங்கள்.

வணக்கம் நடுவரே! இப்போதான் எல்லா வேலையும் முடிச்சு எனக்கே எனக்குன்னு கொஞ்ச நேரம் கிடைச்சிருக்கு. நானும் பதிவை தட்டுட்டு போயிடறேன். நீங்களும் உங்கள் கடமை எல்லாம் முடிஞ்சு நேரம் கிடைக்கும் போது படிச்சு கருத்தை சொல்லுங்கோ.

பெண்களின் வாழ்க்கை எப்போதுமே பிறரைச் சுற்றியே சுழல்கிறது. உடனே எதிரணியினர் வருவாங்க... அதெல்லாம் அந்த காலம் இப்போ சம்பாதிக்கறோம் சுயமாக நிற்கிறோம் அப்படீன்னு சொல்லுவாங்க. நானும் அதெல்லாம் ஒத்துக்கறேன். நான் சொல்வது நமது எண்ணங்களும் செயல்களும் நம் அன்புக்குரியவர்களைச் சுற்றியே இருக்கிறது. அவர்களுக்காக யோசித்து பலநேரங்களில் நாம் நம் சுயத்தை இழந்து விடுகிறோம். பாசம் நேசம் காதல் னு என்ன பெயர் சொன்னாலும் பல நேரங்களில் அவர்களுக்காக நம்மை நாம் விட்டுக் கொடுத்து விடுகிறோம் என்பதுதான் யதார்த்தம். அதுவே இங்கே தியாகமாகவும் பெண்ணின் கடமையாகவும் பார்க்கப் படுகிறது. நம் ஜீனிலும் ஊறி விட்டது.

உதாரணமா எடுத்துக்கோங்க. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள். கணவருக்கு இன்னொரு இடத்தில் நல்ல வேலை கிடைக்கிறது அல்லது ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது. மனைவி ட்ரான்ஸ்ஃபருக்கு முயற்சிப்பார். சாத்தியம் இல்லை எனில் வேலையை விட்டு விடுவார். மனைவி அரசாங்க வேலையில் இருந்தால் மட்டுமே அங்கே வேலையை விடும் முடிவு கைவிடப்படும். இல்லை என்றால் ராஜினாமா தான். அங்கே பெண்தான் விட்டுக் கொடுக்க வேண்டி வருகிறது.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய்தான் தூக்கம் மறந்து தன் வேலை மறந்து குழந்தையை கவனிப்பாள். அதற்கு அவள் ஒருபோதும் சலித்துக் கொள்ள மாட்டாள். ஆனால் அங்கே அவள் தன்னை மறந்து விடுகிறாள் தன் தேவைகளை மறந்து விடுகிறாள்.

தற்போது பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. மருத்துவர்கள் பொதுவாக சொல்லும் ஆலோசனை. உங்களுக்காக நேரத்தை ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு பிடித்தது போல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் பெரும்பாலும் இது சாத்தியமாவது இல்லை. காரணம் பெண்ணுக்கே உரிய கடமைகள். கணவரை குழந்தையை மாமனார் மாமியாரை குடும்பத்தை கவனிக்க வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும். இருபத்துநான்கு மணிநேரம் போதாமல் சுழன்று கொண்டே இருக்கிறாள்.

ஆண்களும் வேலைக்கு செல்கிறார்கள் குடும்பத்தை கவனிக்கிறார்கள் அவர்கள் அவர்களுக்காக நேரம் ஒதுக்கத்தானே செய்கிறார்கள் என கேட்கலாம். ஆனால் ஆண்கள் இன்று தன் நண்பர்களை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால் எதையும் யோசிக்காமல் செல்ல முடியும். ஆனால் பெண்ணால் அது முடியாது. குழந்தைகள் வீட்டுக்கு வரும் நேரம் அவர்களுக்கான உணவு, வீட்டுப்பாடத்தில் உதவுவது என எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்கி பின்னர் நேரம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். ஒன்னும் வேண்டாம் நடுவரே... இப்போ வந்திருக்கே அந்த 96 சினிமா. அதை பள்ளித் தோழிகளோடு சென்று பார்க்க வேண்டும் என்று 2வாரங்களாக திட்டமிடுகிறோம். இன்னும் நடக்கவில்லை. காரணம்... நம் அன்புக்குரியவர்களுக்காக நமது நேரத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு 3மணிநேரம் இரண்டு வாரங்களாக ஒதுக்க முடியவில்லை. என்னன்னு சொல்றது :(

இன்னிக்கு காலையிலேயே பட்டியில் பதிவு போட வந்தேன். இரண்டுமூன்று வரிகள் கூட தட்டி விட்டேன். பின்னர் கடமை அழைத்தது... போய்விட்டேன் :(

பல நேரங்களில் நாம் நம்மை தொலைத்தது கூட தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளிடமும் கணவரிடமும் எரிந்து விழுவது. தினமும் ஒரு அரை மணிநேரமாவது நமக்கே நமக்கான நேரம் என ஒதுக்கி நமக்கு பிடித்ததை செய்தோமானால் மனம் அவ்வளவு லேசாக உணர்வோம். எல்லாம் புத்திக்கு தெரிகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியம் ஆக மாட்டேன் என்கிறது. அதற்கு பிறரை குற சொல்வதில் நியாயமில்லை. பெண்கள் கடமை தியாகம் என பெரிய பெரிய வார்த்தைகளாக யோசித்து எல்லாவற்றிற்கும் விட்டுக் கொடுத்தும் நம் சந்தோஷத்தையும் இழந்து அதன் வெளிப்பாடாக யாருக்காக தியாகம் செய்கிறோம் என நாம் நினைத்துக் கொள்கிறோமோ அவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆஹா... அடுத்த கடமை அழைக்கிறது நடுவரே! அப்பாலிக்கா வாரேன். கனவரும் நானும் மட்டுமே உள்ள குடும்பத்திலேயே இப்படின்னா.... மற்றவங்க எல்லாம்... பாவம் தான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

காலை வணக்கம்... சூடான வாதங்களோட வந்திருக்கீங்க .

///அவர்களுக்காக யோசித்து பலநேரங்களில் நாம் நம் சுயத்தை இழந்து விடுகிறோம். பாசம் நேசம் காதல் னு என்ன பெயர் சொன்னாலும் பல நேரங்களில் அவர்களுக்காக நம்மை நாம் விட்டுக் கொடுத்து விடுகிறோம் என்பதுதான் யதார்த்தம். /// நீங்க சொல்றதும் சரின்னுதான் தோணுது !

///குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய்தான் தூக்கம் மறந்து தன் வேலை மறந்து குழந்தையை கவனிப்பாள். அதற்கு அவள் ஒருபோதும் சலித்துக் கொள்ள மாட்டாள்./// இப்பல்லாம் குழந்தையோடு கணவனையும் சேர்த்து ஹால்ல படுக்கவைக்குற பெண்கள் அதிகமாகிட்டாங்கண்னு கேள்விப்பட்டேனுங்க !

///தற்போது பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. மருத்துவர்கள் பொதுவாக சொல்லும் ஆலோசனை. உங்களுக்காக நேரத்தை ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு பிடித்தது போல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் பெரும்பாலும் இது சாத்தியமாவது இல்லை. காரணம் பெண்ணுக்கே உரிய கடமைகள்./// பல நேரங்களில் இது நிஜம்தானோன்னு தோணுது.

///நடுவரே... இப்போ வந்திருக்கே அந்த 96 சினிமா. அதை பள்ளித் தோழிகளோடு சென்று பார்க்க வேண்டும் என்று 2வாரங்களாக திட்டமிடுகிறோம். இன்னும் நடக்கவில்லை. காரணம்... நம் அன்புக்குரியவர்களுக்காக நமது நேரத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு 3மணிநேரம் இரண்டு வாரங்களாக ஒதுக்க முடியவில்லை. என்னன்னு சொல்றது :( /// அட என்ன கொடுமடா சாமி ஒரு படம்பார்க்க முடிலையா???

///பெண்கள் கடமை தியாகம் என பெரிய பெரிய வார்த்தைகளாக யோசித்து எல்லாவற்றிற்கும் விட்டுக் கொடுத்தும் நம் சந்தோஷத்தையும் இழந்து அதன் வெளிப்பாடாக யாருக்காக தியாகம் செய்கிறோம் என நாம் நினைத்துக் கொள்கிறோமோ அவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்./// எப்படியெல்லாம் பொண்ணுங்களை அடக்கி வைத்துள்ளார்கள்..?

///ஆஹா... அடுத்த கடமை அழைக்கிறது நடுவரே! அப்பாலிக்கா வாரேன். கனவரும் நானும் மட்டுமே உள்ள குடும்பத்திலேயே இப்படின்னா.... மற்றவங்க எல்லாம்... பாவம் தான்/// அட கொஞ்ச நேரம் அந்த பொண்ண பட்டிக்கு பதிவுபோட விடுங்கப்பா . பாவம் ரொம்பப்பாவம் ... மீண்டும் வாங்க வந்து தங்களின் கருத்துகளை இல்லை இல்லை ஆதங்கங்களை பதிவிடுங்கள்.

அனைவருக்கும் காலை வணக்கங்கள் ,
பட்டியில் அடுத்தவர்களுக்காகவே என்ற அணியின் வாதங்களை படித்தீர்களா? பெண்கள் இன்னும் முன்சொன்ன வார்த்தைகளில் கட்டுண்டு தனக்கான நேரத்தை தனக்காக ஒதுக்காமல் மனகஷ்டம் அடைகிறாள்னு தன் ஆதங்கத்தை கவி சொல்லிருக்காங்க.

அவளுக்காகவே என்ற அணியினனும் , மற்றும் அனைவரும் தங்களின் வாதங்களை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்பு நடுவருக்கும், பட்டிமன்றத்தில் பங்கு பெறும் மற்றும் பார்வையிடும் தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

பட்டிமன்றத்தை துவங்கி, அறுசுவையை சுறுசுறுப்பாக்கிய நடுவருக்கு ஒரு பெரிய நன்றி.

எல்லோருமே ஒரே பக்கமா நின்னா என்ன பண்றது? அதனால எதிர் பக்கமா நின்னு, பெண் தன் நேரத்தை ஒதுக்குவது தனக்காகவும்தான் என்ற அணியில் பேச(எழுத)ப் போகிறேன்.

இங்கே நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பமாகிடுச்சு எங்க குடியிருப்பில். அதிலும் பல பல குழுவினர் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதிரி அமர்க்களம் பண்றாங்க. ஒரு குழு - பாராயணம், கோலாட்டம், நைவேத்தியம், என்று (வேற யாரு - எங்க க்ரூப்தான்:):)) செய்கிறோம்.

இதில் என்ன ஸ்பெஷல்னு கேக்கறீங்களா! வெறும் பக்தி மட்டுமல்ல. எல்லோரும் தினம் தினம் ஒரே மாதிரி கலர் புடவை, அலங்காரம், வேற வேற நைவேத்தியம் - சுண்டல், ஸ்வீட் இப்படி.
அப்புறம் ஷேர் செய்து கொள்ளும் கிஃப்ட் - அதிலும் புதுமை, பேக்கிங்கில் புதுமை. ஒருவர் வளையல், ரவிக்கைத் துணி கொடுக்கிறார். இன்னொருவர் சேலை வைக்கும் பை, அடுத்தவரோ வளையல் வைக்கும் கண் கவர் டப்பா, இப்படி.

மஞ்சள் குங்குமம் கொடுப்பதிலும் கூட ஒரு க்ரியேடிவிடி. சின்ன ப்ளாஸ்டிக் பேப்பரில் மஞ்சள், குங்குமம் தனித் தனியாக உருட்டி, பூ மொட்டு வடிவில் அவற்றை மடித்து, பச்சை வண்ண பேப்பரில் அவற்றை ஒட்டி, அழகாகக் குடுக்கறாங்க ஒருத்தங்க.

வித விதமான பாடல்கள் கத்துக்கறோம் தினமும். அதுவும் வேற வேற மொழிகளில்.

இதுக்கெல்லாம் எங்களால் நேரம் ஒதுக்க முடிகிறது என்றால், அது எங்களுக்கே எங்களுக்காக நாங்கள் எங்கள் ரசனையைப் பகிர்ந்து, நட்பை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் எங்களை எப்பவும் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்காகதான்.

மீண்டும் வருவேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

பாருங்க நடுவரே நீங்களும் கூவி கூவி கூப்பிடறீங்க. தோழிகளுக்கு ஆர்வம் இருந்தாலும் இங்கே வந்து பதிவு போட நேரம் கிடைக்காமல் இருக்காங்க. இந்தோனேஷியா தொடர் நானும் எழுதணும் எழுதணும்னு நினைச்சு மனசில் ஃபார்மட் பண்ணி வச்சு ஏழெட்டு மாதங்களுக்கு மேலாகுது. எப்படியோ இப்போதான் எழுத ஆரம்பிச்சிருக்கிறேன். எழுதுவது எனக்கு பிடித்தமான விஷயம். ஆனால் எழுத நேரம்.... அதுதான் கிடைக்க மாட்டேன் என்கிறது. அன்புக்குரியவர்களுக்கு தேவையானதெல்லாம் செய்து விட்டு நமக்கென்று நேரம் கிடைக்கும் போது தூக்கம் வந்திடுது. தூக்கத்தை தியாகம் செய்தால் நமக்கான நேரம் கிடைக்கும். அப்போவும் நாமதான் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. என்ன கொடுமை நடுவரே!

நவராத்ரி எல்லாம் எதிரணியினர் சூப்பரா கொண்டாடறாங்களாம். நானும் தான் ஆசைப்படறேன். எல்லாம் தயாரானேன். ஆனால் குடும்பத்தில் என் தேவை அதிகமாக இருக்கும் ஒரு சூழல் எதிர் பாராமல் உருவானதால் கொலு வைக்கவில்லை. ஆசைக்காக நாளை மட்டும் ஒருசில பொம்மைகளை எடுத்து வைத்து செய்யலாம் என இருக்கிறேன். இப்போ உங்கள் ஆசையை நிறைவேத்தறீங்களேன்னு சொல்லப்படாது. என் ஆசை 9நாட்களும் என்னிடம் உள்ள எல்லா பொம்மைகளையும் வைத்து நட்புகளையும் உறவுகளையும் அழைத்து எதிரணியினர் போல் கொண்டாட வேண்டும் என்பதுதான். ஆனால் நடப்பதோ :(
ஆனால் ஒன்னு நடுவரே... உங்க தலைப்பு பெண்களோட ஆதங்கத்தையெல்லாம் சொல்லுவதற்கு ஒரு இடமா அமைஞ்சிடுச்சு. தேங்க்ஸ் :)
இதோ வரேன்.... அம்மா கூப்பிடறாங்க. மெடிசின்ஸ் கொடுக்கணும். அப்புறமா முடிஞ்சா வாரேன் நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

///எனக்கே எனக்கா- பட்டி மன்றம்///ஆமாம் சீதாம்மா ,

///பட்டிமன்றத்தை துவங்கி, அறுசுவையை சுறுசுறுப்பாக்கிய நடுவருக்கு ஒரு பெரிய நன்றி./// மிக்க நன்றி, தொடர்ந்து வருகைபுரிய வேண்டும் .

///எல்லோருமே ஒரே பக்கமா நின்னா என்ன பண்றது? அதனால எதிர் பக்கமா நின்னு, பெண் தன் நேரத்தை ஒதுக்குவது தனக்காகவும்தான் என்ற அணியில் பேச(எழுத)ப் போகிறேன்./// இனிமேல்தான் பட்டி பட்டையக் கிளப்பப்போகிறது .

//////இங்கே நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பமாகிடுச்சு எங்க குடியிருப்பில். அதிலும் பல பல குழுவினர் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதிரி அமர்க்களம் பண்றாங்க. ஒரு குழு - பாராயணம், கோலாட்டம், நைவேத்தியம், என்று (வேற யாரு - எங்க க்ரூப்தான்:):)) செய்கிறோம்./// பட்டி சிறக்கவும் வேண்டிக்கோங்க :-)

///இதில் என்ன ஸ்பெஷல்னு கேக்கறீங்களா! வெறும் பக்தி மட்டுமல்ல. எல்லோரும் தினம் தினம் ஒரே மாதிரி கலர் புடவை, அலங்காரம், வேற வேற நைவேத்தியம் - சுண்டல், ஸ்வீட் இப்படி.வித விதமான பாடல்கள் கத்துக்கறோம் தினமும். அதுவும் வேற வேற மொழிகளில்.

இதுக்கெல்லாம் எங்களால் நேரம் ஒதுக்க முடிகிறது என்றால், அது எங்களுக்கே எங்களுக்காக நாங்கள் எங்கள் ரசனையைப் பகிர்ந்து, நட்பை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் எங்களை எப்பவும் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்காகதான்.///

அப்படி சொல்லுங்க . இக்கால பெண்களுக்கு தனக்கான நேரங்களை ஒதுக்கிக்க தெரியலைன்னு சொல்ல வரீங்களா? இப்படி எதிர் அணி கேட்பாங்க . ஒரு பெண் தனக்கான நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியுங்கறதுக்கு நாங்களே உதாரணம்னு சொல்லிருக்காங்க சீதாம்மா.

வாங்கப்பா அடுத்தவர்களுக்கே அணியினரின் பதில் என்னன்னு சொல்லிட்டுப்போங்கப்பா.

//பாருங்க நடுவரே நீங்களும் கூவி கூவி கூப்பிடறீங்க. தோழிகளுக்கு ஆர்வம் இருந்தாலும் இங்கே வந்து பதிவு போட நேரம் கிடைக்காமல் இருக்காங்க. // வராததுக்கு இப்படியும் காரணம் இருக்குமோ??!
///அன்புக்குரியவர்களுக்கு தேவையானதெல்லாம் செய்து விட்டு நமக்கென்று நேரம் கிடைக்கும் போது தூக்கம் வந்திடுது. தூக்கத்தை தியாகம் செய்தால் நமக்கான நேரம் கிடைக்கும். அப்போவும் நாமதான் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. என்ன கொடுமை நடுவரே!/// இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா ? அதான் நான் பட்டி துவங்கிட்டேன்.

///என் ஆசை 9நாட்களும் என்னிடம் உள்ள எல்லா பொம்மைகளையும் வைத்து நட்புகளையும் உறவுகளையும் அழைத்து எதிரணியினர் போல் கொண்டாட வேண்டும் என்பதுதான். ஆனால் நடப்பதோ :(/// அடுத்த முறை உங்களின் விருப்பப்படி நடத்துங்கள் தோழி.

///ஆனால் ஒன்னு நடுவரே... உங்க தலைப்பு பெண்களோட ஆதங்கத்தையெல்லாம் சொல்லுவதற்கு ஒரு இடமா அமைஞ்சிடுச்சு. தேங்க்ஸ் :)/// அவ்வ்வ்வ்வ்வ்வ் அமைதியா தூங்கிட்டு இருந்தவங்களையெல்லாம் எழுப்பிவிட்டுட்டனோ???!!!

/// அப்புறமா முடிஞ்சா வாரேன் நடுவரே!./// கண்டிப்பா வரணும் (வடிவேலு வாய்ஸ்ல ).

தன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவே நேரத்தை செலவு செய்கிறாள் பெண்.

ML

மேலும் சில பதிவுகள்