பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

இந்து அக்கா முதல்ல என்ன நடுவராக இருக்க சொன்னதுக்கு நன்றி. நடுவராக இருப்பதற்கு இன்னும் எனக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லையென்று நினைக்கிறேன். இருந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடுவராவேன்.! மீண்டும் நன்றிகள்.! போன விவாதத்தில் உங்களை ஏதேனும் காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். பட்டிக்காகவே வாதிட்டேன். நிஜத்தில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அடுத்த நடுவராக "இமா அம்மா" இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

- பிரேமா

பட்டி மன்றத்தில் பேசுவது எப்படி என்னை காயப்படுத்தி இருக்கும்..

உண்மையில் உங்களுடன் தொடர்ந்து வாதிடாமல் விட்டு விட்டேனே என்ற வருத்தத்தில் இருக்கிறேன்.. கோவில் அப்படி இப்படி என்று கொஞ்சம் பிஸி..

இல்லை என்றால் நிறைய பதிவுகள் போட்டு இருப்பேன்..
நீங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. உங்கள் தரப்பில் நன்றாக பேசி விட்டீர்கள்..

உங்களுக்கு கிடைத்த விருதிற்கு என் நன்றிகள்.

தோழிகளே அடுத்த பட்டி தீபாவளி முடிந்து ஆரம்பிக்கலாம் . அடுத்த நடுவரை இன்னும் இரண்டு தினங்களில் அறிவிக்கிறேன் . அவர் தலைப்பினை முந்தைய பட்டி தலைப்புகள் இழையில் எடுத்தாலும் நலம் . தனது சொந்த தலைப்பை எடுத்தாலும் நலம் . ஆனால் ஒரு விஷயம் மதம் சார்ந்த , அரசியல் சார்ந்த தலைப்புகள் வேண்டாம் . பொதுவான தலைப்புகள் , நகைச்சுவையான தலைப்புகள் , உபயோகமான தலைப்புகள் எடுத்தால் நலம் . அடுத்த பட்டி ஆரம்பிக்கும் முன் அனைவரும் விதிமுறைகளையும் , முந்தைய பட்டிகளையும் படிக்க வேண்டுகிறேன் . புது முகங்களாக இருந்தால் ஒரு ஐடியா கிடைக்கும் , கூடவே எடுக்கப்பட்ட தலைப்புகளும் பார்த்து விடுவீர்கள் .

மேலும் சில பதிவுகள்