முருங்கைக்காய் மசாலா

முருங்கைக்காய் மசாலா

தேதி: October 18, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 20 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

முருங்கைக்காய் - 3 அல்லது 4
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1ஆர்க்கு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

மசாலா அரைக்க :
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 6 - 7
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி


 

முருங்கைக்காயை லேசாக தோல் உரித்து 2 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
நறுக்கின காய்கள்
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் அரைத்தல்
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்குதல்
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி முருங்கைக்காய், அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும்.
முருங்கைக்காய் மசாலா
ஈசியான முருங்கைகாய் மசாலா தயார்.
முருங்கைக்காய் மசாலா

இதே முறையில் முருங்கைக்காய்க்கு பதிலாக கத்தரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்