சீஸ் மஃபின்

தேதி: March 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - இரண்டரை கோப்பை
சர்க்கரை - இரண்டு மேசைக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் - கால் கோப்பை
முட்டை - ஒன்று
துருவிய பார்மஸான் சீஸ் - ஒரு கோப்பை
பால் - ஒன்றரை கோப்பை
நறுக்கிய சைவ்ஸ் இலைகள்(chive leaves) - கால்கோப்பை
பேக்கிங் பவுடர் - இரண்டு தேக்கரண்டி
ஆப்பசோடா - ஒரு தேக்கரண்டி
துருவிய பார்மஸான் சீஸ் - அரைக்கோப்பை
கடுகுத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

பன்னிரண்டு குழிகளுள்ள மஃபின் டின்னில் வெண்ணெயை பூசி தயார் நிலையில் வைக்கவும்.
அவனை 350 டிகிரி Fல் சூடாக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மாவையும், ஆப்பச்சோடா மற்றும் பேக்கிங் பவுடரை போட்டு சலித்து கொள்ளவும். அதனுடன் சர்க்கரை மற்றும் வெண்ணெயைப் போட்டு கைகளால் நன்கு பிசறி கொள்ளவும்.
பிறகு முட்டையை அடித்து அதில் ஊற்றவும். தொடர்ந்து ஒரு கோப்பை சீஸ், பால், கடுகுத்தூள், சைவ் இலைகள் ஆகியவற்றைப் போட்டு கரண்டியின் உதவியால் நன்கு கலக்கவும்.
பிறகு தயார் நிலையிலுள்ள டின்னில் சரிசமமாக எல்லா குழிகளிலும் ஊற்றி மீதியுள்ள அரைக்கோப்பை சீஸை எல்லா மஃபினின் மீதும் பரவலாகத் தூவவும்.
பின்பு இதனை அவனில் வைத்து இருபத்தைந்து நிமிடம் வரை வேகவைத்து வெளியில் எடுத்து ஆறவைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்