குழந்தை வாந்தி எடுப்பது ஏன்

என் குழந்தைக்கு 7 மாதம் 10 நாள் ஆகிறது .... அவன் வாந்தி எடுத்துட்டு இருக்கான் எப்போ பாத்தாலும்... எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்ன செய்வது யாரது வழி சொல்லுங்கள் அம்மா பால் வாந்தி தான் இன்னும் எடுக்கிறான் என்ன புட் கொடுத்தாலும் அது பால் கூட கலந்து சளி மாதிரி எடுக்கிறான் பால் திரேஞ்சி போன மாதிரி எடுக்கிறான்... நான் டாக்டர் கிட்ட போய் காமிக்கும் போது அவங்க ட்ராப்ஸ் குடுத்தாங்க அப்புறம் சரி ஆகுது பிறகு வாந்தி எடுப்பது ஆரம்பம்..... நான் bonnison குடுக்கிரேன் ....

தோழி பயப்பட வேண்டாம் . இதுபோல குழந்தைகள் பண்ணுவது இயல்புதான் . சரியாக ஜீரணம் ஆகாத நிலையில் இதுபோல வரும் . குழந்தைக்கு 7 மாதங்கள் என்று சொன்னீர்கள் , என்ன வகையான ஆகாரங்கள் கொடுக்கின்றீர்கள் ?
தாய்ப்பால் மட்டுமா ? அல்லது பருப்பு , ஆப்பிள் , பழங்கள் , கேரட் போன்ற காய்களின் சூப் இதுபோல அல்லது சாதம் இப்படி குடுக்கிறீர்களா ?

வெளி உணவு எதுவும் குடுக்கவில்லை (அதாவது தாய்ப்பால் மட்டும் தான் ) என்றால், குழந்தைக்கு பால் புகட்டியவுடன் படுக்கவைக்காதீர்கள் . குழப்தையை மார்போடு சேர்த்து அணைத்து முதுகை நீவிக்கொடுங்கள் . சிறிய அளவிளான ஏப்பம் குழந்தையிடம் இருந்து வரும் . பிறகு தூங்கவோ , விளையாடவோ அனுமதியுங்கள் .

மற்றொன்று பல் முளைக்கும் முன்னதாகவும் இப்படி வரும் என்று சொல்வார்கள்.

இல்லை வெளி உணவு கொடுக்கிறீர்கள் என்றால் எவ்வகையான உணவு கொடுக்கும்போது இப்படி வருகிறதுன்னு முதலில் கவனியுங்கள் .

நீங்கள் சொல்லி இருக்கும் மருந்து Bonnisan Drops (பொன்னிசன்) டாக்டர் கொடுத்ததா ? இது வயிற்று செரிமானத்திற்காக கொடுக்கப்படும் மருந்து . மருத்துவர் எவ்வளவு காலம் கொடுக்க சொன்னார் ? அவர் சொன்ன காலம் தாண்டியும் இதுபோல உள்ளதா ? அப்படி இருந்தால் அவரிடம் மீண்டும் சென்று உங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவும் , நிம்மதியும் அடையுங்கள் தோழி .
சில பெண்கள் மருத்துவரிடம் பேசவே பயப்படுவார்கள் . தனது சந்தேகங்களை கேட்டால் அவர்கள் என்ன நினைப்பாங்களோ என்ற எண்ணம்கூட காரணமாக இருக்கலாம் . ஆனால் நம் உடல் , நம் பிள்ளைகளின் நலன் ஆகையால் அம்மாக்கள் எப்பொழுதும் தைரியமாக இருக்கவேண்டும் . கவலைப்படாதீர்கள் விரைவில் சரியாகிடும் .

இது ரொம்ப சாதாரணம். அதிகமாக பால் அருந்தியிருந்தால் அதன் மீதம் வெளியேறும். பால் போல் திரிந்து வருவதால் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் பயப்படாமல் இருங்கள். என் குழந்தைக்கும் இந்த அனுபவம் உள்ளது. நான் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தூள் உடன் சிறிது உப்பு கலந்து கொடுத்திருக்கிறேன். அது சரியாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். க்ரைப் வாட்டர் கொடுத்து பாருங்கள் பொன்னிசன் மற்றும் க்ரைப் வாட்டர் இரண்டும் ஒன்றே.

"கக்குற பிள்ளை தக்கும்னு சொல்வாங்க" .. நீங்க கொடுக்கிற உணவை / பாலை அளவா இடைவெளி விட்டு கொடுத்து பாருங்க. பால் குடிச்சதும் தோள்ல போட்டு தட்டி ஏப்பம் விட்டதும் கீழே போடுங்க. சரியாகும்.

- பிரேமா

குழந்தை எப்படி இருக்கிறான் ? வாந்தி குறைந்திருக்கிறதா ? மருத்துவரிடம் சென்றீர்களா ?

Knjam koranjirunthathu ippo nethi night Al irunthu pulicha smells ah vomit pandran na Enna panatum 7 month 21days boy baby

Ennoda queationsku nega epovumey rply pandrega romba thanks bonnison na 2ml kudupan IPO pulicha smell ah vomit pandran

Ama sis IPO pulicha smells ah vomit pandran na paruppu carrot apple tharan breast feed um pandran so nan ethum saptalum avan vomit panvana ....na cake and parotta hotels ah saptan ...something wrong Avan Nala ah active ah irukan bt vomit smells pulipu smells ah iruku vomit panna 2ml bonnison kudupan
swetharamalingam95@gmail.com

குழந்தைக்கு வயிற்றில் தொற்று இருக்கக் கூடும். நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு தடவை மருத்துவரிடம் காட்டிவிட்டால் நல்லது இல்லையா!

‍- இமா க்றிஸ்

புளிப்பு ஸ்மெல் இருக்குன்னா மாந்தம் இருக்குனு அர்த்தம். உங்க சாப்பாட்டுல கவனம் செலுத்துங்க. நீங்க புளிப்பு அதிகம் சேர்க்காதீங்க. நீங்க பால் கொடுக்கிறதால ரொம்ப கவனமா இருங்க. (மாம்பழம், மாங்காய் தவிர்த்திடுங்கள்)

முயற்சி செய்து பாருங்கள் : கொஞ்சம் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தூள், உப்பு கலந்து குழந்தைக்கு இரவு வேளையில் கொடுத்து பாருங்கள். ஓமம் தண்ணீரும் கொடுக்கலாம் (வீரியம் அதிகமாக இருக்க கூடாது, இருந்தால் சிறிது வெந்நீர் கலக்கவும்).

- பிரேமா

ஸ்வேதா,
இன்னும் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கவில்லையா? பருப்பு, கேரட், ஆப்பிள் ஒரே நாளில் குடுப்பீர்களா? அதாவது, ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொன்றாக. ஏன் கேட்கிறேன் என்றால், இவை மூன்றும் ஜீரணிக்க நேரமெடுக்கும். ஆப்பிள் சிலருக்கு எதிர்த்துக்கொண்டு வரும். ஒரு வாரம் தாய் பால் மட்டும் கொடுப்பது நல்லதுன்னு நினைக்கிறேன். நாம் நினைப்பது ஒருபக்கம் தோழி, மருத்துவரிடம் போனீங்களா? இல்லையா?

மேலும் சில பதிவுகள்