சிக்கன் மசாலா ரோஸ்ட்

சிக்கன் மசாலா ரோஸ்ட்

தேதி: October 22, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - ஒரு கப்
காய்ந்தமிளகாய் - 13
பூண்டு - 1
பட்டை - 3
லவங்கம் - 4
ஏலக்காய் - 4
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு


 

காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் காய்ந்தமிளகாயுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், மஞ்சள்தூள் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைத்தல்
ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
தயிர் அரைத்த விழுது
சிக்கனை கலவையுடன் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். பிரிட்ஜில் வைக்கவும்.
சிக்கன் கலவை
கடாயில் எண்ணெய் விட்டு ஊறவைத்த சிக்கனை சேர்த்து சிம்மில் வேக விடவும். அடிக்கடி கிளறி வேகவிடவும்.
சிக்கன் வேக வைத்தல்
நன்கு மசாலா சேர்ந்து சிக்கன் வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சிக்கன் மசாலா ரோஸ்ட்
சிக்கன் மசாலா ரோஸ்ட் தயார்.
சிக்கன் மசாலா ரோஸ்ட்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்