கனேடியன் சால்மன்ஃபிஷ் ஃபில்லட்ஸ்

தேதி: March 7, 2007

பரிமாறும் அளவு: 4நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளில்லாத மீன் (fillets) - நான்கு துண்டுகள்
சோயாசாஸ் - அரைக்கோப்பை
அன்னாசிப் பழச்சாறு - அரைக்கோப்பை
ரெட் ஒயின் வினிகர் - கால் கோப்பை
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
பிரவுன் சுகர் - கால் கோப்பை
பூண்டு - நான்கு பற்கள்
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஹாட் பெப்பர் சாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மீன் துண்டுகளை கழுவி ஈரம் போக நன்கு துடைத்து வைக்கவும்.
பூண்டை நொறுங்க நறுக்கி ஒரு அகலமான பீங்கான் பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் மீன் மற்றும் எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
சர்க்கரை நன்கு கரையுமாறு கலக்கி மீன் துண்டுகளை அதில் போட்டு மீனின் எல்லாப் பகுதியிலும் சாஸ் படும் படியாக செய்யவும்.
பிறகு அதை பிளாஸ்டிக் பேப்பரினால் இறுக்கமாக மூடி அரை மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிடவும்.
பின்பு அடுப்பில் நேரிடையாக வைக்கும் க்ரில்லில் எண்ணெயைத் தடவி சூடேற்றவும்.
நன்கு சூடானதும் மீனை ஊறிய கலவையிலிருந்து எடுத்து க்ரில்லில் வைத்து வேகவிடவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு சிவக்க வேகவைத்து எடுத்து விடவும்.
இவ்வாறு க்ரில்லின் அளவிற்கு ஏற்றவாறு போட்டு சுட்டெடுக்கவும்.
இந்த சுவையான ஃபிஷ் ஃபில்லட்ஸை உருளைக்கிழங்கு சிப்ஸ்சுடன், பிடித்தமான சாலட்டையும் வைத்து முழு உணவாக பரிமாறவும்.


அவனில் உள்ள கிரில் செய்யும் ரேக்கில் வைத்தும் மீன் துண்டுகளை க்ரில் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்