முறுக்கு

தீபாவளி முறுக்கு

தேதி: November 2, 2018

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்

மொத்த நேரம்: 35 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பச்சரிசி - 5 1/2 கப் (1 கிலோ)
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

அரிசியை தண்ணீரில் களைந்து, ஒரு சுத்தமான துணியில் அரை நாள் வரை உலர விட்டு எடுக்கவும். உளுந்தையும், கடலைப் பருப்பையும் தனித்தனியே வாணலியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
அரிசி பருப்பு
நன்கு காய்ந்த அரிசியுடன் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவு
பெருங்காயத்தை 2 மேசைக்கரண்டி தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் மாவில் இரண்டு கப் அளவு மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு மற்றும் எள்ளு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அரிசி மாவு
அதன் பிறகு பெருங்காயத் தண்ணீரை ஊற்றி பிசையவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து மாவு கெட்டியாக மிருதுவான பதம் வரும் வரை பிசையவும்.
முறுக்கு மாவு
முறுக்கு பிழியும் உரலில் விருப்பமான முறுக்கு அச்சை போட்டு மாவை உரல் கொள்ளும் அளவிற்கு வைத்து மூடவும். சில்வர் சாரணி அல்லது சில்வர் தட்டுகளில் முறுக்கை பிழிந்து வைக்கவும்.
முறுக்கு
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை ஒன்றிரண்டாகப் வேகவிடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி விடவும்.
முறுக்கு
எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் முறுக்கு லேசாக சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். இதுப் போல எல்லா மாவிலும் செய்யவும். சுவையான மொறுமொறுப்பான தீபாவளி முறுக்கு தயார்
தீபாவளி முறுக்கு


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்