வேண்டுகோள் ப்ரட் வகைக்கு தனி பிரிவு

அட்மின் அண்ணா,இதர பிரிவுகள் பகுதியில் ப்ரட் வகைக்கு(சாண்ட்விச்,டோஸ்ட்) ஒரு பகுதி ஒதுக்கி தந்தால் வசதியாக இருக்கும்

தங்களின் ஆலோசனைக்கு நன்றி. அறுசுவையில் இன்னும் நிறையப் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டியிருக்கின்றது. ஆனால், இதில் உள்ள ஒரு பிரச்சனை, புதிதாக பிரிவுகள் சேர்க்கையில், வலப்பக்க Navigation bar மிக நீளமாக செல்லும். அது மிகவும் நீளமாக இருத்தல் நல்லதல்ல. நான் ஏற்கனவே ஒருமுறை இதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். Menu type navigation கொண்டு வருவதை பரிசீலிப்பதாக. இதற்கு மாற்றாக வேறு சில திட்டங்களும் உள்ளது.

விரைவில் நிறையப் பிரிவுகளைக் கொண்டு வருகின்றோம். மற்றொரு விசயம், ஒரு பிரிவு கொண்டு வரவேண்டுமெனில் அந்தப் பிரிவில் குறைந்தது 20 அல்லது 25 குறிப்புகள் இருந்தால்தான் நன்றாக இருக்கும். தாங்கள் தற்போதைக்கு இருக்கும் பிரிவுகளில் பொருத்தமானதாக பார்த்து அதில் சேர்க்கவும். உதாரணமாக, ப்ரட் கொண்டு செய்யப்படும் உணவுகள் பொதுவாக சிற்றுண்டி வகையைச் சார்ந்ததாக இருக்கும். ப்ரட் பஜ்ஜி போன்றவை பஜ்ஜி பிரிவில் சேர்க்கப்படவேண்டியிருக்கும்.

ப்ரட் குறிப்புகள் நிறைய சேர்ந்தவுடன், அதற்கு தனிப்பிரிவு கொண்டு வந்துவிடலாம். பிரிவுகள் கொண்டு வருவது எளிதான செயல். எந்த நேரத்திலும் செய்யலாம். கவலை வேண்டாம்.

நன்றி அட்மின்.

மேலும் சில பதிவுகள்