Scar endometriosis பற்றிய விளக்கம் தேவை தோழிகளே..

தோழிகளே அனைவரும் நலமா? எனக்கு பிரியட்ஸ் டைம் அதிகமான வலி இருந்தது இடதுபுறம் அடிவயிற்றில்.5 மாதத்திற்கு முன்பு ஆரம்பித்தது டாக்டரிடம் காண்பித்து மாத்திரை சாப்பிட்டதும் வலி ஒவ்வொரு மாதமும் குறைந்தது.இது scar endometriosis சொன்னாங்க. இது எதனால் ஏற்படுகிறது? வராமல் தடுக்க முடியுமா?

எம் உடலில் பலவிதமான பிரச்சினைகள் வருகின்றன. எல்லாவற்றையும் வராமல் தடுக்க நினைத்தால்... இதுவே முழுநேர வேலையாக இருக்கும். வாழ்க்கையை ரசிக்கவே முடியாது. சிலவற்றைத் தவிர்க்கலாம். பலதைத் தவிர்க்க முடியாது. வந்த பின்னால் 'இதனால் தான்' என்று காரணம் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அவ்வளவுதான். எந்தப் பிரச்சினையும் முதல் முறை வந்த பின்னால் தான் தவிர்க்க / குறைக்க என்ன செய்யலாம் என்பதைப் பார்க்க முடியும். கடைசி இரண்டு கேள்விகளையும் உங்கள் மருத்துவரிடம் கேட்கவில்லையா? இனி என்னவென்றாலும் மருத்துவரிடம் உடனுக்குடனே கேட்டுக் கொள்ளுங்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்க தான் முதல் பதிவு போடுவிங்கன்னு நினைச்சேன்.நன்றிம்மா. அடுத்த முறை வரச்சொல்லிருக்காங்க, அந்த டைம் கேக்கனும்மா.தோழிகளுக்கு இதைப் பற்றி தெரியுமோ என்று கேட்டேன்..

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்