Tubal pregnancy after Tubal block

Enaku first baby 4 yr aguthu.8 month before enaku tubal pregnancy open surgery pani right side tube remove panitanga.ippo intha month tube test pannen left side um block iruku.intha month follicular study panitu egg growth iruku conduct vachuka sonnanga Nan marupadi tubal aedum nu bayanthutu Dr kita sonnen so avanga fibroend,dupspaston,vitamine e tablet koduthurukanga..next period vanthona Vara sollirukanga..enaku laparoscopy or test tube baby than chance iruku nu sollaranga.enaku normal conceive aganum evlo yr ananum paravailla..enaku ipothaiku entha operation pantrathuku udambum enargy illai.yenna enaku 3 operation(1 breast fibroid ,2 open surgery)enna pannalam frds.enaku one side tube cure aga enna pannalam.ayurvedic polama? Vera Dr pogalama? sollunga frds enaku innum 2 days la period vanthudum..ungala en kadavul mathiri ninaikuren pls help me friends....

'எவ்ளோ இயர் ஆனாலும் பரவால்ல' என்கிறீர்கள். இதைப் பற்றிய என் அபிப்பிராயம் - கர்ப்பமாகிய பின் தான் எங்கே குழந்தை தங்கி இருக்கிறது என்று தெரிய வரும்! ஒன்று, பயந்து குழந்தை வேண்டாம் என்று இருந்து விடலாம். அல்லது ரிஸ்க் எடுத்து, பிழைத்துப் போனால் திரும்ப சத்திர சிகிச்சைக்குப் பின் மீண்டும் முன்பிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது இப்பொழுதே குழந்தைப் பேற்றுக்கான சிகிச்சையில் இறங்கலாம்.

குழந்தை சரியான இடத்தில் தங்குவதை முன்பே நிச்சயம் செய்து கொள்ள வழி சொல்கிறார் மருத்துவர். வேறு மருத்துவரிடம் போனாலும் இதையே தான் சொல்லுவார்.

ஆயுர்வேத சிகிச்சை - நாள் எடுக்கும். முடிவைத் தெரிந்து கொள்ள இடைக்கிடை அடைப்பு நீங்கி இருக்கிறதா என்பதைச் சோதித்து, அடைப்பு நீங்கிற்று என்று நிச்சயம் தெரிந்த பின் (இது ஆகுமா ஆகாதா, எத்தனை காலம் கழித்து ஆகும் என்பதை ஊகிக்க முடியாது. உங்கள் வயது ஏறிக்கொண்டே இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விடயம்.) கர்ப்பம் தரிக்க முயற்சி செய்யலாம். யோசியுங்கள்.

இப்போது உங்கள் மருத்துவர் சொல்படி கேட்பது நல்லது, வசதி, சுலபம் & குழந்தை கிடைக்கும் சாத்தியம் அதிகம் உள்ள விடயம்.
இத்தனை சர்ஜரி என்கிறதை எண்ணிப் பயந்தால் குழந்தையே வேண்டாம் என்று விட வேண்டும். பிரசவ சமயம் சிசேரியன் ஆக நேர்ந்தால் அப்போது பின்வாங்க முடியாதே!

‍- இமா க்றிஸ்

Thanks Amma..neenga solvathum sarithan.enakku kulanthai vendum dr solvathai kekuren.

My heroes my husband & my son

ஹலோ ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா எனக்கு ஒரு வருடம் முன்னாடி எக் டோபிக் பிரக்னன்சி ஆகி வலதுபக்க டியூப் எடுத்துவிட்டார்கள் பின்னர் ஆறு மாதம் கழித்து டியூப் டெஸ்ட் செய்து பார்த்தேன் மருத்துவர் வலதுபக்க டியூபில் அடைப்பு உள்ளது என்றார் அப்புறம் நாட்டு மருந்து எடுத்துக் கொண்டேன் ஆறு மாதம் கழித்து மறுபடியும் மருத்துவமனையில் போன ஜூலை மாதம் டெஸ்ட் எடுத்தேன் அவர்கள் டியூபை கிளீன் செய்து அடைப்பு இல்லை என்று கூறினார் அதோடு மருத்துவர் மூன்று மாதங்கள் போலிக் ஆசிட் டேப்லெட் எடுக்கச் சொன்னார் முதல் இரண்டு மாதங்கள் முடிந்தன போன மாதம் ஆகஸ்ட் நான்காம் தேதி மாதவிடாய் வந்தது இந்த மாதம் வரவில்லை நான்கு மாதங்களாக 27 நாட்களுக்கு முன்னரே மாதவிடாய் வந்துவிடும் இந்த மாதம் வரவில்லை எனக்கு முதுகு வலி உடல் சோர்வு தூக்கம் குமட்டல் கால் வலி உள்ளது வயிறு ஒரு மாதிரி உள்ளது நான் எப்போது இதனை சோதனை செய்ய வேண்டும் இல்லை மருத்துவரை சென்று பார்க்கலாமா உதவுங்கள் தோழிகளே

My heroes my husband & my son

நீங்கள் 40 அல்லது 45 நாட்களில் பரிசோதித்து பாருங்கள். நல்ல செய்தியாக இருக்க என் வாழ்த்துக்கள்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்