Help me

Hi one year baby iruku. Normal delivery dhan achu. Nan studies muduchutu school teacher ah join panniruken .enaku konjam depression agara mathiri feeling iruku. Nan morning 5o clock eluthurupen adhoda night 11 o clock dhan thugaren. Morning La tried ah irundhuchi hb check pannen normal dhan. Family la konjam problem irundhachu but ipo ila. analum mind upset ah iruku. Baby en mom in law pathukaraga. Ipo enaku veetlayum work adigam school layum work adigam. Mind epdi relax panradhu pls sis help me

வீட்டை விட்டுக் கிளம்பினால் அந்த நினைவுகள் பாடசாலை வரை தொடர விட வேண்டாம். அதே போல் பாடசாலைக் கவலைகளை முடிந்த வரை பாடசாலையிலேயே விட்டுவிட்டு வந்து விட வேண்டும்.

எப்படியும் குழந்தைக்காகவும் வீட்டிலிருக்கும் நேரத்தில் கணிசமான அளவு செலவாகிவிடும். உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். வாரம் ஒரு நாள் உங்கள் நாள் என்று வைத்து கொண்டு, விரும்பியதைச் செய்யுங்கள். உங்களால் முடிந்ததைத் தான் நீங்கள் செய்ய முடியும். ஓவராக வேலைகளைத் தூக்கிப் போட்டுக் கொள்ள வேண்டாம். முக்கியமானவற்றை மட்டும் செய்யுங்கள். மீதி வேலைகள் காத்திருக்கலாம். தூக்கம் & ஓய்வு அவசியம். நேரம் போதவில்லை என்று தூக்கத்தைக் குறைத்தால் பிரச்சினைதான். அதை விட, 'இவ்வளவு தான் என்னால் முடியும். முடிந்ததைத் திருப்தியாகச் செய்திருக்கிறேன்,' என்கிற நினைவோடு அமைதியாக இருங்கள். நீங்கள் நன்றாக இருந்தால்தான் மீதி எல்லாம் நன்றாக ஓடும். எதற்காகவும் ஓய்வைத் தவிர்க்க வேண்டாம். அதே போல உணவையும் பின்போடவோ தவிர்க்கவோ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்