சுருள் கீரை பொரியல்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சோம்பு இலைகள் - 6
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
துருவிய வெல்லம் - ஒரு மேசைக்கரண்டி
புளித்தண்ணீர் - கால் கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்லு
வெங்காயம் - ஒன்று
கிராம்பு - 2
பட்டை - ஒன்று
கடலை மாவு - முக்கால் கப்
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு


 

பெரிய இளசான சோம்பு இலைகளை அலம்பி துடைத்து நடு நரம்புகளை லேசாக எடுத்துவிட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவியது, வெல்லம் துருவியது, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, முதலியவற்றை நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
கடலைமாவுடன் மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, பேக்கிங்பவுடர், உப்பு, புளிதண்ணீர் முதலியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சோம்பு இலையைத் திருப்பிப் போட்டு இக்கலவையை அதன் மீது லேசாக முழுவதும் தடவவும்.
இதன் மீது இன்னொரு இலையைக் கவிழ்ந்து போட்டு கலவையை அதன் மீது தடவவும்.
இவ்வாறே 6 பெரிய இலைகளிலும், இருக்கும் கலவை முழுவதையும் சமமாக சீராகத் தடவிய பின்னர் இரு புறத்திலும் ஓரத்தை லேசாக உட்புறமாக மடித்து, இறுகச் சுற்றவும்.
பின்னர் இதனை இரு பக்கத்திலும் நடுவிலும் நூலினால் கட்டவும். இந்த இலைச் சுருளை ஆவியில் சுமார் 15லிருந்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இலையின் நிறம் மாறி உள்ளேயிருக்கும் கலவையும் வெந்திருக்கும். ஆவியிலிருந்து எடுத்து நூலை எடுத்து விட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கொஞ்சமாக எண்ணெய் விட்டு இவற்றை பொன் நிறமாக வதக்கி கொத்தமல்லி கறிவேப்பிலை தூவவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்தக் குறிப்பின்படி சமைத்துப் பார்த்தேன். சற்று வடை சுவையோடு சுவையாக இருந்தது.

‍- இமா க்றிஸ்