உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

பூண்டு குழம்பு



தேவையானப் பொருட்கள்

  • முழு பூண்டு - 4
  • பழைய புளி, புது புளி இரண்டும் சேர்த்து - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • தூள் வெல்லம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு - ஒரு மேசைக்கரண்டி
  • சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • கல் உப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டுனை தோலுரித்து வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
step 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு போட்டு வெடிக்கவிடவும்.
step 2
அதன் பின்னர் அதில் தோலுரித்த பூண்டு பற்களைப் போட்டு பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.
step 3
பூண்டு வதங்கியதும் மிளகுடன் சேர்த்து எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
step 4
ஊறிய புளியை கரைத்து இரண்டு கப் அளவிற்கு கரைசல் எடுத்துக்கொள்ளவும்.
step 5
அரைத்த பூண்டு மிளகு விழுது உள்ள பாத்திரத்தில், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
step 6
அதில் புளிகரைசலை ஊற்றி, கரைத்துக்கொள்ளவும்.
step 7
வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
step 8
அதில் புளி கரைசலை ஊற்றி, வாணலியை மூடி வைத்து கொதிக்க விடவும்.
step 9
குழம்பு கொதித்து கெட்டியாக ஆனதும் வெல்லத் தூளை போட்டு கிளறி விட்டு இறக்கிவிடவும்.
step 10
இப்போது சுவையான அரைத்து விட்ட பூண்டுக்குழம்பு தயார்.
step 11
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.
step 12


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
pundu kulambu
மார்ச் 8, 2007 - 9:36pm - வழங்கியவர் miranda

inda pundu kulmbil kaykari serkklama? illyeal pundu pathi araikkamal mujuzaka podalama?

பூண்டு குழம்பு
மார்ச் 9, 2007 - 12:15am - வழங்கியவர் admin

பூண்டுக் குழம்பில் பெரும்பாலும் காய்கள் எதுவும் சேர்ப்பது கிடையாது. இதே முறையில் பூண்டினை அரைக்காமலும் செய்யலாம். குழம்புகள் பிரிவில் இன்னும் சில பூண்டு குழம்பு குறிப்புகள் உள்ளன. பார்வையிடவும்.

இங்கு செய்து காட்டப்பட்டுள்ள பூண்டு குழம்பினை 3 நாட்கள் வைத்திருந்து, தினமும் சாப்பிட்டேன். அவ்வளவு ருசி. இந்த குழம்பு பல நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

Tried this
மார்ச் 15, 2007 - 2:19am - வழங்கியவர் Dsen

Tried பூண்டு குழம்பு y'day... very easy to make & very tasty too... had it with rice & chapathis y'day... & also as a spread for bread today...:D Thanks a ton for the recipe... really appreciate your work, Mrs.Sumathi... :)

very nice
செப்டம்பர் 15, 2007 - 1:21pm - வழங்கியவர் sasi_koths

dear
பூண்டு குழம்பு செய்து பர்த்தென் .ரொம்ப நன்றாக இருந்தது.thanks

நன்றி
அக்டோபர் 9, 2007 - 4:14am - வழங்கியவர் thalika

அருமையாக இருந்தது ....நேத்து செஞ்சுட்டேன்....2 பூன்டு போட்டு செஞ்சேன்..இப்படி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா 1/2 கிலொ பூன்டுல செஞ்சுருப்பேன்.....சுமதி அவர்களுக்கும் வெளியிட்ட அட்மினுக்கும் நன்றி

தளிகா:-)

to admin
அக்டோபர் 28, 2007 - 6:28pm - வழங்கியவர் mubeenamohideen

வெல்லத்திற்கு பதில் சீனி சேர்க்கலாமா?(2 ஸ்பூன்).... தயவு செயிது சொல்லவும்.

முபீனா(சர்க்கரை சேர்க்கலாம்)
அக்டோபர் 28, 2007 - 6:52pm - வழங்கியவர் Jaleela Banu

முபீனா போடலாம் என்றுதான் நினக்கிறேன், வெல்லம் கிடைக்காத பட்சத்தில் சர்க்கரை சேர்க்கலாம்
ஜலீலா

to jaleela
அக்டோபர் 28, 2007 - 6:55pm - வழங்கியவர் mubeenamohideen

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)

அக்கா பதில் சொன்னதற்கு நன்றி

அன்பு தங்கை முபீனா
அக்டோபர் 30, 2007 - 4:54pm - வழங்கியவர் Jaleela Banu

அன்பு தங்கை முபீனா
வா அலைக்கும் அஸ்ஸலாம் என்னால் பதில் உடனே அஎழுத முடியவில்லை ,இன்னும் இரண்டு மூறு நள் கழித்து பேசமுடியும் என்று நினைக்கிறேன், புளிப்பு அயீட்டங்களுக்கு ஒரு சிட்டிகை இனிப்பு சேர்க்கனும், இனிப்பு அயிட்டங்களுக்கு ஒரு சிட்டிகி உப்பு சேர்கானும் அப்போது தன்ன் சுவை தூக்கலாக இஉர்க்கும்.
ஜலீலா

Nandraga ullathu
மார்ச் 2, 2008 - 2:50pm - வழங்கியவர் ammu2009

Nandraga ullathu

super poondu kulambu
ஏப்ரல் 11, 2008 - 4:20pm - வழங்கியவர் alarmelup

தங்கள் குறிப்புக்கு நன்றி

super poondu kulambu
ஏப்ரல் 11, 2008 - 4:20pm - வழங்கியவர் alarmelup

தங்கள் குறிப்புக்கு நன்றி

பூண்டு
ஏப்ரல் 11, 2008 - 6:14pm - வழங்கியவர் VidhyaSaravanan

பூண்டு குழம்பு அருமையாக இருந்தது. Thanks for sharing with us.

பூண்டு குழம்பு
ஜூன் 19, 2008 - 1:58pm - வழங்கியவர் Nila2006

நேற்று இந்த குழம்பு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்களும் நன்றியும். வாய்கச்சல் இருப்பவர்களுக்கு இந்த குழம்பு மிகவும் நன்றாக இருக்கும் :)
-நர்மதா :)

இன்று எங்க வீட்டில்
ஜூன் 19, 2008 - 3:38pm - வழங்கியவர் இலா

பூண்டு குழம்பு சூப்பர்... இன்று எங்க வீட்டில் பூண்டு குழம்பு / பொரிச்ச அப்பளம்.. நன்றி.. இதுவரை பூண்டு அரைத்து செய்த்தில்லை.. ரொம்ப அருமை.... தக்காளி இல்லாம வெங்காயம் இல்லாம காயும் இல்லாம தேங்காய் இல்லாம ஒரு ரெசிபி தேடியபோது கிடைத்தது.. ரொம்ப அருமை... மேல சொன்ன அனைத்து ஐட்டமும் வீட்டில் இல்லை...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

poondu kulambu
ஜூலை 27, 2008 - 2:41am - வழங்கியவர் anbusiva

poondu kulambu seithuparthom meha super
thodardum ungal panni engal kudapame
paratukirathu
anbutan,
anbusiva