Whirlpool microwave oven

Enda Husband enda Birthdayku Whirlpool microwave oven 25L gift panninar.. athula cake bake pannalama?? seiyalam enda ethina minutes?? enna temp? plz rpy me frnds.

பேக் பண்ணலாம் தான். ஆனால் அவன்ல பேக் பண்ற மாதிரி இருக்காது. அவன்ல பேக் பண்ண அடிக்கிற மிக்‌ஷரை மைக்ரோவேவ் அவன்ல பேக் பண்ணப் போட்டால் சரியா வராது. மைக்ரோவேவ்ல பேக் பண்ற கேக்கை உடனே சாப்பிட்டால் நல்லா இருக்கும். நேரம் செண்டா டெக்‌ஷர் மாறீரும். Whirlpool ப்ராண்ட் பெயர். நீங்க வைச்சிருக்கிற மொடல் என்ன எண்டதைச் சொன்னீங்க எண்டா அதே மாதிரி வைச்சிருக்கிற ஆக்கள் பதில் சொல்லலாம்.

பேக் பண்ண அவன்ல வைக்கிற மெட்டில் ட்ரே ஒண்டும் பாவிக்க ஏலாது. மைக்ரோவேவபிள் கண்ணாடி, செரமிக், ப்ளாஸ்டிக் அல்லது சிலிக்கன் பாத்திரம் தான் பாவிக்கலாம்.

//ethina minutes??// இது நீங்க பேக் பண்ணத் தெரியும் கேக்கையும் அளவையும் பொறுத்தது. மைக்ரோவ்ல இருந்து வெளிய எடுத்த பிறகு 'ஸ்டாண்டிங் டைம்; விட்டு வெட்ட வேணும்.
//enna temp?// இதுவும் ரெஸிப்பியையும் அளவையும் பொறுத்தது. பொதுவாக மைக்ரோவேவ் ஹையில இத்தினை நிமிஷம் எண்டுற மாதிரி தான் பேக் பண்ணுறது, நீங்க டெம்பரேச்சர் கேட்கிறீங்கள். மைக்ரோவேவோட வந்த புத்தகத்தை முழுசா வாசிச்சுப் பாருங்க. அதில ஒண்டு ரெண்டு ரெஸிப்பி குடுத்திருப்பாங்க. ட்ரை பண்ணிப் பாருங்க. எனக்கு ரிங் ட்ரே தான் விருப்பம். நடுவில பச்சையா இருக்கிற பிரச்சினை இராது. ஆர்பிகோவில நல்ல பாத்திரங்கள் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

மைக்ரோவேவ் ப்ரௌணி www.arusuvai.com/tamil/node/9499
மைக்ரோவேவ் கேக் www.arusuvai.com/tamil/node/10662
மைக்ரோவேவ் கேக் www.arusuvai.com/tamil/node/23346
மைக்ரோவேவ் வாழைப்பழ கேக் www.arusuvai.com/tamil/node/11362

இன்னும் குறிப்புகள் இருக்க வேண்டும். தேடிக் கொடுக்க நேரம் போதவில்லை. வனியின் மைக்ரோவேவ் வாழைப்பழ கேக் செய்து பார்த்திருக்கிறேன். நன்றாக இருந்தது. அங்கு பின்னூட்டமும் கொடுத்திருக்கிறேன்,

‍- இமா க்றிஸ்

Thank u so much..
Mw25bg ithu than model no..
Nan washing machine vanka poran.. entha brand nallam entru solla mudiyala?

மேலும் சில பதிவுகள்