ஆலோசனை தேவை 20 nal kulndhaiku

ennaku ankulandhai piranthu 20 nal akuthu. first kolandhai avan name kowshik. nethi fullya ora alukai doctor kida kamichom. pal paduthu kidu kodukurathala katru vayathukula poitu athu velila vandha dhan normal ya irrupanu solluranga. ennku opertion panni kolandai eduthanga. athana ukanthu pal koduka mudiyala. ellarum bayamuruthuranga (pirali vayu) kundhai romba alukuran 3 masam varikum epadi dhan irrukunu
konjom yarum pathil sollunga please

என் குழந்தைக்கு 1 வயது 3 மாதம் முடிந்து விட்டது.அவன் சின்ன வார்த்தை கூட பேசிறதில்ல .டாக்டர் அடிக்கடி பேசுங்க குழந்தைங்கட்ட விடுங்க.சரி ஆயிடும சொன்னார். .Bye காட்றான்..Flying kiss குடுக்குறான்.Gud mrg காட்றான்..முகத்துக்கு முன்னாடி பன்னா Response பன்றான்..நல்ல Activa ஆ இருக்கான்.அவனுக்கு கூட விளையாட பசங் இல்ல. அதனால இப்டி இருக்கானா.. ஒன்னும் புரியல...ஜ Contact மிஸ் ஆகுதுன்றாங்க...யாருக்காவது இப்டி இருந்து குணமாகிருக்கா....நல்லா நடப்பான்..சிரிப்பான்......இது ஆட்டிசமா..

நல்ல வேலை என் பதிவை படிக்ககவில்லை.. நான் மூன்று வயது பையன் என்று நினைத்து விட்டேன்.. ஒரு வயது தான்ஆகினஆகின்றது.. ப்ளே ஸ்கூல் போதும்.. நன்றாக பேசி விடுவார்கள்.. டிவி அதிகம் காட்ட வேண்டாம்..

பயம் ஒரு தீர்வல்ல. நீங்கள் அழுது புலம்புறதால ஒன்னும் ஆக போறதில்ல. முதல்ல நீங்க நம்பிக்கையோட இருங்க. அவனை என்கரேஜ் பண்ணுங்க. பக்கத்துல ஏதாது ப்ளே ஸ்கூல் இருந்தா சேர்த்து விடுங்க. குழந்தைகளோட இருக்கிற சூழல் கண்டிப்பா உங்க குழந்தைகிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும்.

வீட்டுக்குள்ளேயே வைக்காம வெளில கூட்டிட்டு போங்க. அவனோட நிறைய பேசுங்க. நீங்களும் அவனோட விளையாடுங்க. இப்பதான் அவனுக்கு 1 வயது 3 மாதம் ஆகிறது. இன்னும் அவனுக்கு நிறைய டைம் இருக்கு. எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. சில குழந்தைகள் சீக்கிரம் பேசுவாங்க. சில பிள்ளைங்க கொஞ்சம் லேட்டாகும். பயப்படாம தைரியமா இருங்க. உங்க பையனுக்கு ஒன்னும் இல்ல.

- பிரேமா

இதுக்கெல்லாம் போய், 'வாழப் பிடிக்கல,' எனப்படாது. உங்கள் குடும்பத்தாருக்கு என்ன ஆனாலும் சப்போர்ட் பண்ண வேண்டியவர் நீங்க. சந்தேகங்கள் வரப்படாது; வந்தால் டாக்டர் யாரிடமாவது கேட்கணும்.

'ஐ கான்டாக்ட்' என்று சொல்றது பார்வைக் குறைபாடு இல்லை. அதுக்கும் எட்டுக்கால் பூச்சியைத் துரத்துறதுக்கும் தொடர்பு இல்லை. மனிதர்களை முகம் பார்த்துப் பேசுவது - 'ஐ காண்டாக்ட்'. நீங்க சந்தோஷமா முகத்தை வைச்சுக்கங்க. கவலையான முகத்தோட குழந்தை உங்களைப் பார்த்தால் உங்கள் பிரயாசை பலன் கொடுக்காது. சிரிச்ச முகத்தோட குழந்தையின் முன் அமர்ந்து அவன் முகம் பார்த்துப் பேசுங்க. அந்தச் சமயம் வேறு வேலைகளின் என்ணம் உங்களுக்கு இருக்கக் கூடாது. பெயரை ஓயாம கூப்பிடுவது... மெக்கானிக்கலா தெரியுது. வேலை செயும் என்று தோணல. அது மட்டும் போதாது. பேசணும், அர்த்தமுள்ள பேச்சாப் பேசணும்; குழந்தைக்குப் பிடிக்கிற மாதிரி பேசணும். நீங்க இன்னும் நிறைய நேரம் குழந்தையோட செலவளிக்கப் பாருங்க. தைரியமா இருங்க. குழந்தையை சந்தோஷமா வைச்சுக்கங்க.

‍- இமா க்றிஸ்

அட உங்களுக்கு வந்த சோதனையா இது.. புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பதிவு.. விரைவில் உங்கள் டைப்பிங் செட் ஆகிவிடும்..

;-) ஆகாது இந்து. என் இயந்திரம், தமிழ் தட்டுவதற்கானதல்ல. இரண்டாவது - நேரம். அறுசுவைக்கு என்று ஒதுக்கும் நேரத்துௐௐஉள். ;0 இப்படியும் தட்டுகிறது பாருங்கள். ;-0 ப்ராக்கட் தட்டினால் 0 வரும். ! தட்டினால் 1 வரும். சரியாக்குவதற்கு பதினைந்து மடங்கு நேரம் பிடிக்கிறது. சரியாக்க இதை விட முக்கியமான காரியங்கள் இருக்கின்றன. ;-0 இப்போதைக்கு இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை.

மிக்க நன்றி பிரேமா. பெரிய உதவி செய்திருக்கிறீங்க.

‍- இமா க்றிஸ்

.Plz clear my doubt.

மேலும் சில பதிவுகள்