கர்ப்பமாக இருக்கும்போது சினைப்பை கட்டி ஆபத்தா?

வணக்கம் தோழிகளே. எனக்கு இப்போது 6 வாரம் கர்ப்பம். எனக்கு 2 வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது. ஒரு வருடதிற்கு முன் இதற்கு முந்தைய கர்ப்பம் கருகுளாயில் தங்கி இடது கருக்குளாய் அகற்றி அறுவை சிகிச்சை செய்தார்கள். இப்போது மீண்டும் நான் கர்ப்பமாக இருக்கிறேன். நேற்று டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தை சரியான இடத்தில் இருப்பதாகவும் இடது சூலகதில் 42mm அளவில் கட்டி இருப்பதாகவும் doctor சொன்னார். இது வளருமா. என் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா. சொல்லுங்க பிளீஸ்

சூலகத்தில் உள்ள கட்டி வளருமா அல்லவா என்பதை நாம் சொல்ல முடியாது. அது வளர்ந்தாலும் கருப்பைக்குச் சமீபமாக வரப்போவது இல்லை. நிச்சயம் கருப்பைக்குள் வராது. குழந்தைக்கு இதனால் பிரச்சினை வராது. யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அக்கா

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

மேலும் சில பதிவுகள்