மில்க் புட்டிங்

தேதி: March 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

மில்க்மெய்ட் - 1/2 டின்
பசும்பால் - 3/4 டின்
முட்டை - 3
சீனி - 4 கரண்டி
வெனிலா எசன்ஸ் - 3 துளி
கேசரிபவுடர் - 1 சிட்டிகை
குங்குமப்பூ - 1 சிட்டிகை


 

முதலில் முட்டையை நன்கு அடித்துக் கலக்கவும். அதில் டின் பாலை ஊற்றி முட்டையுடன் சேர்த்து கலக்கவும்.
பின் காய்ச்சிய பால் எசன்ஸ் கலர் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு அகலமான தட்டில் சீனியை போட்டு அடுப்பை பற்ற வைத்து தட்டை சுற்றிலும் காட்டினால் சீனி உருகி கேரமல் ஆகும் உடனே அடுப்பை நிறுத்தவும். தட்டில் எல்லா பக்கத்திலும் கேரமலை படரவிட்டு முட்டை கலவையை அதில் ஊற்றவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை பாகம் தண்ணீர் ஊற்றி அதில் தட்டை வைத்து மூடியை போட்டு வேகவிடவும் 20 நிமிடம் கழித்து பார்த்தால் மேலே வெந்து உப்பினால் போல் வரும் அதில் குங்குமப்பூவை மேலே தூவி ஆறியதும் துண்டுகள் போட்டு கேரமல் மேலே வரும் போல் வைத்து தட்டில் அலங்கரித்தால் நன்றாக இருக்கும்.


சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கொஞ்சம் முன்னர்தான் சமைத்து ரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு வந்து கமண்ட் போடுகிறேன். :-) அருமை இந்தக் குறிப்பு. படம் ஃபேஸ்புக் க்ரூப்பில் வரும்.

‍- இமா க்றிஸ்

இந்தக் குறிப்பைப் பார்த்துச் செய்த மில்க் புட்டிங் இங்கே... http://www.arusuvai.com/tamil/node/30378 மிக்க நன்றி. :-)

‍- இமா க்றிஸ்