Kulandhai thookam

Hi sisters...
Enaku kulandhai pirandhu 6 natkal aagiradhu.. Thursday mrng 8.50ku delivery anadhu... I got boy baby... But en paiyan 6 days ah day & night thoongite irukan.. pasicha alugiran... Thaaipaal kodutha kudichutu thoongidara.. motion & urine Pona alaran.. nyt la konja neram Kan vizhichu pakran... Matha time lam thoongite irukan... Idhula edhavadhu prblm iruka.. Ila idhu usual dhana... Pirakum podhu weight lam normal weight dhan.. please gv ur valuable comments

இது நார்மல் தான்.. குழந்தை பிறந்த புதிதில் 18 முதல் 22 மணி நேரம் தூங்க வேண்டும்.. அதிலும் அடிக்கும் வெயிலில் குழந்தை எழுவது மிகவும் கஷ்டம்.. நீங்களாக அப்போ அப்போ தூக்கி பால் கொடுங்கள்.. போக போக தூங்கும் நேரம் குறையும்..
குழந்தை நன்கு தூங்கினால் மூளை நன்றாக வளரும்.. நீங்கள் இப்பொழுது நன்றாக ஓய்வு எடுத்து கொள்ளலாம்..

ஏற்கனவே இந்து பதில் சொல்லிட்டாங்க. குழந்தை வயிற்றுள் இருக்கும் போது இரவு, பகல் / இருள், வெளிச்சம் எல்லாம் இருந்திராது இல்லையா! வெளியே வந்ததும் உலகம் இப்படித்தான் என்று புரியாது. மெதுமெதுவே தான் சரியாகுவாங்க. தூங்குறது பிரச்சினை இல்லை. நேரம் குறிச்சு வைச்சு எழுப்பி பால் கொடுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்